அமெரிக்க டிவியில் நம்ம பசங்க ஆட்டம்….


அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘America’s Got Talent’
நிகழ்ச்சியில், நமது மும்பையைச் சேர்ந்த “சேரி மக்கள்”
போடும் ஆட்டம் அனைவரையும் அதிர வைக்கிறது.

“பேட்ட” தமிழ்ப்படத்துக்காக, தமிழ் இசையமைப்பாளர்
அநிருத் உருவாக்கிய ஒரு பாடலுக்குத் தான் இந்த
பசங்கள் ஆட்டம் போடுகிறார்கள்.

அவர்கள் வளைவும், வேகமும், பிரமிக்க வைக்கின்றன.

வலையில் பார்த்தேன்…
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் – கீழே வீடியோ…

( ஒரு உண்மையைச் சொல்லி விட வேண்டும்…
இந்த பாடலை -அதற்குண்டான காட்சியுடன் – நமது
தொலைக்காட்சி ஒன்றில் போன வருடம்
முதல் தடவை பார்த்தபோது –

“என்னடா ரசனையிது …
இப்படியெல்லாம் கூடவா பாட்டு போடுவார்கள் ….? ”
– என்று தான் தோன்றியது….

(சில விஷயங்களில் மட்டும்) காலத்திற்கேற்றாப்போல்
நம்மால் மாற முடியாமல் இருப்பது
இயல்பா அல்லது நம் குறையா…? )

இப்போது இந்தப் பசங்கள் ஆடும்போது,
பாடலின் குறை தெரியவில்லை ….அதைவிட
முக்கியமாகத் தெரிவது அதன் வேகமும்,
அந்தப் பசங்களின் ஆட்டமும் தான்….!!!
என்னமாக பந்துபோல வானத்தில் பறக்கிறார்கள்…!
எவ்வளவு பயிற்சி…எப்பேற்பட்ட முயற்சி…!!!

நம்ம பிள்ளைகளுக்கு வாழ்த்தும், பாராட்டுகளும்…

—————————-

V. Unbeatable: Indian Dance Crew Put LIVES on The Line For @America’s
Got Talent Champions Finale
………….

…………..

.
————————————————————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.