விமான நிலைய செக்யூரிடி தொட முடியாத நபர் – யார் இந்த விஐபி ?

விமான நிலைய செக்யூரிடி  
தொட முடியாத நபர் –
யார் இந்த விஐபி ?

விமான நிலையங்களில் அனைவரையும்
பரிசோதிக்கும் செக்யூரிடி  செக்கப்
(frisking)  இவருக்கு கிடையாது.

எந்தவித செக்யூரிடி பரிசோதனைகளும் இன்றி  
இந்தியாவின் எந்த விமான நிலையத்திற்கு
உள்ளே போகவும், வெளியே வரவும்
விசேஷ அனுமதி பெற்றவர்.

மத்திய அரசின் விசேஷ உத்திரவு ஒன்று –
ஜனாதிபதி, பிரதம மந்திரி, சுப்ரீம்
கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோருக்கு
 இணையாக இந்த  நபரையும்  செக்யூரிடி
பரிசோதனையிலிருந்து
விலக்கு அளித்திருக்கிறது.

அவ்வளவு விசேஷமான இந்த நபர் யார் ?

குறுகிய காலத்தில்,மிகப்பெரிய செல்வந்தர்
ஆகி இருப்பவர்.

“இப்போதைக்கு நான் அரசியலில்
இல்லை. என்றாலும், அரசியலுக்கு
வரவேண்டும் என்று நினைத்தால்,
எப்போது வேண்டுமானாலும்,
எந்த தொகுதியில் வேண்டுமானாலும்,
தேர்தலில் நின்று சுலபமாக ஜெயிக்க
என்னால் முடியும்” என்று அண்மையில்
ஒரு பத்திரிகைப் பேட்டியில்
சொல்லி இருப்பவர்.

எல்லாம் உங்களுக்கு பரிச்சயம்
ஆனவர் தான். புகைப்படங்களை
பார்த்தால் புரிந்து கொள்வீர்கள் !

விஷயத்திற்கு உள்ளே போகும் முன் –
அவரது விதம் விதமான புகைப்படங்களை
முதலில் பார்த்து ரசிக்கலாமே !

ஹீரோவா ? வில்லனா ?


இதுவரை  தெரியவில்லை என்றாலும் –
இப்போது நிச்சயம் புரியும் !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to விமான நிலைய செக்யூரிடி தொட முடியாத நபர் – யார் இந்த விஐபி ?

  1. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    ராபர்ட் வட்ரா… திருவாளர் பிரியங்கா காந்திக்கு இப்படி ஒரு விதிவிலக்கா?! விளங்கிடும்!

  2. rajasekhar.p's avatar rajasekhar.p சொல்கிறார்:

    சரியாக சொன்னீர்கள் எழில் ………….மேலும் தகவல்களுக்கு…….

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் ராஜசேகர்,

      கொஞ்சம் ஸஸ்பென்ஸ் வெச்சு
      பின்னணி எல்லாம் கொடுத்து
      விவரமா எழுதலாம்னு பாத்தா
      அவசர அவசரமா
      ஒடைக்கறீங்களே நண்பரே !

      வருகிறேன் நண்பரே – நானே விவரமாக…

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  3. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    தகவலுக்கு நன்றி ராஜசேகர்… நீங்கள் கொடுத்த லிங்க் மற்றும் சில தேடுதலுக்கு பின் ஒரு விடயம் கவனித்தேன்.. சோனியா திருமணமாகி வந்தவுடன் தான் இந்திரா காந்தி குடும்பத்தில் பல அகால மரணங்கள் நிகழ்ந்தன. பிரியங்கா திருமணமாகி போனவுடன் வட்ரா குடும்பத்தில் பல அகால மரணங்கள் நிகழ்ந்தன. என்னவோ போங்க இப்ப ராபர்ட் வட்ராவ நெனச்சா பக்குண்ணுது!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் எழில்,

      அவசரப்பட்டு அதுக்குள்ள
      பயந்துட்டா எப்படி ?

      தொடர்ந்து முழு கட்டுரையையும்
      படிச்சூட்டு, மொத்தமா எல்லாரும்
      சேர்ந்து பயப்படலாமே !

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  4. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    இந்த ஆளை யாருன்னு எனக்குத் தெரியலை. கெஸ் பண்ணிப் பார்த்தேன் முடியல.. அப்புறம் இமேஜ் ஃபைல்நேம் வச்சுக் கண்டுபிடிச்சேன் பிரியங்கா கணவர்னு..!!

  5. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    ம்ம்ம்ம் ..இன்னும் முழுசா
    78 மாதங்கள்
    அதாவது
    936 நாட்கள்
    அதாவது
    22464 மணிநேரம்
    அதாவது
    1347840 நிமிடங்கள்
    அதாவது
    80870400 நொடிகள்
    காத்திருக்கணும்
    நம்மள பிடிச்ச,
    காங்கிரஸ் என்கிற
    உதவாக்கர,
    கொள்ளைக்கார,
    ஏழரை நாட்டு சனியன்கள்
    கூட்டம் விலக!

  6. orbraja's avatar orbraja சொல்கிறார்:

    புனே விமான நிலையத்தில் இருந்த அறிவிப்பை (ராபர்ட் வதேராவுக்கு விதிவிலக்கு) படித்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டது. அடுத்த நாள் அதை என் பஸ்ஸிலும் பகிர்ந்துகொண்டேன். நேருவுக்கு வாய்த்த இந்திய அடிமைகள் மிகவும் திறமைசாலிகள் ;((

  7. mubarak's avatar mubarak சொல்கிறார்:

    புனே விமான நிலையத்தில் இருந்த அறிவிப்பை (ராபர்ட் வதேராவுக்கு விதிவிலக்கு) படித்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டது. அடுத்த நாள் அதை என் பஸ்ஸிலும் பகிர்ந்துகொண்டேன். நேருவுக்கு வாய்த்த இந்திய அடிமைகள் மிகவும் திறமைசாலிகள் ;((

  8. G.Chidambaraganesan's avatar G.Chidambaraganesan சொல்கிறார்:

    இந்த சலுகை பற்றிய கருத்துப் பதிவைப் படித்ததும் எனக்கு ஏனோ
    அரசு மருத்துவமனையில் படுக்கை கூட இல்லாமல்
    வெறும் தரயில் அதுவும் வெளியில்படுத்திருந்த
    திரு.கக்கன் அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார்.
    நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் எல்லாம் நலிந்துபோக,
    உண்டுகொழுத்த பெருச்சாளிகள் எல்லாம் ஊர்வலம் வருகின்றன.
    தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
    கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.