….
….

….
அம்ரித்சர் “பொற்கோயி”லுக்கு நேரில் சென்றால்
மன நிம்மதி தரும் ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும்.
அப்படி நேரில் போக முடியாதவர்கள் இந்த காணொலியைப்
பாருங்கள்… நிறைய தெரிந்து கொள்ளலாம்…
இங்கு ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் பேருக்கு உணவு
இலவசமாக அளிக்கப்படுகிறது.
இதன் சமையலறைக்கு “லங்கர்” என்று பெயர்.
இங்கு எவ்வளவு பேர் பணிபுரிகிறார்கள் என்பதை வீடியோவில்
காணப்போகிறீர்கள்…
அத்தனை பேரும் வாலண்டியர்கள்…
அதாவது பக்தர்-தொண்டர்கள்.
இலவசமாக தாமாகவே முன்வந்து இங்கு பணி செய்பவர்கள்.
இங்கு சமையலுக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் –
நன்கொடையாக இங்கு வந்துசேருகின்றன….
எந்த ஜாதி, எந்த மதத்தை – சேர்ந்தவர்களும் இங்கு போகலாம்.
கோவிலுக்கு உள்ளே போக ஒரே ஒரு கண்டிஷன் தான்…
அவர்களின் தலை, துணியால் மூடப்பட்டிருக்க வேண்டும்.
அவ்வளவே…
…..
இது கோயில் குறித்த காணொலி-
….
இது 24 மணி நேர லங்கர்… (உணவுக்கூடம்)
….
சீக்கிய குரு நானக்ஜி அவர்களின் 550-வது ஆண்டு
விழாவையொட்டி சதீந்தர் சர்த்ராஜ், ஆர்த்தி என்று
சொல்லப்படும் உருக்கமான பிரார்த்தனைப்பாடலை பாடும்
காணொலி ஒன்று கீழே …
கொஞ்சம் பெரிது 17 நிமிடங்கள் ஓடும்..
ஆர்வம் இருப்பவர்கள் கொஞ்ச நேரம் பார்க்கலாம்….
…..
…..
.
————————————————————————————————————————————-



இங்கு மட்டுமல்ல (பொற்கோவில் சீக்கியர்களின் திருப்பதி equivalent) எல்லா குருத்வாராக்களிலும், குறைந்த பட்சம் ஒரு வேளை உணவாவது கிடைக்கும். அன்னதானம் செய்வதில் சீக்கியர்கள் தனி இடத்தைப் பெறுகின்றனர். மதத்திற்குக் கட்டுப்பட்டு அனேகமாக அனைவருமே நடந்துகொள்கின்றனர். சீக்கிய கமிட்டி, தவறு செய்பவர்களுக்கு தண்டனை கொடுத்தால் அதனையும் மனமுவந்து ஏற்றுக் கொள்கின்றனர் (தண்டனை-சமையல் கூடத்தில் பணிபுரிவது, வரும் பக்தர்களின் செருப்பைத் துடைத்துக்கொடுப்பது, இடத்தைச் சுத்தம் செய்வது, காவல் புரிவது போன்று பலவிதம்)
Automated Roti – கருகுவதைச் சரி செய்யணும்.