மீதி எல்லாம் புரிகிறது –
இதில் ராஜா யார் ? அதை மட்டும்
சொல்லி விடுங்களேன் பார்த்திபன் !
இன்றைய செய்தி –
—————–
காதல் சொல்ல வந்தேன் படத்தின்
பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை
சத்யம் தியேட்டரில் நடந்தது.
இந்த விழாவில்
நடிகர் -டைரக்டர் பார்த்திபன் பேசியது –
“இன்றைய சூழ்நிலையில்,
சாமான்யன் படம் தயாரிக்க முடியாத
நிலை ஏற்பட்டு இருக்கிறது. படம்
தயாரிப்பவர் ராஜாவாக இருக்க
வேண்டும். அல்லது மந்திரியாக
இருக்க வேண்டும்.
ராஜாவும்,
மந்திரியும்தான் படம் தயாரிக்க
முடியும். மந்திரி படம் தயாரித்தால் கூட,
அதை ரிலீஸ் செய்வதற்கு ராஜா
தேவைப்படுகிறார்.
காடு என்று இருந்தால், வெறும்
சிங்கமும், புலியும் மட்டும் போதும்
என்று நினைக்கக்கூடாது.
சிங்கம் புலியுடன் மான்களும்,
மயில்களும் இருந்தால்தான் அது காடு.
திருட்டு வி.சி.டி. சில படங்களுக்கு
மட்டும் வருவதில்லை.
குறிப்பிட்ட படங்களுக்கு மட்டுமே
திருட்டு வி.சி.டி. வராதது,
வருத்தத்துக்குரிய விஷயம்.”
(திருட்டு விசிடி வரவில்லையே
என்று வருத்தம் ! )
——————-
இதில் மீதி எல்லாம் புரிகிறது –
ராஜா யார் என்பதை மட்டும்
சொல்லி விடுங்களேன் பார்த்திபன் –
ப்ளீஸ் !




நிஜமான சாமியாரா இல்லை ….