மன்மோகன் சிங் அவர்களின் கடிதம் – அதன் வரிகளுக்கு இடையே (between the lines….) உள்ள அர்த்தங்கள்…

….
….

….

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள்,
தற்போதைய பிரதமர் மோடிஜி அவர்களுக்கு, தற்போதைய
சூழ்நிலைகள் குறித்து ஒரு திறந்த கடிதம் எழுதியுள்ளார்.
அது அப்படியே கீழே தரப்பட்டிருக்கிறது….

இந்த கடிதத்தில், வெளிப்படையாக சொல்வதைக் காட்டிலும்,

சொல்லாமலே புரிந்துகொள்ள விடப்பட்டுள்ள செய்திகளே
அதிகமாகத் தெரிகிறது…

படிப்பவர்களுக்கு நன்றாகவே புரியும்… டாக்டர் சிங் என்ன
சொல்கிறார் என்பது…

இதைப்பார்த்தவுடனேயே சில நண்பர்கள் கேள்வி எழுப்ப
துடிப்பார்கள்…

டாக்டர் சிங் அவரது ஆட்சியில் என்ன
செய்தார் என்பது நமக்குத் தெரியாதா…?

கோடிக்கணக்கில் கூட்டணிக்கட்சிகள் கொள்ளையடித்ததை
கண்டும் காணாமலும் தானே இருந்தார்….?

ஊரறிந்த ஊழல்வாதிகளை அவரால் தனது
அமைச்சரவையிலிருந்து வெளியேற்ற முடிந்ததா…?

செயலற்ற, மௌனியாகத் தானே அவர் இருந்தார்…?

– என்று சில நண்பர்கள் கேட்பார்கள் என்பதால் நானே
இவற்றை இங்கே முந்திக்கொண்டு தருகிறேன்…!
இந்தக் கேள்விகள் அனத்தும்-
முற்றிலும் உண்மையே – நியாயமானவையே;

என் நெஞ்சிலும் இந்தக் கேள்விகள்
ஒருபக்கம் அப்படியே தான் இருக்கின்றன.

ஆனாலும் கூட –
இந்த கடிதத்தை, அதில் சொல்லப்பட்ட,
சொல்லாமல் புரிந்துகொள்ள – விடப்பட்ட செய்திகளை
எந்த விதத்தில் நாம் இப்போது அணுக வேண்டும்…?

என் நிலை இது தான்….

” எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:423)…”

( இதற்கான, குன்றக்குடி அடிகளார் விளக்கம் :
எப்பொருள் எவரெவர் சொல்லக் கேட்பினும்,
அப்பொருளின் உண்மையான
பொருளைக் காணவல்லது அறிவு.

“யார்,யார் வாய்க் கேட்பினும்” என்றதால்
சொல்லுபவரின் தகுதி பற்றி ஆராயாமல்
அல்லது ஏற்காமல்,
கேட்கப்படும் செய்தி பற்றியே முடிவு கொள்க… )

டாக்டர் சிங் அவர்களின் கடிதம் கீழே –
——————————————————————————

Disinformation is no substitute for diplomacy or
decisive leadership, says the former Prime Minister –

Former Prime Minister Manmohan Singh on Monday
cautioned Prime Minister Narendra Modi to be ‘mindful’
of the implications his statements will have on
national security and not allow them to vindicate
Chinese position.

Speaking for the first time on the India-China face-off
in Ladakh’s Galwan Valley, Dr. Singh said,
“Disinformation is no substitute for diplomacy or
decisive leadership. And the truth cannot be suppressed
by having pliant allies spout comforting
but false statements”.

In a statement, the former Prime Minister urged all organs
of the government to work together to prevent the situation
from further escalating.

Lauding the efforts of the Indian Army and the soldiers
who lost their lives, Dr. Singh said that the Modi government
must ensure justice for Col. Santosh Babu and the jawans
who sacrificed their lives protecting the borders.

“To do any less would be a historic betrayal of the
people’s faith,” he said.

Though Dr Singh was did not mention any specific comment
by Mr. Modi, his reference was to the Prime Minister’s
statement at the June 19 all-party meeting where
he had said “none was inside Indian territory and
no post was occupied by anyone”.

Subsequently, the Prime Minister’s Office clarified that
Mr. Modi had specifically talked about the area
where the Chinese and Indian troops had clashed
and how, because of the brave act of the Army,
the Chinese attempt was foiled.

Referring to the clashes in the Galwan Valley, Dr. Singh
said the Modi government should not allow the
supreme sacrifice of the 20 soldiers to go in vain.

‘Historic cross-roads’

“At this moment, we stand at historic cross-roads.
Our government’s decisions and actions will have
serious bearings on how the future generations
perceive us.

Those who lead us bear the weight of a solemn duty.
And in our democracy that responsibility rests with the
office of the Prime Minister. The Prime Minister must
always be mindful of the implications of his words
and declarations on our Nation’s security as also s
trategic and territorial interests,” Dr. Singh said.

The former Prime Minister accused China of “brazenly
and illegally seeking to claim parts of Indian territory
such as the Galwan Valley and the Pangong Tso Lake”
and committing multiple incursions between April and now.

“We cannot and will not be cowed down by threats
and intimidation nor permit a compromise with our territorial
integrity. The Prime Minister cannot allow them to use
his words as a vindication of their position and
must ensure that all organs of the government work together
to tackle this crisis and prevent it from escalating further.”

