….
….

….
“காற்று வெளியிடை கண்ணம்மா ….”
புரட்சிக்கவி பாரதியின் இந்தப் பாடலை எத்தனையோ
இசைக்கலைஞர்கள் இதுவரை பாடி விட்டார்கள்.
நாமும் எவ்வளவோ முறை கேட்டு விட்டோம்….
ஆனால், இன்னமும் அலுக்கவில்லை…
இந்தப்பாடல் “கப்பலோட்டிய தமிழன்” படத்தில்
இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் அவர்களின்
இசையமைப்பில் வெளிவந்தபோது
மிகவும் பிரபலமானது….
இப்போது லேடஸ்டாக பிரபல இசைக்கலைஞர்
உன்னிகிருஷ்ணனின் மகள் உத்தராவும்,
மகன் கிருஷ்ணாவும் சேர்ந்து பாடிய வீடியோ
ஒன்றைப் பார்த்தேன்…. அற்புதம்…
முக்கியமாக பெண்குரல் பாடவேண்டிய இடங்கள்
எல்லாம் கொஞ்சம் குழைவுடன் அமைய வேண்டும்.
மிகச்சிறப்பாக செய்திருக்கிறார் அந்த சின்னப்பெண்.
உன்னிகிருஷ்ணன் – அதிருஷ்டக்காரர்… கெட்டிக்காரர்;
தன் வாரிசுகளை நல்லபடி உருவாக்கி இருக்கிறார்.
அந்த இளம் கலைஞர்களுக்கு நமது உளமார்ந்த
வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு,
அந்தப்பாடலையும்
நமது விமரிசனம் தளத்தில் அரங்கேற்றுவோம்.
….
….
.
—————————————————————————————————————————————–



நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…