கே”ளீ” ர் அல்ல கே”ளி”ர் –
தமிழில் எப்படித் தவறினார் கலைஞர் ?

செம்மொழி மாநாட்டை விளம்பரப்படுத்த
வெளியிடப்பட்டுள்ள “செம்மொழியான
தமிழ் மொழியாம்” பாடலுக்கு ஏ.ஆர். ரகுமான்
இசை அமைத்துள்ளார்.
பாடல் மெட்டும், இசையமைப்பும்
மிகவும் நன்றாக இருந்தாலும் –
செம்மொழி தமிழுக்கான மெட்டு என்னும்போது
பொருத்தமாக இல்லை.
ஆனால் நான் சொல்ல வருவது
அதைப்பற்றி அல்ல –
இந்தப் பாடலை எழுதி இருப்பது கலைஞர்.
பாடலை ரகுமான் கூடவே இருந்து ஒலிப்பதிவு
செய்து பெற்றவர் கவிஞர் கனிமொழி.
இந்தப்பாடலில் “யாதும் ஊரே -யாவரும் கேளிர்”
என்ற வரியை ரகுமானே பாடி உள்ளார்.
இதில் “கேளிர்” என்கிற வார்த்தையை
“கே”ளீ”ர் என்று இழுத்து அழுத்தமாகப் பாடி
இருக்கிறார்.
இரண்டும் வெவ்வேறு பொருளைத் தரும்
வார்த்தைகள்.
யாவரும் கேளிர் என்றால்-
எல்லாரும் உறவினர் என்று பொருள்.
யாவரும் கே”ளீ”ர் என்றால் –
எல்லாரும் கேளுங்கள் என்று பொருள்படும்.
ரகுமான் ஆங்கில வழியில்( மீடியத்தில்)
படித்தவர். அவருக்கு அந்த வார்த்தையை
நீட்டிப் பாடினால் வேறு பொருள் வரும் என்பது
தெரியாமல் இருக்கலாம்.
ஆனால் கூடவே இருந்த கவிஞர் கனிமொழி
எப்படித் தவறினார் ?
இந்தப் பாடலையும், அதன் ஒளிப்பதிவையும்
கலைஞரும் பல முறை பார்த்து சரி சொல்லி
இருக்கிறார்.எப்படி ?
அர்த்தம் தெரிந்தவர்களுக்கு இது
உறுத்தலாகவே இருக்கிறது.
எப்படித் தவறினார் கலைஞர் ?
காலம் இன்னும் கடக்கவில்லை.
மாநாட்டில் ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள்
முன்னிலையில் இந்த தவறு தொடரும்
முன்னர் சரி செய்யப்படுவது நல்லது.
கௌரவம் பார்க்காமல் செய்வார்களா ?



தொல்காபியதிற்க்கு உரை எழுதியவர் ,முத்தமிழ் அறிஞர் ,தமிழவேள் ,தமிழினக்காவலர் கலைஞருக்குத் தமிழில் தெரியாதது ஏதும் இல்லை .அவர் கருத்திற்கு மாறுபட்டு இருந்தால் அது தமிழே இல்லை .
தமிழ் வாழ்க !கழகம் வாழ்க !
தமிழ் தட்டச்சு எனக்குப்ப்திது .பிழை பொறுக்க.