திருமதி சசிகலா ரிலீசில் பாஜக காட்டும் ஆர்வம் ….?


திருமதி சசிகலா நடராஜனை தண்டனைக்காலம் முடியும்
முன்னரே விடுவிப்பதில் பாஜக தலைமை மிகவும்
ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது…

தமிழகத்தில் அட்ரசே இல்லாத,
ஆனால், பாஜக தலைமைக்கு அருகாமையில் இடம்
பிடித்துள்ள திருவாளர் ஆசீர் வாதம் ஆச்சாரி அவர்கள் –

எல்லாரையும் முந்திக்கொண்டு, திருமதி சசிகலா நடராஜன்
சிறையிலிருந்து விடுவிக்கப்படும் நாளை அறிவிக்கிறார்.
அதுவும் அடுத்த செய்திக்கு காத்திருங்கள் என்று வேறு
ஆவலைத் தூண்டுகிறார்.

….

….

கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
சிறைச்சாலை நிர்வாகம் மாநில அரசின் கைகளில் இருக்கிறது.
எனவே அரசு தரப்பிலிருந்து ஆசீர்வாதம் ஆச்சாரிக்கு
ஏதேனும் தகவல் கிடைத்து இருக்கக்கூடும் என்ற பேச்சு
வேறு அடிபடுகிறது.

திருமதி சசிகலா குடும்பத்தினரை,
பாஜகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்
ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் –

” மாஃபியா கும்பல்”

-என்று துக்ளக் வார இதழில் தலையங்கமே எழுதியது
எல்லார் நினைவிலும் இன்னமும்
பசுமையாக இருக்கிறதே…

இந்த ஆசீர்- வாதத்தின் நிலையை, ஆடிட்டர் சாரும்
வரவேற்கிறாரா…?

ஆசீர்-வாதத்தின் முயற்சிகளுக்கு,
ஆடிட்டர் சாரின் – ஆசிர்வாதமும் உண்டா… ?

“மாஃபியா” கும்பலுக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில்
அவருக்கும் பங்கு உண்டா .. ?

.
—————————————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

22 Responses to திருமதி சசிகலா ரிலீசில் பாஜக காட்டும் ஆர்வம் ….?

  1. natchander's avatar natchander சொல்கிறார்:

    BJP WILL BE DIGGING ITS OWN GRAVE ,,IF THEY SUPPORT SASIKALA !!
    TAMIL NADU PEOPLE DISLIKE SASIKALA !!!
    THEY HOEEVER BELIEVE THAT JAYA HAD LEFT THE WORLD EARLY ONLY BECAUSE OF SASIKALA,
    SO,!!
    BJP WILL AGAIN BITE THE DUST,, WILL L9SE DEPOSIT IN 234 SEATS
    SIMPLE BRO !!

  2. Jksmraja's avatar Jksmraja சொல்கிறார்:

    KM sir,

    ராஜிவ் காந்தி ஆட்சி காலத்தில் செயல்பட்ட ராம்நாத் கோயங்கா, அருண்சோரி குருமூர்த்தி கூட்டணியை இன்னமும் மனதில் நிறுத்தி நீங்கள் அவ்வப்போது எழுதுகிறீர்கள்.

    ராஜிவ் காந்தி மரணத்துடன் அந்த குருமூர்த்தியும் மரணித்துவிட்டார். இப்பொழுது இருப்பது முழுக்க முழுக்க சுயநலன்பிடித்த தான் என்ற கர்வம் பிடித்த ஒரு மனிதன். அவ்வளவே

  3. comman-man's avatar comman-man சொல்கிறார்:

