…
…

…
நடிகவேள் எம்.ஆர்.ராதா –
அப்படியே பிரதிபலித்துக் காட்டப்படுகிறார் இங்கே…
இங்கே சொல்லப்படும் எம்.ஆர்.ராதா அவர்களின்
அதே நாடகத்தை, சின்ன வயதில் – சென்னையில்
நான் நேரில் பார்த்திருக்கிறேன்….
பின்னால் வெறும் நீல நிறத்தில் ஒரு திரையை
தொங்க விட்டு விட்டு, முழு நாடகத்தையும் அதே
பின்னணியில் நடத்தினார்….!!!
அந்த நிமிடத்தில் அவருக்கு தோன்றுவது தான் வசனம்…!!!
அவர் சொல்லும் கருத்துகள் அனைத்தையும்
ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, மக்கள் அவரை
முழுமனதுடன் விரும்பினார்கள்… நேசித்தார்கள்.
பலத்த கைதட்டல்களுடன் அவர் பேசியதை
எல்லாம் வரவேற்றார்கள். துணிச்சல் என்பதற்கு
சிறந்த எடுத்துக்காட்டு எம்.ஆர்.ராதா.
மேடையமைப்பை பார்க்கவா ராதா அண்ணன்
நாடகத்திற்கு மக்கள் வந்தார்கள்….?
M.R.ராதா பற்றி ஒரு வெகு சுவாரஸ்யமான உரை…
அவசியம் கேட்க வேண்டும்… கீழே –
……
……
.
————————————————————————————————————————————



எம்.ஆர்.ராதாவை மக்கள் விரும்பியதற்கு
காரணம் அவரது இரண்டு சிறப்பான குணங்கள் –
1) மற்ற அரசியல்வாதிகளைப்போல்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்;
நினைத்ததை போட்டு உடைப்பவர்;
2) தைரியம். எதற்கும், யாருக்கும் அஞ்சாத
துணிச்சல்.
அவர் ஒரு ஸ்பெஷல் பெர்சனாலிடி.
அவரைப்போல் மற்றொருவரை காண முடியாது.