சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி KGB – மாப்பிள்ளைகளின் மோசடிகள் …

சுப்ரீம் கோர்ட் முன்னாள்
தலைமை நீதிபதி KGB –
மாப்பிள்ளைகளின் மோசடிகள் …

சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி,
கேரளாவைச் சேர்ந்த –
கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்களை
மத்திய காங்கிரஸ் அரசு, மனித உரிமைகள்
ஆணையத்தின் தலைவராக (Chairman,
National Human Rights Commission)
நியமித்தது குறித்து
விமரிசனங்கள் எழுந்தது நினைவிருக்கலாம்.
பதவியைப் பயன்படுத்தி, அளவுக்கு மீறி
சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் இருந்தது.
சோனியா காந்தியால் தேர்வு செய்யப்பட்டவர்
இவர் என்பதால் – விமரிசனங்கள்
சட்டை செய்யப்படவில்லை.

சூடு,சொரணை  இருப்பவர்களாக இருந்தால்,
விமரிசனங்கள் எழுந்தபோதே ராஜினாமா
கொடுத்து விட்டுப் போயிருப்பார்கள்.

ஆனால் – இவரை நியமித்தவர்களுக்காக
இவர் முடித்துக் கொடுக்க வேண்டிய
கடமைகள் (?)
நிறைய இருக்கின்றனவே !
அவற்றை முடிக்காமல் போனால் –
இவருக்கு வேறு விதமான சிக்கல்கள்
ஏற்படலாம். எனவே இன்னும் பதவியில்
விசுவாசமாக இருக்கிறார்.

இவருக்கு இரண்டு மாப்பிள்ளைகள்.
பிவி ஸ்ரீநிஜன் & கேவி பென்னி.
இருவரும் கேரளாவில் இருக்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்த
வருமான வரி இலாகாவின் சோதனையில்
இவர்கள் இருவரும், அவர்கள் வாங்கிய
சொத்துக்களை
மதிப்பு குறைத்து காட்டிய வகையில்
அரசாங்கத்தை சுமார் 9 கோடி அளவிற்கு
ஏமாற்றி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

(இது சொத்தின் மதிப்பு அல்ல.
மதிப்பை குறைத்து காட்டிய வகையில்
அரசாங்கத்தை ஏமாற்றிய தொகை.
மொத்த சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு
என்பது வெளியிடப்படவில்லை !)

முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன்
பதவியை தவறாகப் பயன்படுத்தி இந்த
சொத்துகள் வாங்கப்பட்டிருக்கலாமோ என்று
விசாரணை நடந்து வருகிறது !

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள
மோசடிக்காக மட்டுமே,
வருமான வரி சட்டம்,பிரிவு 276(c)ன் படி,
2.7 கோடி ரூபாய் அபராதம் விதிப்பதுடன்,
3 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனையும்
கிடைக்கலாமாம்.

ஆனால் –  இவை எல்லாம் நடந்து விடும் என்று
யாரும் நினைத்து விட வேண்டாம்.

இதை எல்லாம் காட்டி, தங்களுக்கு வேண்டியதை,
தாங்கள் விரும்பும்  விதத்தில்  நடத்திக்
கொள்ளத்தானே அனைத்துமே நடக்கிறது !

எங்கெங்கு நோக்கினும் சக்தியடா –
“அன்னை”யின் சக்தியடா !!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி KGB – மாப்பிள்ளைகளின் மோசடிகள் …

  1. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    அன்பின் கா.மை,,

    மனிதர்களை, அவர்கள்
    பால்(gender) அடிப்படையில்,
    தோற்றத்தின் அடிப்படையில்,
    ஆரோக்கியத்தின் அடிப்படையில்,
    அறிவின் அடிப்படையில்,
    திறமையின் அடிப்படையில்,
    செல்வத்தின் அடிப்படையில்,
    குணத்தின் அடிப்படையில்,
    பாகுபாடு செய்ய முடியும்.
    இதைத்தவிர, மனிதர்களே உருவாக்கிய
    மதத்தின் அடிப்படையிலும்
    ஆன்மீக கொள்கையின் அடிப்படையிலும்(ஆத்திகன்,நாத்திகன்)
    பாகுபாடு செய்ய முடியும்.

