முல்லைப் பெரியாறு – ராணுவத்திடம் ஒப்படைக்க
டாக்டர் கலாம் கூறும் யோசனை …ராகுல் ஏற்பாரா ?
இன்று அதிகாரபூர்வமற்ற ஒரு செய்தி
வெளியாகி உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை காரணமாக தமிழ் நாடு-
கேரளா ஆகிய இரு மாநிலங்களிடையே உறவு
சீர்கெட்டு, சின்னாபின்னமாகி, மாநில எல்லைகளில்
கலவர நிலை ஏற்பட்டும் மத்திய அரசு
துரும்பைக் கூட கிள்ளிப்போடாத இந்த நிலையில் –
டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் பிரதமர் மன்மோகன்
சிங்கிற்கு சில ஆலோசனைகள் கூறி ஒரு கடிதம்
எழுதி இருப்பதாக (அல்லது எழுத இருப்பதாக )-
இன்று அதிகாரபூர்வம் இல்லாத
ஒரு செய்தி வெளியாகி உள்ளது.
அதில் காணும் முக்கிய விஷயங்கள் –
1) இந்தியாவின் அனைத்து நதிகளும்,
ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளும்,
புதிதாகக் கட்டப்படும் அணைகளும்
தேசிய மயமாக்கப்பட்டு ராணுவத்தின் பொறுப்பில்
ஒப்படைக்கப்பட வேண்டும்.
2) உலகத்தில் ஏற்கெனவே(அமெரிக்கா உட்பட )
பல நாடுகளில் அணைகள் ராணுவத்தின் பொறுப்பில்
தான் இருக்கின்றன.
அதே போல் இந்தியாவிலும், இனி புதிதாக
அணைகளை கட்டும் பொறுப்பையும்,
அவற்றை நிர்வாகம் (மெயின்டெனன்ஸ்) செய்யும்
பொறுப்பையும், ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
3) நதிகளை இணைக்கும் தேசிய திட்டம் உடனடியாக
துவங்கப்பட வேண்டும்.
4) முல்லைப் பெரியாறில் புதிய அணை எதுவும் கட்டாமல்,
இன்னொரு பக்கம் பாதுகாப்பு சுவரை மட்டும்162 அடி
உயரத்திற்கு எழுப்பி, அதன் மூலம்
பாதுகாப்பையும் பலப்படுத்தி
கிடைக்கக்கூடிய கூடுதல் மின்சாரத்தை கேரளாவிற்கும் –
தண்ணீரை தமிழ் நாட்டிற்கும் தந்து பிரச்சினையை
இருவருக்கும் பொதுவாக தீர்க்கலாம்.
இந்த யோசனையை தமிழ் நாடு முழு மனதுடன்
வரவேற்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஆனால் –இந்த யோசனையின் முழு விவரங்களும் இன்னும்
அதிகாரபூர்வமாக வெளிவராத இந்த நிலையிலேயே –
கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி விட்டது.
அதுமட்டுமல்ல. ஏற்கெனவே இளவரசர் ராகுல் காந்தி
நதிகளை இணைத்தால், நில அதிர்ச்சி ஏற்படும்
என்று எக்ஸ்பர்ட் ஒபினீயன் கொடுத்திருக்கும் நிலையில்
இந்த யோசனைகள் மத்திய அரசால் எந்த அளவிற்கு
வரவேற்கப்படும் என்பது ஊகிக்கக்கூடியதே.
எனவே – இந்த யோசனை நிறைவேறக்கூடிய
வாய்ப்புகள் எள்ளளவும் இல்லை என்பது நமக்கு
இப்போதே தெரிந்தாலும் –
நாம் அவசியம் இதை வரவேற்போம்.
குறைந்த பட்சம் -அது,
பிரச்சினையைத் தீர்க்க மனமில்லாத கேரள அரசு,
செயல் படாத மத்திய அரசு மற்றும்
தூண்டி விடும் காங்கிரஸ் கட்சியின்
நிலையை அப்பட்டமாக
வெளிப்படுத்தும் அளவிற்காவது உதவும் அல்லவா ?



Great Idea form our honable Leader Abdul kalam,,but the central should follow his thoughts to make the brighten India
Jai Hind
“Enough is enough”-மன்மோகன்சிங் சீற்றம்!
முல்லை பெரியாறு விவகாரத்தில் அப்துல்கலாம் சொல்வதை ஏற்று ராணுவத்தை அங்கு அனுப்பலாம் என பிரதமர் முடிவு செய்ததாகவும் ஆனால் அதை சோனியாவும் ராகுலும் விரும்பாததால் கோபம கொண்ட பிரதமர் சோனியாவை பார்த்து சீறியதாக கேள்விப்படுகிறோம்.மேலும் யார் என்ன சொன்னாலும் கேட்கப்போவதில்லை ராணுவம் அங்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் என அறிகிறோம்.மேலும் அவர் தயாநிதி மாறனை இன்னும் ஒரு வாரத்திற்குள் கைது செய்ய வேண்டும் என்றும் CBI க்கு உத்தரவிட்டதாகவும் தெரிகிறது.
===
மேற்கண்டது நிச்சயமாக நடக்கவில்லை நடக்காது என நமக்கு தெரிந்த போதிலும் நடந்தால் எப்படி இருக்கும் என நம்மை நாமே ஆறுதல் படுத்த ஒரு கற்பனை!!
COMEDY……………\\\\\\\\page@adaa padaaaaaaaaaaaa comedy………???????!!!!!!!!!!!!!!!!!!!
அப்படி நடக்கும் பட்ச்சத்தில் ராணுவ மந்திரியாக இருக்கும் அந்தோணியை தூக்கி விட்டு வேறு ஒருவரை ராணுவத்துக்கு பொறுப்பான அமைச்சராக போட வேண்டும். எந்த மலையாளியையும் நம்ப தயாராக இல்லை.
padhivu nandru
surendra