மு.க.ஸ்டாலின் அவர்களின் ரகசிய பயணம் அல்லது பயண ரகசியம்…!!!

….
….

….

முதலில் இன்று(21/06/20) காலை ஒரு பத்திரிகைச் செய்தி
வெளியானது.

—————–
அதில் –

திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் லண்டன்
பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், கொரோனா
முடக்கம் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து
தடைப்பட்டிருக்கும் நிலையில்,

தனி விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள
மத்திய அரசிடம் திமுக தரப்பில்
அனுமதி கேட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் –

——————

“திமுக தலைவர் கடந்த ஜனவரி, பிப்ரவரியில் லண்டன்
பயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்
அப்போது கொரோனா பரவல் காரணமாக சர்வதேசத்தில்
நிலைமை சரியில்லை என்பதால் அந்தப் பயணத் திட்டம்
கைவிடப்பட்டது.

அதன் பின் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும்
ஊரடங்கு பொதுமுடக்கம்
அறிவிக்கப்பட்டதால் மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு
வருகிறார் திமுக தலைவர்…

தமிழக மக்கள் நலனே முக்கியம் என்று அனைத்து
வகைகளிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக
தலைவருக்கு…

இப்போதைக்கு லண்டன் செல்லும் எந்த
பயணத்திட்டமும் இல்லை.
எனவே அதற்காக யாரிடமும் கோரிக்கை வைக்கும்
சூழலும் உருவாகவில்லை. மத்திய அரசிடம் இதுபற்றி
திமுக தலைவர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக
வெளியான செய்தியை மறுக்கிறோம்” என்று கூறி
இருக்கிறார் திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.
இளங்கோவன்.

————————–

” நெருப்பில்லாமல் புகையுமா ..? அடிப்படையில்
அப்படிப்பட்ட பேச்சு, முயற்சி என்று எதுவுமே இல்லாமல்
செய்தி வெளியாகி இருக்குமா..?” – என்றெல்லாம் நாம்
கேட்க விரும்பவில்லை….!!!

எப்போதும் உண்மையைத் தவிர வேறு எதுவும்
பேசாத – திமுக செய்தித்தொடர்பாளர் திருவாளர் டி.கே.எஸ்.
இளங்கோவன் சொல்வதை நாம் அப்படியே நம்புவோமாக.

ஆனாலும் கூட –

“””தமிழக மக்கள் நலனே முக்கியம் என்று அனைத்து
வகைகளிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக
தலைவரின்…”””

உடல் நலம் குறித்து மக்கள் மிகவும் அக்கறை
கொண்டிருப்பதால் –

திருவாளர் டி.கே.எஸ்…. தமிழக மக்களின் மனதில்
குடிகொண்டிருக்கும் ஒரு நீண்ட கால சந்தேகத்தை தீர்த்து
வைத்தாரேயாகின், அவருக்கு மக்கள் மிகவும் நன்றிக்கடன்
பட்டிருப்பார்கள்.

திருவாளர் ஸ்டாலின் 6-7 மாதங்களுக்கு ஒருமுறை
– லண்டன் பயணம் போவதும் ஒவ்வொரு தடவையும்,
10 நாட்களுக்கும் மேலாக அங்கே தங்கி இருப்பதும் தான்
இந்த சந்தேகத்திற்கான அடிப்படை. சில பத்திரிகைச்
செய்திகள் ஸ்டாலின் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காகத்
தான் லண்டன் செல்வதாக சொல்கின்றன.

ஆனால் அவருக்கு என்ன நோய் என்றோ, அவர்
எத்தகையை சிகிச்சையை மேற்கொள்கிறார் என்றோ
திமுக தரப்பில் செய்தி எதுவும் வெளியிடப்படுவதில்லை;

6-7 மாதங்களுக்கு ஒரு தடவை மருத்துவர்களிடம் –
அதுவும் லண்டன் மருத்துவர்களிடம் – போகவேண்டிய
அளவிற்கு அவருக்கு உடம்புக்கு என்ன பிரச்சினை…?

இன்றைய தினம் உலகத்தரத்தில் சென்னையிலேயே
மருத்துவ வசதிகள் கிடைக்கின்றன. மேலும் லண்டன்
ஒன்றும் சென்னையை விட எந்த விதத்திலும் சிறப்பான
மருத்துவ வசதிகளை கொண்டதல்ல.

