…
…

…
கீழே இருப்பது என் விமரிசனம் இல்லை…!!!
அதைவிட பலமடங்கு சுவாரஸ்யமான,
விகடனில் வெளிவந்த செய்திக் கட்டுரை மட்டுமே.
https://www.vikatan.com/news/trending/piyush-goyal-makes-newton-einstein-trend-in-twitter
—————–
`அமைச்சரின் உளறலால் இந்திய அளவில் டிரெண்டாகும்
நியூட்டன், ஐன்ஸ்டீன்’- ட்விட்டரில் அதகளம்!
ம.காசி விஸ்வநாதன்
ட்விட்டர்வாசிகள் ஒரே நேரத்தில் இருபெரும் அறிவியல்
மேதைகளை டிரெண்ட் செய்வது ஏன் தெரியுமா?
—————–
2019-ல் ஐன்ஸ்டீனும், நியூட்டனும் ஒரே நாளில் இந்திய
அளவில் நம்பர் #1, நம்பர் #2 டிரெண்டிங்கில் இருப்பார்கள்
என யார் நினைத்திருப்பார்கள்?!.
ஆனால், இப்போது அதுதான் அப்படியே டிவிட்டரில்
நடந்துகொண்டிருக்கிறது. சந்திரயான் 2 போன்ற சிறப்பு
நிகழ்வுகள்தாண்டி பெரிதாக அறிவியல் பற்றிய பேச்சு
எடுக்காத ட்விட்டர்வாசிகள் ஒரே நேரத்தில் இருபெரும்
அறிவியல் மேதைகளை டிரெண்ட் செய்வது ஏன் தெரியுமா?
இந்த ட்விட்டரை பார்த்தால் தெரியும்….
…

…
பொருளாதார மந்தநிலை பற்றிப் பேசுகையில் மத்திய
அமைச்சர் பியூஷ் கோயல்,
பொருளாதார வளர்ச்சியை எண்களை வைத்து
தீர்மானித்துவிட முடியாது என்பதை எடுத்துரைக்க
முயன்று ( அதாவது, நிதியமைச்சர் ஜிடிபி எண்களைப்
பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை…? )
இதைக் கூறியுள்ளார் அவர் –
” புவி ஈர்ப்புவிசை என்று
ஒன்று இருப்பதை கண்டுபிடிக்க
ஐன்ஸ்டீனுக்கு கணிதமா உதவியது? ”
-என்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார் அவர்.
-புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது
நியூட்டன் ஆயிற்றே –
ஆனால், இவர் ஐன்ஸ்டீன் என்று கூறுகிறாரே
என்பது தான் ட்விட்டரை அலறவிட்டுள்ளது.
.
—————————————————————————————————-



இந்த புவியீர்ப்பு விசையயை பற்றி பியூஷ் பெயரைத்தான் மாற்றிக்கூறினார் ஆனால் இன்னொருவர் — நியூட்டனுக்கு முன் புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் பிரம்மகுப்தா 2:என்று ராஜஸ்தான் மந்திரி கூறுகிறார் …அது போக ” ஓலா, ஊபர் பற்றி நிதியமைச்சரின் பேச்சுக்கு :– https://tamil.oneindia.com/news/chennai/netisans-troll-nirmala-sitharaman-362638.html ….. இவர்கள் வாழும் காலத்தில் யாம் வாழ்வதே புண்ணியம் … ?