    இன்று தமிழகத்தின் அரசியலில் மிக பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
    அதிமுக முற்றிலும் வலிமை இழந்து, கடைசியில் எதிர் கட்சி மட்டுமே பலமான நிலையில் உள்ளதாகவே படுகிறது. இந்நிலையில் நாளை தேர்தல் நடந்தால் பலமாக உள்ள அந்த எதிர் கட்சியே, தட்டி கேட்க எந்த எதிர் கட்சியும் இல்லாத நிலையில் , பலமாக தமிழ் நாட்டை ஆளும் நிலை ஏற்படலாம். இது எந்த நிலையிலும் மிக மிக ஆபத்தானது.
    சசிகலாவை நாம் முழுக்க எதிர்த்தாலும், நாளை அவர் அதிமுகவிற்கு தலைமை ஏற்றால் , அக்கட்சி நிச்சயம் பலம் பெரும்.
    ஜெயலலிதாவும் தனது தொடக்க காலங்களில் பல தவறுகளை இழைத்தவர் தான்.அவரும் ஊழல் வாதி தான். அவர் முதல் முதலில் பதவி ஏற்ற பொழுது , அவர் நிகழ்த்திய பிரச்சினைகளையும், அராஜகங்களை கண்டு நாம் எல்லோரும் கொதித்திருக்கிறோம் என்பதை நாம் மறந்து விட்டோம்.ஆனால் அதற்க்கு பிறகு ஏற்பட்ட கடுமையான தோல்விகளுக்கு பிறகு தனது தவறுகளை முழுமையாக திருத்தி கொண்டு,, மக்களின் மனதில் இடம் பிடித்தார்.இன்று அவரை நாம் மிக சிறந்த முதலமைச்சராக போற்றுகிறோம்.
    அதை போல் இவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க படலாம்.
    முதலில் பல தவறுகளை செய்வார் .பிறகு ஏற்படும் தோல்வி, அவருக்கு பல பாடங்களை புகட்டி பண்படுத்தலாம்

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      /அதிமுக முற்றிலும் வலிமை இழந்து, கடைசியில் எதிர் கட்சி மட்டுமே பலமான நிலையில் உள்ளதாகவே படுகிறது.// – அட…இது என்ன புதுக் கண்டுபிடிப்பு? எந்த ஒரு கட்சியிலும் ஏற்படும் வெற்றிடம் தானாகவே காலத்தால் சரிசெய்யப்பட்டுவிடும். ஸ்டாலின் எந்தத் தேர்தலில் திமுகவை வெற்றிபெற வைத்திருக்கிறார்? தொடர்ந்து அதிமுக பத்து வருடங்கள் ஆள்வதால், ஆளும்கட்சிக்கு உண்டான இயல்பான எதிர்ப்பு வாக்குகள் அதிகரித்திருக்கும். ஏதோ எல்லாரும், எப்போது தேர்தல் வரப்போகிறது, திமுகவுக்கு வாக்களிக்கலாம் என்று காத்திருப்பதைப் போல கனவு காணக்கூடாது.

      சசிகலா – அரசியலில் அவருக்கு ஒரு இடம் கிடையாது. ஜெ. 91-96இல் மக்கள் மத்தியில் சம்பாதித்துக்கொண்ட கெட்டபெயருக்குக் காரணமாக சசிகலாவையே மக்கள் கருதினார்கள். அந்தப் பெயர் அவருக்கு எப்போதும் மாறாது. ஜெ. சமாதியில் கையால் சமாதியை அடித்தபடி சபதம் போட்ட சசிகலா திருந்த ஏழேழ் ஜென்மத்திலும் வாய்ப்பு கிடையாது என்றே நான் நினைக்கிறேன்.

  4. Gopi's avatar Gopi சொல்கிறார்:

    comman-man

    கேள்வி:
    // பாஜகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்
    ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் –

    ” மாஃபியா கும்பல்”

    -என்று துக்ளக் வார இதழில் தலையங்கமே எழுதியது
    எல்லார் நினைவிலும் இன்னமும்
    பசுமையாக இருக்கிறதே…

    இந்த ஆசீர்- வாதத்தின் நிலையை, ஆடிட்டர் சாரும்
    வரவேற்கிறாரா…?

