…
…

…
என் நண்பர்கள் வட்டத்தில், ஏழெட்டு பேரின்
வாரிசுகள் அமெரிக்காவில் வசிக்கின்றனர்.
அவர்களில், குறைந்தது 3 நண்பர்கள்,
தங்கள் மனைவியுடன் – வருடா வருடம்
அமெரிக்கா சென்று வருகின்றனர்.
அவர்களில் ஒருவரின் 2 மகன்கள், ஒரு மகள்
ஆக மூன்று வாரிசுகளும் அமெரிக்காவில்
வசிக்கின்றனர். நண்பரும், அவரது மனைவியும்,
கடந்த 10-12 ஆண்டுகளாக, விக்கிரமாதித்தனின்
காடாறு மாதம், நாடாறு மாதம் போல் –
ஆண்டுக்கு 6 மாதம் அமெரிக்கா,
6 மாதம் திருச்சி என்று வாழ்கின்றனர்.
எனக்கென்னவோ அவர்களைப் பார்க்க
பாவமாக இருக்கும்.. இது என் பார்வை….
ஆனால், நான் தான் பரிதாபப்படுவேனே தவிர –
அவர்கள் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியதில்லை.
அவர்கள் இதை ஒரு வாழும் முறையாகவே
ஏற்றுக் கொண்டு விட்டனர்…!!!
இத்தகைய பெற்றோர்களில் இரண்டு ரகம் உண்டு.
விரும்பிச் செல்பவர்களும் உண்டு.
மகன் அல்லது மகள்களின் குழந்தைகளைப்
பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்காக
வேறு வழியில்லாமல் போகிறவர்களும் உண்டு.
அவர்களிடம் எல்லாம் நிறைய பேசிக்கொண்டிருப்பேன்.
இங்கே பேச்சாளரால், உண்மை நிலை தான்
நகைச்சுவையாக பேசப்படுகிறது
என்றே நினைக்கிறேன். …
நகைச்சுவைப் பேச்சாளர் திரு.மோகனசுந்தரம்
பேசுவதை கேட்போமா…?
10 நிமிடம் தான் தாராளமாகக் கேட்கலாம்…!
…
…
.
——————————————————————————————————



இதை இங்கு எழுதினேனா என்று தெரியலை. குவைத்தில் ஒரு பெரிய கம்பெனியில் மிகப் பெரிய வேலையில் இருப்பவரை (தமிழர்) சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவரிடம் ஏன் என்னுடன் வெளியே சாப்பிடுகிறீர்கள், மனைவி ஊரில் இல்லையா என்றதற்கு, அவர், மனைவி கனடா சென்றிருக்கிறார், பசங்க அங்கதான் படிக்கிறாங்க. இவர் அங்கு போய், 8-9 மாதத்துக்குத் தேவையான 15 வகையான சைட் டிஷ்களைச் செய்துவைத்துவிட்டு வந்துவிடுவார் (மட்டர் பனீர், சாம்பார் போன்று). ஃப்ரீசரில் இருப்பதால் (அங்கு டிரே டிரேவாக வைக்க முடியும்) எதுவும் 1 1/2 வருடங்களுக்குக் கெட்டுப்போகாது. பசங்க அன்றன்றைக்கு ஓரிரு கரண்டி எடுத்து சூடுபடுத்திக்குவாங்க என்றார். அமெரிக்காவில் வசிக்கும் எனக்குத் தெரிந்தவர், வார இறுதி நாட்களில் தூரத்தில் இருக்கும் ஒருவர் வீட்டில், சாம்பார், காய்கள், ரசம்லாம் ஒரு வாரத்துக்குத் தேவையானது வாங்கிவந்து குளிர்சாதனத்தில் வைத்து அந்த வாரம் முழுவதும் உபயோகிப்பேன் என்றார். நாட்டு நிலைமை இப்படி இருக்கு.
இங்கு சந்தித்த ஒருவர், என் வருங்கால மருமகள்ட சொல்லிட்டேன். நீ நாங்க எப்படி இருக்கோம்னு பார்த்து அப்புறம் திருமணத்தை முடிவு செய்துக்கோன்னு. திருமணத்துக்குப் பிறகு அவங்கள்ட சொல்லிட்டோம், உங்க வாழ்க்கையை நீங்க, எங்களைத் தொந்தரவு படுத்தாத வகையில் வாழ்ந்துக்கோங்க என்று, என்று சொன்னார்.
வெளிநாட்டுக்கு இப்படி உதவப்போகும் பெற்றோரில் ஒருவர் இங்கு மரணமடைந்தால் மற்றவர் கதி, அல்லது இருவரும் உடல் நிலை சரியில்லைனா யார் பார்த்துக்கொள்ள முடியும்? இதையெல்லாம் நினைத்தால்தான் பாவமாக இருக்கும்.
all are true