Right now, India “must stand together as a nation and
be united in our response to this brazen threat”, he said.
————-

https://www.thehindu.com/news/national/ladakh-face-off-manmohan-singh-asks-pm-modi-to-be-mindful-of-implications-of-his-statements-on-national-security/article31886393.ece

.
————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to மன்மோகன் சிங் அவர்களின் கடிதம் – அதன் வரிகளுக்கு இடையே (between the lines….) உள்ள அர்த்தங்கள்…

 1. natchander சொல்கிறார்:

  THE RIGHT MINDED INDIAN CITIZEN CANNOT BRUSH ASIDE THE
  CRITICAL POINTS RAISED BY
  DR MANMOHAN SINGH
  SRI CHIDAMBARAN !! !!
  SRI RAHUL GANDHI,,!!
  REGARDING THESAD DEATH OF MORE THAN
  40 INDIAN ARMY SOLDIERS !!! In INDIAN/ CHINESE BORDER !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   .
   தவறான எண்ணிக்கையை குறிப்பிடுகிறீர்கள்.
   40 அல்ல – 20.

   .

 2. natchander சொல்கிறார்:

  O k
  Sir

 3. புதியவன் சொல்கிறார்:

  சார்….. உங்களுக்காகவே இன்னொரு குறள் (இது மன்மோகன்/பசி/ராகுல் ஆகியோர்களுக்கு).

  சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
  சொல்லிய வண்ணம் செயல்.

  மன்மோகன் அவர்கள், இந்தக் கடித்தத்திற்கு முதல் பாராவாக,
  நான் இந்த மாதிரி ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்தபோது இந்தக் காரணத்துக்காக கப்சிப் என்று வாயைப் பொத்திக்கொண்டு மெளனமாக இருந்தேன். ஆனால் உங்களைக் கேள்வி கேட்டால் கட்சி என்னை ஒன்றும் சொல்லாது. அதனால் இந்த இந்த பாயிண்டுகளைக் கேட்கிறேன் என்று சொல்லிவிட்டுக் கேட்கலாம்.

  நம்ம மன்மோகன், பசி போன்றவர்கள் மும்பை ஊடுருவலினால் மரணமடைந்த நூற்றுக்கணக்கான இந்தியக் குடிமகன்களின் தியாகம் நீர்த்துவிடாமலும், ராஜீவ் மரணத்தின்போது அவருடன் காவுவாங்கப்பட்ட 20 பேர்களின் உயிர்த்தியாகம் வீணாகிவிடாமலும் என்ன என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள், என்பதையும் விலாவாரியாக விளக்கியிருந்தால், தற்போதைய மத்திய அரசு, மன்மோகன் சிங் பொம்மை அரசைவிட மோசமாக செயல்பட்டதா என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும். தற்போது இராணுவத்திற்கு முழுச் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு என்ன செய்கிறது என்பதை அனைவரும் கவனித்துக்கொண்டிருப்பர். கவலைப்படவேண்டியவர்கள், அந்த நாட்டில் தாங்கள் சேர்த்த பணத்தின் ஒரு பகுதியை இன்வெஸ்ட் செய்தவர்கள் மட்டும்தான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   // சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
   சொல்லிய வண்ணம் செயல்.//

   திரும்பத் திரும்ப உங்கள் பதில்களில்
   ஒரு ஹிப்போக்ரிஸி தான் வெளிப்படுகிறது.

   அவன் தவறு செய்யவில்லையா …?
   என்று தான் கேட்கிறீர்களே தவிர,
   நீங்கள் வக்காலத்து வாங்குபவர்கள்
   செய்வது தவறு என்பதை
   உலகமே சுட்டிக்காட்டுகிறபோதும்
   ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்.
   அனைத்துக் கட்சி மாநாட்டில்
   நாட்டின் தலைவரால் சொல்லப்பட்ட ஒரு
   கருத்து பின்னர் அவர்களாலேயே
   பின்வாங்கிக் கொள்ளப்படுவது
   ப்ளண்டர் அல்லாமல் வேறென்ன…?

   காங்கிரஸை, மன்மோகனை, பசியை –
   நீங்கள் என்ன புதிதாக குறை கூறுவது …?
   பக்கம் பக்கமாக நானே தான் இங்கே
   எழுதி இருக்கிறேனே… ஏன் -இந்த இடுகையின்
   துவக்கமே அது தானே…? அதை ஏன்
   வசதியாக மறந்து விடுகிறீர்கள்…

   ‘சரி’யை ‘சரி’ என்றும் ‘தவறை’ – ‘தவறு’
   என்றும் ஏற்கும் மனப்பக்குவம்
   ஒரு கட்சியின் அனுதாபியாக ஆகி விட்டால்
   காணாமல் போய்விட வேண்டும் என்று
   எதாவது கட்டாயமா என்ன…?

   அடிக்கடி இப்படி எதாவது எசகு பிசகாக
   எழுதுகிறீர்கள்; நான் விளக்கம் கேட்டால்
   காணாமல் போய் விடுகிறீர்கள்…
   இது என்ன நியாயம் புதியவன்…?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. புதியவன் சொல்கிறார்:

  //“To do any less would be a historic betrayal of the people’s faith,” he said.//

  இது மாதிரி கச்சத்தீவு, POK இவைகளைத் தாரை வார்த்தபோது, இதற்கு முன்பு சீனாவிடம் ராணுவ நடவடிக்கை எடுக்காமல் பயந்து தோற்றபோது, விடுதலைப் புலிகளுக்கு இராணுவப் பயிற்சி தமிழகத்தில் கொடுத்தபோது பாவம்… இவர்கள் எல்லோரும் அரசியலிலேயே இல்லை போலிருக்கு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.