    ஆசீர்-வாதத்தின் முயற்சிகளுக்கு,
    ஆடிட்டர் சாரின் – ஆசிர்வாதமும் உண்டா… ?

    “மாஃபியா” கும்பலுக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில்
    அவருக்கும் பங்கு உண்டா .. ?//

    இதற்கு பதில் சொல்லுங்கள் பாஜக அன்பரே; திடீர் சசிகலா ரசிகரே

    • co's avatar co சொல்கிறார்:

      தாங்கள் துக்லக் கை தொடர்ந்து படித்து வருபவரா என்று எனக்கு தெரியாது .காலம் தான் இன்று நாம் மிக மோசமாக எதிர்த்து வருபவரையையும் பிற காலத்தில் ஏற்க போகிறோமா என்று தீர்மானிக்கும் .
      நான் ஒன்றும் சசிகலா பக்தன் கிடையாது.
      நீங்கள் குறிப்பிடும் சோ அவர்களும் ,ஜெயலலிதா அவர்களை , அவரது ஆரம்ப நாட்களில் அவர் ஆட்சியின் அராஜகத்தை மிக மிக கடுமையாக எதிர்த்தார். வளர்ப்பு மகனின் ஆடம்பர திருமணத்தின் பொது மிக மிக கடுமையாக விமரிசித்தார் .ரஜினி மற்றும், மூப்பனார் ஆகியோருடன் இணைந்து , வேறு ஆட்சியை கொண்டு வர முனைந்தார் .ஆனால் அவர் மிக கடுமையாக எதிர்க்கும் கருணாநிதிக்காக , எதிரியின்,எதிரி நமது நண்பன் என்பதன் அடிப்படையில் , ஜெயலலிதா அவர்களை [பின்னாட்களில் ஆதரிக்க ஆரம்பித்தார்.
      ஆதலால் இந்துக்களை தொடர்ந்து திமுக தாக்கும் பொழுது, இதை விரும்பாதவர்கள் நிச்சயம் அதிமுகவை பலப்படுத்த , சசிகலாவை ஆதரிக்கலாம்.
      இதில் குருமூர்த்தி அவர்களும் விதிவிலக்காக எனக்கு தோன்றவில்லை.
      இது பின்னாட்களில் நிச்சயம் நடக்கும் என்பதே எனது கருத்து .
      அடுத்த வருடம் தேர்தல் நெருங்கும் சமயத்தில், குருமூர்த்தி திமுகைவை எதிர்க்க போதிய பலம் இல்லாத அதிமுகவிற்கு எப்படி உதவ போகிறார் என்று பொறுத்திருந்து பாப்போம்.

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        என்னாது…. குருமூர்த்தி அவர்கள் அதிமுகவுக்கு, திமுகவை எதிர்கொள்ள உதவப்போகிறாரா? இது என்னடா புதுச் செய்தி.

        வரும் டெஸ்ட் மேட்ச்களின் ஆஸ்திரேலியாவை இந்தியா வெற்றி பெற, நான் உழைக்கப்போகிறேன் என்று நான் சொன்னால், என்னை மற்றவர்கள் அறிவாளி என்பார்களா இல்லை கீழ்ப்பாக்கம் என்பார்களா?

        பாஜக, தேர்தல் தகிடுதத்தங்களில், திமுக மீது அதிகாரத்தை முழுமூச்சில் கவனம் வைக்கவைத்து, அதிமுகவைக் கண்டுகொள்ளாமல், காப்பாற்றும் வேலையில் வேண்டுமானால் இறங்கி உதவலாமே தவிர, பாஜகவால் ஒரு எக்ஸ்டிரா வாக்குகளையும் அதிமுகவுக்குப் பெற்றுத்தர முடியாது. இதில் குருமூர்த்திக்கு என்ன பங்கு இருக்கமுடியும்?

