…
…

…
உலகின் இரண்டு மிகப்பெரிய ஜனநாயகங்கள் என்று
இந்தியாவையும் அமெரிக்காவையும் உலகம்
சொல்லிக்கொண்டிருந்தது…
அது ஒரு கனாக் காலம்…!!!
இப்போதைய அமெரிக்க நிகழ்வு ஒன்று கீழே –
இந்திய அரசியலில் இப்போது யாராவது இப்படி
இயங்க முடியுமா…?
————————————————————
https://www.hindutamil.in/news/world/515110-he-s-in-love-with-me-arnold.html
ட்ரம்ப் என் மீது காதல் கொண்டிருக்கிறார்:
அர்னால்ட் கிண்டல் – he-s-in-love-with-me-arnold
…
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன் மீது காதல் கொண்டிருப்பதாக
நடிகரும், முன்னாள் கலிஃபோர்னியா மாகாண ஆளுநருமான
அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் கிண்டலாக விமர்சித்துள்ளார்.
அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரிடம் சமீபத்தில் இதழ் ஒன்றுக்கு
ட்ரம்ப் உங்கள் மீது கூறும் விமர்சனங்களுக்கு நீங்கள் என்ன
பதில் கூறுகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு அர்னால்ட் பதில் கூறும்போது, “ட்ரம்ப் என் மீது
காதல் கொண்டிருக்கிறார். இதுதான் உண்மை.
மக்கள் அமெரிக்காவை எவ்வளவு தூக்கி வீசினாலும்,
மக்கள் அதிபரைப் பார்த்து எவ்வளவு சிரித்தாலும் –
உலகெங்கிலும் உள்ள மக்கள் அமெரிக்கா வரவே
விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு நன்கு தெரியும் –
ஒரு மனிதர் – ஒரு அதிபரால் –
அமெரிக்கா மாறிவிடாது என்று” என்று பதிலளித்தார்.
அமெரிக்காவின் அதிபரானது முதல் ட்ரம்ப்புக்கும்
அர்னால்டுக்கும் இடையே கருத்தியல் ரீதியாக கடுமையான
மோதல் ஏற்பட்டு வருகிறது. ட்ரம்ப்பின் குடியுரிமை
திட்டத்தை அர்னால்ட் கடுமையாக விமர்சித்தார்.
ட்ரம்ப்பும் அர்னால்டின் கருத்துக்கு கிண்டலாகப் பலமுறை
பதிலளித்திருக்கிறார். கடந்த ஆண்டு, புதின் – ட்ரம்ப்
சந்திப்பின்போது கூட ட்ரம்ப்பை கடுமையாக அர்னால்ட்
விமர்சித்தார்.
அதில், ”அதிபர் ட்ரம்ப், நான் இப்போது ரஷ்ய அதிபர்
உடனான உங்களது பத்திரிகையாளர் சந்திப்பைப் பார்த்தேன்.
அந்த வீடியோ மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.
நீங்கள் புதின் முன் நனைந்த நூடுல்ஸ் போல நிற்கிறீர்கள்.
ஒரு சிறிய ரசிகனைப் போல நடந்துகொண்டீர்கள்.
நீங்கள் புதினிடம் செல்ஃபி அல்லது அவரிடம் ஆட்டோகிராஃப்
வாங்கப் போகிறீர்களா” என்று விமர்சித்து அர்னால்ட்
அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப்
பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ அப்போது சமூக
வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
—————————————————–
இந்தியாவிலும், ஒரு காலத்தில் அரசியல் –
இப்படித்தான் இருந்தது …
அரட்டையும், சிரிப்புமாக – ..!!!
…

…
பிலூ மோடி என்றொரு குஜராத் (… 🙂 🙂 🙂 … ) எம்.பி.
ராஜாஜியின் சுதந்திரா கட்சியைச் சேர்ந்தவர்..
(பின்னர் ஜனதாவில் இருந்தார்…)
1967-லிருந்து தன் இறப்பு வரை ( 1983)
பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்…
(முதலில் லோக் சபாவிலும் பின்னர் ராஜ்ய சபாவிலும்..)
எப்போதும் காங்கிரஸ் கட்சியை சாடிக்கொண்டே இருப்பார்…
நல்ல வெடிச்சிரிப்பு பேச்சாளர்…
…

…
எப்போதும் சிரிப்பும், கிண்டலுமாகத் தான் இருப்பார்.
பார்லிமெண்டில் சகட்டுமேனிக்கு அனைவரையும்
கலாய்ப்பார்… அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உட்பட….!!!
ஆனால், பாராளுமன்றத்திற்கு வெளியே –
இந்திரா காந்திக்கு – இவர் நல்ல நண்பர்…!!!
எமெர்ஜென்சி காலத்தில், இவரையும் தூக்கி
உள்ளே போட்டார் இந்திரா காந்தி…!!!
இருந்தாலும், நண்பர் ஆயிற்றே…
இந்திரா காந்தி பிலூ மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார்…
” பிலூ, நலமாக இருக்கிறீர்களா…?
சிறையில் எல்லாம் வசதியாக இருக்கிறதா…?”
பிலூ மோடி பதில் எழுதினார்…
“எல்லாம் நலமே.. ஆனால், டாய்லெட் போகத்தான்
திண்டாடுகிறேன்…” ( பிலூ மோடி பயங்கர குண்டு…
அவர் உட்கார வேண்டுமானால், டாய்லெட் பெரிதாக
தனி வடிவில் இருக்க வேண்டும்…)
உடனடியாக, உத்திரவு பறந்தது…
ஜெயில் சுப்பிரெண்டெண்டுக்கு –
நேரடியாக, இந்திரா காந்தியிடமிருந்து…
“பிலூ மோடிக்கு வசதியான டாய்லெட்டை கொடுங்கள்..”
உடனடியாக, கொத்தனார், செங்கல், மணல், சிமெண்ட் ..
அத்தனையும் “ரோதக்” சிறைச்சாலைக்குள் வந்தன.
பிலூ மோடியை (தையல்காரர் அளவெடுப்பது போல் )
அளவெடுத்து, 4 மணி நேரத்தில், அவர் சைசுக்கு,
புதிய கான்க்ரீட் டாய்லெட் வடிவமைத்து கட்டப்பட்டது….!!!
———————————–
ஆனால் இந்த காலத்து அரசியல் …?
படு சீரியஸ்…
அனைத்தையும் பெர்சனலாக எடுத்துக் கொள்கிறார்கள்.
தனிப்பட்ட விரோதங்கள் தான் இன்றைய அரசியல்..
கொள்கைகளை முன்வைத்து,
தனிப்பட்ட விரோதம் இல்லாத,
கலகலப்பான அரசியல் –
செய்யும் காலம் இந்தியாவில் இனி வருமா…?
.
———————————————————————————————————-



பிலூ மோடி ஒரு interesting personality யாக இருந்திருப்பார்
போலிருக்கிறதே. நான் கேள்விப்பட்டதில்லை.
நமக்குத் தெரிந்து லாலு பிரசாத் யாதவ் காமெடியாக
அரசியல் செய்வார். ஆனால், அவர் நேர்மையானவர் அல்ல.
பிலூ ராஜாஜி கட்சியில் இருந்திருக்கிறாரே. நிச்சயம்
நாணயமானவராகத் தான் இருந்திருப்பார்.