…
…
…
…
ஒரு சில அருமையான வீடியோக்களை பார்த்தேன்.
தமிழ்த்திரையுலகில் வினீத்’தை பெரும்பாலானவர்கள்
ஒரு நடிகராக அறிவர். அவர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்றும்,
முறைப்படி பரதநாட்டியம் பயின்று, சிறப்பாக நடனமாடக்
கூடியவர் என்பதையும் சிலர் அறிவர்.
அவருக்கு ஒரு குட்டிப் பெண்… பெயர் அவந்தி.
வினீத் தமிழ்நாட்டில் நடனக்கலைஞராக அதிகம்
தெரிந்தவர் அல்ல. ஆனால், மலையாள நாட்டில், நிறைய
நிகழ்ச்சிகள் நடத்துகிறார். கூடவே, அவரது மகளுக்கு
அவரே நடனம் பயிற்றுவித்து, சிறிய வயதிலேயே
அரங்கேற்றமும் நிகழ்த்தி இருக்கிறார்.
கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் இசைப் பின்னணியில்,
வினீத் தனியாகவும், தனது குழுவினருடனும் ஆடும்
பரத நாட்டியம்… மற்றும் தன் மகள் அவந்தியுடன்
வினீத் ஆடும் ஒரு நடனமும் சிறப்பாக இருந்தன.
பார்த்த பலவற்றிலிருந்து, இரண்டு குட்டி காணொளி
காட்சிகளை மட்டும் – நண்பர்களும் பார்த்து ரசிக்க பகிர்ந்து
கொள்கிறேன் – கீழே –
…………..
Suvarna Hariharam I Vineeth-sangeethame I Mazhavil manorama
…
vineeth and his daughter dance-
.
—————————————————————————————————————————————



So serene and peaceful whenever we hear music by Jesudas, elevated even greater by Vineeth’s colorful dance. Beautiful to watch the superb dance movements by his daughter. She would have a great future if well nurtured by Vineeth. .