  5. Gopi's avatar Gopi சொல்கிறார்:

    // ஆதலால் இந்துக்களை
    தொடர்ந்து திமுக தாக்கும் பொழுது //

    ஓ common-man என்கிற போர்வையில் வந்தது
    பாஜக பக்தரா ?
    அப்படி வெளியே வா கண்ணா.

    இதற்கு ஏன் இப்படி முகமூடி, போர்வை எல்லாம் ?
    நேரடியாக வர வேண்டியது தானெ ?

    • comman-man's avatar comman-man சொல்கிறார்:

      முகமூடி அவசியம் யாருக்கும் இல்லை.
      திமுகவின் நவீன மத சார்பினமை பற்றிய கருத்துக்களை தட்டி கேட்டால் அவருக்கு பட்டம் கொடு மகிழும் . உங்களை போன்ற அறிவாளிகள் இருக்கும் வரை திமுக என்றென்றும் நிலைத்து இருக்கும் .

      • gopinath's avatar gopinath சொல்கிறார்:

        உங்கள் அறிவாளி அய்யாவுக்கு
        4 வருடங்கள் முன்னால் இது தெரியவில்லையா ?

        லஞ்ச ஊழல் குற்றத்துக்காக 4 வருடம்
        ஜெயிலில் இருப்பவருக்கு ஆதரவாக
        பேசுகிறவர்கள் தான் வெட்கப்பட வேண்டும்.
        முகமூடி இல்லையென்றால் அதென்ன
        காமன்-மேன்; மோடி மேன் என்று பெயர்
        வைத்துக்கொள்ள வேண்டியது தானே ?

  6. மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

    Common man சொல்வது :
    ஜெயலலிதாவும் பல தவறுகளை இழைத்தவர் தான்.அவரும் ஊழல் வாதி தான்.
    இன்று அவரை நாம் மிக சிறந்த முதலமைச்சராக போற்றுகிறோம்.
    அதை போல் சசிகலாவுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க படலாம்.
    முதலில் பல தவறுகளை செய்வார் .

    பல தவறுகளை செய்த பின் அவரும் சிறந்த முதலமைச்சர் ஆகிவிடுவார் .

    கேட்டாலே தலை சுற்றுகிறது .

  7. Gopi's avatar Gopi சொல்கிறார்:

    பக்தர்கள் இப்படித்தான்
    பேசுவார்கள் அய்யா.
    வேறு வழியில்லை; தாங்கிக்கொண்டு தான்
    ஆக வேண்டும்.
    பாஜக பக்தர் ஆயிற்றே.

  8. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    ஜெயிலுக்கு போய் விட்டு வந்தால் சசிகலா புனிதர் ஆகி விடுவாரா?
    அவர் ஒரு குற்றவாளி. அவருக்கு ஆதரவு கொடுத்தால் பிஜேபி தமிழ்நாட்டில்
    இருக்கும் கொஞ்சநஞ்ச செல்வாக்கையும் இழந்து விடும். திமுகவை
    எதிர் கொள்ள ஆடிட்டர் வேறு ஏதாவது செய்தாகவேண்டும் . ஆனால்
    தமிழ்நாட்டில் தேர்தல் மே 2021 நிச்சயம் வாராது. வந்திருக்கும் அழையா
    விருந்தாளி கொரோனவை வழி அனுப்பவே அடுத்த வருடம் ஆகிவிடும் .

  9. மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

    // ஆதலால் இந்துக்களை
    தொடர்ந்து திமுக தாக்கும் பொழுது //

    சங்கராச்சாரியாரை கைது செய்தது யார் ?
    ஒருவேளை ஜெயா செய்த பல தவறுகளில் அதுவும் ஒன்றா ?
    அப்புறம் ஜெயா திருந்தி விட்டார் போல .

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      சட்டம் தன் கடமையைச் செய்யவைத்தார் ஜெ. நீதி மன்றத் தீர்ப்பு மட்டுமே சரியானது என எப்போதும் சொல்லவே முடியாது.

