பிரதமர் ஆகி இருக்க வேண்டிய ப.சிதம்பரம் –
தேக்கடியில் ஓய்வு !! (வித்தியாசமான படங்களுடன்)
மன்மோகன் சிங் பதவி விலகுவது என்றும்
அவருக்கு பதிலாக, ப.சிதம்பரம் பிரதமராக
பொறுப்பு ஏற்பது என்றும் காங்கிரஸ் தலைமை
கிட்டத்தட்ட முடிவு செய்து விட்டது தெரிந்த
நிலையில் தான் பிரனாப் முகர்ஜி தன்னால்
இயன்றதை செய்து, திட்டத்தை கவிழ்த்தார்
என்று டெல்லியில் தற்போது செய்திகள் வலம்
வருகின்றன.
ப.சி. யை, சிபிஐ விசாரிக்க வேண்டும் என்கிற
கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தாலும்
கூட, ப.சிதம்பரம் பிரதமர் பொறுப்பு ஏற்பது
என்பது இப்போதைக்கு நடக்காத விஷயம்.
அந்த அளவிற்கு சூழ்நிலையில் மாற்றம்
ஏற்பட்டு விட்டது. அந்த அளவிற்கு வில்லன்
பிரனாப் முகர்ஜி வெற்றி பெற்று விட்டதாகவே
சொல்ல வேண்டும்.
ஆனால் – ஒரு விதத்தில், ப.சி. க்கு இது நன்மை
செய்திருக்கிறது. காங்கிரஸ் தலைமையுடன்
அவரது நெருக்கம் முன் எப்போதையுடன் விட
இப்போது மிகவும் வலுப்பட்டிருக்கிறது.
அவரது அரசியல் எதிர்காலத்திற்கு இது மிகவும்
உதவியாக இருக்கலாம் !
தன்னை புதுப்பித்துக்கொள்ள தேக்கடிக்கு
இரண்டு நாள் ஒய்வு/ சுற்றுலா வந்திருக்கிறார்
ப.சிதம்பரம். அங்கு வித்தியாசமான
தோற்றத்தில் புகைப்படங்கள் –





ஒரு நாள் முதல்வர் அர்ஜுனுக்கு பூனைப்படை காவல் இருந்து காப்பாற்றியது போல, சிதம்பரம் வலம் வருகிறாரு.
அட – ஓய்வுன்னா தனியா வரலையா – இவ்வளவு பேர் கூட வந்தா ஓய்வு எடுக்க இயலுமா ? சரி சரி – போட்டோ வித்தியாசமானதுதான்.
வருக நண்பர்களே,
இடுகையுடன் புகைப்படங்களை
இணைத்ததன் நோக்கம் – படிப்பவர்களுக்கு
பின்னணி சரியான கோணத்தில் விளங்கும்
என்பதே.
வித்தியாசமான “கெட்டப்”பில், பந்தா வாக
சுற்றுலா வருவதன் மூலம் – தான் இந்த
2ஜி ஊழல் தொடர்பு பற்றிய புகாரை
சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை
என்று காண்பித்துக் கொள்வதற்காக கூட
இருக்கலாம் !
டெல்லியில் வேட்டி சட்டை –
தமிழ் நாட்டில் பேண்ட், டீ ஷர்ட் !!
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்