ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் –
சொல்வது பிரனாப் முகர்ஜி ! சோனியாவின்
கோபத்திலிருந்து தப்ப முயற்சி !!
( பிரதமர் களை (!)
வந்து விட்டது போலிருக்கிறதே ! )
தன் மீது மிகுந்த அதிருப்தியில்
இருக்கும் சோனியா காந்தியின் கோபத்தில்
இருந்து தப்ப பிரனாப் முகர்ஜி தீவிரமாக
முயற்சித்து வருகிறார்.
விளைவு – இன்று மேற்கு வங்கத்தில்,
பிர்பும் மாவட்டத்தில் உள்ள தன் சொந்த
ஊரில் துர்கா பூஜையை கொண்டாடும்
பிரனாப் முகர்ஜி – எந்த வித
சம்பந்தமும் இல்லாமல் திடீரென்று –
ராகுல் காந்தியை அடுத்த பிரதமர்
ஆக்க வேண்டும் —
என்று யோசனை கூறி இருக்கிறார்.
இது வரை பிரனாப் முகர்ஜி இந்த
விஷயத்தை வெளிப்படையாகப் பேசுவதை
தவிர்த்து வந்தவர் !
பின் குறிப்பு –
காங்கிரஸ் மேலிடமும் இது குறித்து
புதிய கோணத்தில் யோசித்து வருவதாகத்
தோன்றுகிறது !
மக்களுடன் நெருங்கிப் பழகும் முயற்சியில்
ராகுல் காந்தி இன்று டெல்லியில்,
முதலில் மெட் ரோ ரயிலிலும்
பின்னர் டாக்சியிலும் பயணம் செய்திருக்கிறார்.
இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து
கொள்வதற்காக –
தன் வீட்டின் அருகே உள்ள, ரேஸ் கோர்ஸ் ரோடு
ஸ்டேஷனிலிருந்து – ரோஹிணி வெஸ்ட்
ஸ்டேஷன் வரை மெட் ரோ ரெயிலிலும்,
பின்னர் வெளியே வந்து மீட்டர் டாக்சி பிடித்து,
அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள
கூட்டம் நடைபெறும் இடமான –
ஜாபனீஸ் பார்க் வரை பயணம் சென்றிருக்கிறார்.
டாக்சி டிரைவருக்கு கட்டணமாக 200 ரூபாய்
கொடுத்திருக்கிறார் !
இந்த செய்தியை தொடர்ந்து
பிரபலப்படுத்திகொண்டே இருக்கும் மீடியா –
கூட வந்த கமாண்டோ
படையினர் எதில் வந்தனர், எப்படி
பயணம் செய்தனர் என்பது பற்றி எந்த
செய்தியும் வெளியிடவில்லை !
இத்தகைய அதிரடி செய்திகள்
தொடர்ந்து வந்தால் – அடுத்த தேர்தலுக்கு
முன்னரே கூட இளவரசருக்கு பட்டம்
சூட்டப்படலாம்.




ப.சி.தனக்கு தமிழக முதல்வர் ஆகும் நோக்கம் எதுவும் இல்லை என திட்டவட்டமாக காட்டிவிட்டார்.(தமிழக எல்லையில் பேண்ட்,டீ.ஷர்ட் அணிந்ததின் மூலம்)
மேலும் அவர் பிரதமராகாமல் பார்த்துக்கொள்ள தமிழினத்தலைவர்(ஒய்வு),தமிழினத்தாய்,தமிழக காங்கிரஸ் இருக்கின்றனர்.
பிரணாப் பிரதமராகும் வாய்ப்பு,விஜயகாந்த் முதல்வராகும் வாய்ப்பை விட குறைவு.
இன்னும் மூன்று வருடங்களுக்குத்தான் ராகு காலத்திற்கும்,பிரதமராகும் வாய்ப்பு.அதுவும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் தேய்ந்து வருகிறது.
எனவே மிகவிரைவில் எமகண்டம் போய் ராகு காலம் வரலாம்.
என்னது ராகுல் காந்தி பிரதரா? அது வேற ஒன்னும் இல்ல… இனி நம்ம இசுகூல் பையன் ராகுல் இரவு தூங்கும் போது(?), தலையணைக்கு அடியில் தனது அம்மாவின் செருப்பையும், கால் மாட்டில் விளக்க மாரையும் வைத்து படுக்க வேண்டும். அப்போது தான் ‘தான் பிரதமராகுவது’ போன்ற கெட்ட கனவுகள் எதுவும் வராது.