    உலகின் மிக சக்தி வாய்ந்த கணினியைக்கொண்டு
    உலகின் மொத்த ஜனத்தொகையான 700 கோடி பேரையும்
    இவ்வாறு பாகுபாடு செய்வதாக வைத்துக்கொள்வோம்

    இது 0 முதல் 9 வரை மதிப்பெண் கொடுக்கும் முறையில்…..

    அதாவது மிகுந்த தோற்றப்பொலிவுள்ளவர் 9 மதிப்பெண்ணும்,குரூபி 0 மதிப்பெண்ணும் பெறுவர்

    நல்ல ஆரோக்கியசாலி 9 மதிப்பெண்ணும்,நோயாளி 0 மதிப்பெண்ணும் பெறுவர்..

    என்ன முடித்தாகி விட்டதா..

    இப்போழுது மற்ற எல்லா பாகுபாட்டையும் ஓரமாக வைத்து விடுங்கள்.குணத்தின் ஸ்கோர் ஷீட் மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்

    இதில் 3 மதிப்பெண்ணிற்கு கீழ் பெற்றுள்ளோர் அனைவரையும் ஆயுள் தண்டனை கொடுத்து உள்ளே தள்ளுங்கள்.

    4 முதல் 7 வரை பெற்றுள்ளோரை கூப்பிட்டு எச்சரித்து சுதநதிரமாக விட்டு விடுங்கள்.ஆனால் அவர்கள் போக்கை தொடர்ந்து கண்காணியுங்கள்.

    மீதி பேர் அனைவரையும் சுதநதிரமாக விட்டு விடுங்கள்
    .
    அவ்வளவுதான்!இந்த உலகமே ஒரு சுவர்க்கம் ஆகிவிடும்.

    நீதி: இந்த உலகின் அனைத்துப்ப்ரச்சினக்கும் மூல காரணம் துற்குணசாலிகளே!

  2. M.S.Vasan's avatar M.S.Vasan சொல்கிறார்:

    121 கோடி ம‌க்க‌ள் வாழும் இந்திய‌ நாட்டில், சோனியாவால் பெரிய‌ பொறுப்புக‌ளுக்கு
    ஏன், மோச‌டி பேர்க‌ளையே நிய‌மிக்கிறார், ம‌னித‌ உரிமைக்குழு த‌லைவ‌ர் முந்நாள் உச்ச‌நீதி ம‌ன்ற நீதிப‌தி திரு ஜி.பால‌ கிருஷ்ண‌ன்,சிவிசிக்கு உச்ச‌நீதி ம‌ன்ற‌த்தால் வில‌க்க‌ப்ப‌ட்ட‌ திரு பிஜே தாம‌ஸ், காம‌ன் வெல்த் விளையாட்டுக்கு திரு க‌ல்மாடி, உள்துறை அமைச்ச‌ராக ப‌ சித‌ம்ப‌ர‌ம்,
    விவ‌சாயதுறைக்கு ல‌வாசா ச‌ர‌த்ப‌வார், தொழிற்துறைக்கு விமான முழுங்கி பிர‌புல் ப‌டேல், ஆ ராஜா, க‌லாநிதி மாற‌ன், ந‌ம்ப‌ர் ஒன் போஸ்டுக்கு சோனியாவுக்கு காபி போட்டுத்த‌ந்த‌வ‌ர், நல்ல‌ ப‌த‌விடா சாமி. இனம் இன‌த்தோடு. விடு அத்தோடும்பாங்க‌.ந‌ட‌க்க‌ட்டும். காலம் காத்துக் கொண்டிருக்கிற‌து அத‌ன் க‌ண‌க்கோடு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.