      ஜெ. எந்த மதத்தையும் கவர்வதற்காக இந்து மதத்தைக் குறை சொன்னவர் அல்லர். அவர் நிஜமான மதச்சார்பற்றவராக இருக்க முயன்றவர். திமுகவோ, கருணாநிதியோ, ஸ்டாலினோ சிறுபான்மையினரின் ஆதவு ஒன்றிர்க்காக இந்து மதத்தை எள்ளி நகையாடுவதையே தனது வழக்கமாகக் கொண்டவர்.

  10. Sanmath AK's avatar Sanmath AK சொல்கிறார்:

    Sir,

    I came across a FB post stating auditor and ttv had met in auroville. In an earlier occasion too, they had met which was later opened up by ttv. So we could get to know about this meeting too, after some months. Let it be auditor or his party – they just function with one mission – dmk should not win the 2021 tn assembly election.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      சன்மத் சார்… நீங்க நினைப்பதாக எழுதியிருக்கும் தினகரன் – குருமூர்த்தி கூட்டணியின் மிஷன் – நான் சிறிதளவுகூட நம்பவில்லை. பாஜகவுக்கு திமுகவும் அதிமுகவும் ஒன்றேதான். அவங்களுக்குத் தேவை 10 அசம்பிளி சீட், பாராளுமன்ற/ராஜ்ய சபாவில் 40 பேரின் ஆதரவு. அவ்வளவுதான். தனக்கு தனிப்பட்ட விமானத்துக்கு அனுமதி வேணும்னா, ‘பாஜகவை இந்திய-சீனா விஷயத்தில் ஆதரிப்போம்’னு சொன்ன ஸ்டாலின், முதல்வர் நாற்காலி கிடைக்கும்னா எதைச் செய்யவும் தயங்கமாட்டார்.

      திமுகவுக்கு மாற்று அதிமுக. அதற்கு ‘அதிகார ரீதியில் பாஜக உதவமுடியுமே தவிர (இப்போது ஆட்சியில் இருப்பதால்), வாக்குகளைப் பெற்றுத்தரமுடியாது, in fact அதிமுகவுக்கு வரும் சிறுபான்மையினரின் வாக்குகளுக்கு பங்கம் வரும். அதிமுக தோற்றால், அதன் ஊழலினால் தோற்றது என்றும், அவங்களை மிரட்டி வாங்கின 15 சீட்டுகளின் வாக்குகளை வைத்துக்கொண்டு, தமிழகத்தில் 8 சதவிகிதமாக பாஜக ஆதரவு பெருகியிருக்கு என்று பாஜகவினால் சொல்ல மட்டுமே முடியும்.

  11. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இந்த பாஜக, தமிழகத்தில் கால் வைக்க என்னவெல்லாம் தகிடுதத்தங்கள் செய்யணுமோ அதையெல்லாம் முயற்சிக்கிறது. மக்கள் ஆதரவு பெற்ற ஒரு கட்சியைக் குலைக்க என்ன என்ன செய்யணுமோ அத்தனையும் பாஜக செய்தது, செய்யத் துணிகிறது (ஓபிஎஸ் கலகம், அது தொடர்பான வழக்குகள், அதற்கு முன் சசிகலா ஜால்ரா, பிறகு சசிகலா தண்டனை, அதன் பிறகு இப்போ சசிகலாவுடன் நட்பு என்று).

    சசிகலாவைப் பார்த்து ஆறுதல் (கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. தமிழக முதல்வர் என்ன நிலையிலிருக்கிறார் என்பதை மறைத்தவர் சசிகலா – தட்டச்சு செய்யும்போது சைத்தான் என்று வந்துவிட்டது), நடராஜன் தலையைத் தடவி ஆறுதல் என்று எனக்கெல்லாம் எரிச்சல், வெறுப்பு, கோபம் அனைத்தையும் தந்தவர் மோடி அவர்கள். அந்த மாதிரி அரசியலை அன்று நான் வெறுத்தேன். (அடுத்தவர் சொத்தை ஆட்டையைப் போடும் முயற்சி, அதுவுமில்லாமல் மாஃபியா கும்பலின் மேல் இரக்கம் காண்பித்த தன்மை).

