…
…

…

…
1969-71-ல் தொடர்ச்சியாக 15 ஹிட் படங்கள்
கொடுத்த ஹிந்தி சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா
மறைந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாகி விட்டன.
ராஜேஷ் கன்னாவிற்கென்று லட்சக்கணக்கான
ரசிகர்கள் உண்டு.
அதே போல் ஹிந்தி பாடகர், நடிகர் கிஷோர் குமார்…
மறைந்து 31 ஆண்டுகளாகி விட்டன.
நடிகர் என்பதை விட பாடகர் என்கிற முறையில் தான்
கிஷோர்குமார் அதிகம் விரும்பப்பட்டார்… இவருக்கும்
லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. இன்றைக்கும்
கிஷோர் குமாரின் குரல் ரேடியோவிலும்,
தொலைக்காட்சிகளிலும் ஒலிக்காத நாளே இல்லை…
( மறைந்து 31 ஆண்டுகளுக்குப் பிறகும்…!!!)
அவரது குரல் அநேகமாக, அந்த காலத்தைய
எல்லா ஹிந்தி ஹீரோக்களுக்கும் பொருந்தியது…
இவர்கள் இருவரும் இருந்தபோது சேர்ந்து படைத்த
பாடல்கள் அனைத்துமே அற்புதம்…
மறக்க முடியாதவை …
எனக்கு இவர்கள் இருவரையுமே பிடிக்கும்.
கிஷோர் குமாரை கொஞ்சம்
(இல்லை, இல்லை – ரொம்ப) – அதிகமாகவே…
கிஷோர் குமாரின் பாடல்களை நாள் முழுவதும்
கேட்டுக்கொண்டே இருக்கலாம்…அற்புதமான குரல்.
ராஜேஷ் கன்னாவின் 77 வது பிறந்த நாளன்று,
கிஷோர் குமார் அவருக்காகப் பாடிய பாடல்கள்
சிலவற்றை இசைக்கலைஞர் புனித் சர்மா
இசைத்த வித்தியாசமான வீடியோ ஒன்று கிடைத்தது.
எனக்கு மிகவும் பிடித்தது –
உங்களுக்கும் பிடிக்குமென்று நம்புகிறேன்.
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…கீழே –
அதனைத் தொடர்ந்து, இதே வரிசையில்,
ராஜேஷ் கன்னா, கிஷோர் குமார் இணைந்த
சில நல்ல பாடல்களும் கீழே –
…..
புனீத் ஷர்மா –
….
O Mere Dil Ke Chain
….
( இங்கே பார்க்க முடியாமல் தடுக்கப்படும் வீடியோக்களை,
watch this Video on youtube என்று வரும் வார்த்தைகளின் மீது
க்ளிக் செய்யுங்கள். பார்க்கலாம்…!!!)
Kahin Door Jab Din Dhal jaye
….
Zindagi Ka Safar Hai Ye Kaisa Safar
….
Jab Dard Nahi Tha Seene Mein
….
Karvaten Badalte Rahe
…
Ye Shaam Mastani –
…
Aapke Anurodh Pe – Rajesh Khanna
…
Pyar Deewana Hota Hai
…
Zindagi Ke Safar Mein Guzar Jaate |
….
.
—————————————————————————————————————————————————————–



ஒவ்வொன்றும் முத்தான வரிகள், இனிமையான குரல். எதை ரசிப்பது குரலையா? வரிகளையா? உங்கள் தொகுப்பின் இருக்கும் உங்கள் ரசனை வியக்க வைக்கிறது. நன்றி
subburathnamtecton,
என் மாதிரியே ரசனையுள்ள
இன்னொரு நண்பரை இங்கே
சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Excellent collection. I agree totally especially on Kishore’s voice. ஹிந்தியில் கிஷோரும் தமிழில் TMSம் – இவர்கள் இருவருக்கும் உள்ள vareity வேற எந்த பாடகருக்கும் (சினிமா) வராது
ராஜேஷ் கன்னாவை உருவாக்கியது இரண்டு பேர்
முதலில் கிஷோர் ! அப்புறம் மும்தாஜ் .