மதன் கேள்வி – பதில்

                                                                 

                   மதன்  கேள்வி – பதில்   !          

      –   ஒரு  பார்வை !!

   மதன் கேள்வி பதில் பகுதியின் முக்கிய நோக்கம் – வெளிப்படையாக  தெரிவது – மதன் அவர்களின்  புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதும், கேள்வி -பதில்  பகுதியை சுவையானதாக  ஆக்குவதும் தான்.

ஒரு எழுத்தாளர்  என்கிற முறையில்  இது சரியானதாக  இருக்கலாம். 

ஆனால்  வாசகர்களை   முட்டாள்கள் அல்லது  திண்ணைப்பள்ளிக்கூட சிறுவர்கள்  என்ற நிலையில்   வைத்து  பதில் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.

மதனுக்கு நிறைய புத்தகங்களை – மற்ற சாதாரண வாசகர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லாத புத்தகங்களை –

படிக்கக்கூடிய வாய்ப்பும்  வசதியும் சூழ்நிலையும் சுலபமாக கிடைக்கிறது. அவ்வப்போது  அவர்  படித்துக்கொண்டிருக்கும்  புத்தகங்களுக்கு  ஏற்ப  அவர் கேள்விகளை  அமைத்துக்கொள்வதை     (பல சமயங்களில் கற்பனையாகவும்  ! )  கூர்ந்து  கவனிப்பவர்களால்  புரிந்து கொள்ள முடியும் !

அண்மையில் வந்த ஒரு கேள்வி பதிலை பாருங்கள் –

 

கேள்வி -வாய் இல்லாப் பிராணிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்திய சம்பவம் முன்பு எப்போதாவது நிகழ்ந்தது உண்டா ?

பதில் – ஒரு  சிறுவன் மீது பெரிய பன்றி ஒன்று பாய்ந்து கடித்து குதறிவிட்டது. பையன் செத்துப்போனான்.பன்றி மீது  கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட்டில் நீதிபதி அதற்கு தூக்கு தண்டனை விதித்தார்.    இது நடந்தது, பிரான்ஸில். 1386-ம் ஆண்டு! 

 

  –   14-ம்  நூற்றாண்டில்,  அதுவும் பிரான்ஸில், குழந்தையை கொன்ற  பன்றியை உடனே  அடித்துக்கொல்லாமல்,  

கைது செய்து,  வழக்குப்போட்டு,  கோர்ட்டுக்கு   அழைத்துப்போய், வாதாடி  தண்டனை – அதுவும் தூக்கு தண்டனை ( பன்றிக்கு தூக்கு தண்டனை ! )

பெற்றுக் கொடுத்தார்களாம்.

மதனின்  கேள்வி  பதில்  பகுதியில்  சில  சமயங்களில் அறிவுபூர்வமான – சாதாரணமாக  நம்  பார்வைக்கு   கிடைக்காத –  செய்திகள் கிடைத்தாலும்,   பல   சமயங்களில் அவர்   வாசகர்களை  முட்டாள்களாக கருதும் போக்கு

வெளிப்படையாகவே  தெரிகிறது. 

மதன்  –   வாசகர்கள்   பற்றிய –  தன் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்வது – அவரைப்பற்றைய ந்ம்     எண்ணத்தை

மாற்றிக்கொள்ள உதவும் !!

Unknown's avatar

About yatrigan

தமிழ், இலக்கியம், சமூகம், அரசியல் பற்றிய் எண்ணங்களை பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன்.
This entry was posted in Uncategorized and tagged , , , , . Bookmark the permalink.

2 Responses to மதன் கேள்வி – பதில்

  1. கே. ஜி. ஜவர்லால்'s avatar Jawahar சொல்கிறார்:

    தன்னை புத்திசாலி என்று காட்டிக் கொள்ளும் ஆர்வம் எல்லாப் படைப்பாளிகளுக்குமே பொதுவானது. ஆனால் நீங்கள் சொல்வது போல படித்ததை எல்லாம் கக்குகிற எழுத்துக்கள் வாசகர்களின் அதிருப்தியை சம்பாதிக்கும் என்பது நிஜம்தான்.

    http://kgjawarlal.wordpress.com

  2. Karthick Raja Gtm's avatar Karthick Raja Gtm சொல்கிறார்:

    பழுத்தமரம் கல்லடி படத்தான் செய்யும்..
    தேவையானதை எடுத்துக்கொள்ளுங்கள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.