    கட்-அவுட்டை எறும்பின்மேல் ஏற்றி ஓட்டினாலும் அது கோபுரமாகப் போவதில்லை. சசிகலாவுடன் கூட்டணி சேர்ந்து அதிமுகவைக் குழப்பியடித்து, அதிமுக கட்சியின் கடைசி அத்தியாயத்தை வேண்டுமானால் பாஜக எழுதலாமே தவிர (அப்படி இருந்தும் அதிமுக 25%க்குக் குறைவாக வாக்குகள் பெறாது, அதிமுகவை மிரட்டி அதிக தொகுதிகள் பாஜக பறித்துக்கொண்டாலொழிய). ஆனால் அதிமுக வாக்குகள் நிச்சயம் பாஜகவுக்கு வராது. மனசாட்சி உள்ள எந்த அதிமுக அனுதாபிகளும், வாக்காளர்களும் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

    பாஜக, தனித்து நின்று 5 சதவிகிதத்தைக்கூட தமிழக சட்டமன்றத் தேர்தலில் தாண்டாது (5% என எழுதுவதற்குப் பதில் 2% என்று எழுதியிருந்தாலும் தப்பில்லை)
    திமுக, மக்கள் நலனுக்கு எதிரான அராஜகமான கட்சி என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதற்கு மாற்று நமக்கு அதிமுக மட்டும்தான். பாஜக போன்ற அட்டைக் கட்சிகள் இல்லை.

  12. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இன்றைய இடுகையின் தலைப்பு, ‘ஆடு நனையுதே என்று ஓநாய் அழுததாம்’ என்று இருந்தால் சரியாக இருக்குமோ? சசிகலாவின் மீதான பாஜகவின் புதிய இரக்கம் இதைத்தான் எனக்கு நினைவுபடுத்துது.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      புதியவன்,

      இதை இரக்கம் என்று எப்படி define செய்கிறீர்கள்…?

      இது பாஜகவின் “பச்சை சுயநலம்” –
      நாக்கை தொங்க போட்டுக்கொண்டு அலைகிறார்கள்.

      “எத்தை தின்றால் பித்தம் தெளியும்…?
      என்று வேண்டுமானால்
      தலைப்பு வைத்திருக்கலாம். 🙂 🙂

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  13. Jksmraja's avatar Jksmraja சொல்கிறார்:

    குருமூர்த்தி ஏதோ பெரிய ராஜ தந்திரி மாதிரி சிலபேர் எழுதி இருக்கிறார்கள் . அவர் ஒரு தற்போதைய அதிகாரத்தின் அடியாள் போன்றவர். மேலிடம் சொல்வதை செய்கிறார்.
    மத்தியில் அதிகாரம் போனால் ஒரு நாயும் மதிக்க போவது இல்லை அது சரி, அவர் செய்த ராஜ தந்திரங்களைத்தான் கொஞ்சம் ஒரு பட்டியல் போடுங்களேன். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும், அம்மையார் ஜெயலலிதா இருந்த போதும் அவரை ஒரு நாயும் ராஜ தந்திரி என்று சொல்லவில்லையே ஏன்? நடிகர் ரஜினிகாந்தை மிரட்டி அரசியலுக்கு கொண்டு வர முயற்சிப்பதால் KM சாருக்கு விருப்பமானவர்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Jksmraja

      // KM சாருக்கு விருப்பமானவர். //

      அப்படி எங்கேயாவது நான்
      சொல்லி இருக்கிறேனா என்ன…?
      எனக்கு நினைவில்லை;

      பொதுவாக எனக்கு
      “புத்திசாலிகளை” (உங்களையும்
      கூடத்தான்… 🙂 ) பிடிக்கும்.
      ரசிப்பேன்……!!!

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.