அப்படியிருந்தும் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன்
போகின்றார் என்றால், அதற்கான காரணம் … அவருக்கு
என்ன நோய் என்பது குறித்து வெளியே சொல்ல முடியாத
அளவிற்கு ரகசியம் காக்கப்பட வேண்டிய ஒன்றா…?

சாதாரண தனிப்பட்ட மனிதர் என்றால்,
இதையெல்லாம் யார் கேட்கப்போகிறார்கள்….?

ஆனால், தமிழ்நாட்டின் அடுத்த முதல் அமைச்சர்
என்று திமுகவால் முன் வைக்கப்படுபவர் என்பதால்,
ஸ்டாலின் அவர்களுக்கு வெளியில் சொல்ல முடியாத
அளவிற்கு மருத்துவ ரீதியிலான பிரச்சினைகள் எதாவது
இருக்கிறதா என்பதையும் –

ஹரிச்சந்திரனின் தம்பி –
என்று மக்களால் பாவிக்கப்படும் (……)
திமுகவின் செய்தித் தொடர்பாளர்,
திருவாளர் டி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள்

விளக்கமாகச் சொல்லி விட்டால்,

மக்கள் தங்களின் சந்தேகமும், பயமும் தீர்க்கப்பட்டு,
நிம்மதியாக மற்ற வேலைகளை பார்க்க போவார்கள்.

திருவாளர் டி.கே.எஸ்.தயை கூரவேண்டும்….!!!

.
——————————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to மு.க.ஸ்டாலின் அவர்களின் ரகசிய பயணம் அல்லது பயண ரகசியம்…!!!

  1. natchander's avatar natchander சொல்கிறார்:

    D M K WILL NEVER TELL TRUTHS !!
    D M K WILL NOT TELL FACTS !!! EVEN !!

    THAT IS TGE TRADITION OF D M K RIGHT FROM DAY ONE ,,!!
    SIMPLE !!!!!

  2. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    Karunanithi”s family is one of the richest in the world. stalin can afford treatment in any best hospitals in the world. You have raised the question why he is not taking treatment in India
    where best medical facilities are available. I think he is taking treatment in London just to maintain
    the secrecy. Normally VIPs are secretive about their disease and treatment for the same.
    If he takes treatment in India all the media will be there and everything will comeout in open.
    DMK is like russia and china, nobody will know what happens inside the iron curtain.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      //just to maintain the secrecy.// – இது என்ன புதுக்கதையா இருக்கு? திமுகவுக்கு (ஸ்டாலின் குடும்பத்துக்கு) சொந்தமான மருத்துவமனைகளே இருக்கே. அதில்கூட ரகசியம் காக்க மாட்டார்களா? சொத்தைச் சேர்த்து வைத்த (ஊழல் செய்து) கருணாநிதிக்கு லோக்கல் மருத்துவமனை, ஸ்டாலினுக்கு வெளிநாட்டில் சிகிச்சையா? கேக்கவே விசித்திரமாக இருக்கிறதே.

      இதனால்தான் மு.க.அழகிரி, கருணாநிதியிடம் ‘சில மாதங்களில் அவருக்கு இருக்கும் நோய் காரணமாக ஸ்டாலின் செத்துப்போயிடுவார்” என்று சொல்லி கட்சியைவிட்டு தன்னைக் கட்டம் கட்டிக்கொண்டாரா (இது நான் சொல்லலை. சாட்சாத் கருணாநிதி மீடியாவில் சொன்னது)

  3. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    Sir,
    Leave alone the reason his personnel visit to London. My question is this: Who will bear the huge
    cost of his engaging a separate plane to London.Is it own money? When only a handful of people
    can fly in 1st class, business class & VIP class the cost of a private jet is unimaginable along with family. Can you tell me the answer?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      R.Gopalakrishnan,

      என்ன சார் இப்படி கேட்கிறீர்கள்…

      அவரது தந்தையார் 70 ஆண்டுக்கால பொதுவாழ்வில்
      சேர்த்து வைத்து விட்டுப்போனது எத்தனை கோடி
      என்பது தெரிந்தால் தானே இதற்கு பதில்
      சொல்ல முடியும்…?
      இப்போதைக்கு இருக்கவே இருக்கிறது
      திமுகவின் – கஜானா…
      திருவாளர் ஜெகத்ரட்சகன் போன்ற Sponsorers… !!!

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.