…
…

…
32 ஆண்டுகளுக்கு முன், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில்,
ஒவ்வொரு ஞாயிறு காலையும் ராமாயண் ஹிந்தி தொடர்
ஒளிபரப்பப்பட்டு வந்ததும், பாரதம் முழுவதும் அதை மிகுந்த
ஆர்வத்துடன் பார்த்ததும் பழைய கதை.
இப்போது, மக்கள் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு,
அவரவர் வீடுகளில் அடைந்து கிடக்கும் நேரத்தை, ஆர்வத்துடன்
செலவழிக்கவும், தளர்ந்து போன தனது மார்க்கெட்டை மீண்டும்
பிடிக்கவும் தூர்தர்ஷன் புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொள்கிறது.
தினமும் இரண்டு வேளைகளும் ராமாயண் தொடர்ச்சியாக
ஒளிபரப்பப்படுகிறது…
இது தூர்தர்ஷனின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை
எங்கேயோ தூக்கிச் சென்று விட்டது. 650 % அதிகரித்திருக்கிறது.
…

…
இது ஒரு புறமிருக்க –
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் –
ராமாயண் தொடரில், ராவணனாக நடித்தவர் அர்விந்த் திரிவேதி
என்கிற முன்னாள் நாடக நடிகர். 84 வயதாகும் அவரும்
இப்போது தனது வீட்டில் அமர்ந்து, தான் ராவணனாக நடித்த
ராமாயண் தொடரைப் பார்த்து வருகிறார்.
அதில், ராவணன் – வனத்தில் தனியே இருக்கும் சீதையை
அபகரித்து, தூக்கிச் செல்லும் காட்சியைப்பார்த்து, பரிதவிக்கிறார்.
டிவி திரையில் தான் செய்யும் அக்கிரமத்தை, சீதையை
வலிந்து தூக்கிச் செல்லும் காட்சியைப் பார்த்து, தனது செயலுக்கு
மனம் வருந்தி, டிவி திரையில் இருக்கும் சீதையை நோக்கி
தனது 2 கைகளையும் தூக்கி, பரிதவித்துக்கொண்டே மன்னிப்பு
கேட்கிறார்…..
மிகவும் வித்தியாசமான இந்த காட்சியை காட்டும்
காணொளி கீழே –
…
…
.
——————————————————————————————————————————



[…] […]