…
…

…
ஞாயிறு அன்று, புதிய தலைமுறை தொலைக்காட்சியில்,
பாஜக / ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான திரு.குருமூர்த்தி அவர்களை,
புதிய தலைமுறையின் நிர்வாக ஆசிரியர், திரு.கார்த்திகைச்செல்வன்
‘அக்னி பரீட்சை’ நிகழ்ச்சியில் பேட்டி கண்டார்.
கார்த்திகைச் செல்வன் கிடைத்த 40 நிமிட அவகாசத்தில்,
அவரால் இயன்ற வரை முக்கியமான கேள்விகள் பலவற்றை,
தயக்கம் ஏதுமின்றி கேட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
கார்த்திகைச் செல்வனுக்கு நமது பாராட்டுகள். இன்னும் கூட
சில கேள்விகள் கேட்க வேண்டிய தேவையில் இருக்கிறது….
நேரமில்லை போலும்…!!!
—————————
– முதலில், திரு.ப.சிதம்பரம், மற்றும்அவரது மகன்
கார்த்தி சிதம்பரம் பற்றிய குற்றச்சாட்டுகள்…
அடுத்து – பொருளாதார மந்த நிலை –
அதற்கடுத்து – டாலர்-ரூபாய் மதிப்பில் வீழ்ச்சியும்,
ரிசர்வ் வங்கி எடுத்த நிலை பற்றியும் –
பின்னர் – பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில்
பாஜக தோற்றது – திமுக பெரிய அளவில்
ஜெயித்தது குறித்தும் –
பின்னர் – ரஜினி பாஜகவின் தமிழ்நாட்டு முகமா
என்பது குறித்தும் –
இறுதியாக, பணிக்குச் செல்லக்கூடிய பெண்கள் பற்றி
அவரது அண்மைய குறைகூறல் குறித்தும் –
————————–
திரு.குருமூர்த்தியும் அனைத்து கேள்விகளுக்கும்,
எந்தவித தயக்கமுமின்றி விரிவாகவே பதிலளித்தார்.
அவரது பதில்கள்/விளக்கங்கள்
எந்த அளவிற்கு பொருத்தமானவையாக / திருப்திகரமாக
இருந்தன என்பது குறித்து நண்பர்கள் தங்கள் கருத்துகளை
கூறலாம்…
நான் இந்த இடத்தில் முன்கூட்டியே விமரிசனம் எதையும்
முன்வைக்கவில்லை… முதலில் பேட்டியை பாருங்கள்.
விமரிசனத்தை பின்னூட்டங்களின் மூலம் வைத்துக்
கொள்ளலாம்….
…
…
———————————————————————————————–



வாசன் மருத்துவ மனை ரெய்டு/ கண்டுபிடிப்புகள் / வழக்கு
எல்லாம் என்ன ஆயின என்று குருமூர்த்தி சார் சொல்ல வேண்டும்.
அவையும், இவர் கண்டுபிடித்தவை தானே ? சிதம்பரம் வழக்கில்
காட்டப்படும் வேகம் அதில் இல்லாதது ஏன் ?
சம்பந்தப்பட்டவர்கள் பாஜகவில் சேர்ந்து விட்டார்களா ?
bsnl தொலைபேசி எக்ஸ்சேஞ்சில் திருட்டு கனெக் ஷன் எடுத்த
மாறன் பிரதர்ஸ் வழக்கு நீண்ட நாட்களாக/வருடங்களாக கிடப்பில் கிடக்கிறதே.
அதுவும் குருமூர்த்தி சார் கண்டுபிடித்து ரிப்போர்ட் செய்தது தானே ?
அதில் 400 கோடி ரூபாய் என்று துவக்கத்தில் சொல்லப்பட்டதை,
மத்திய அமைச்சர் ர.ச.பிரசாத் ஒன்றரை கோடியளவிற்கு குறைத்து விட்டார். பூசணிக்காய் எப்படி கடுகானதோ …?
அதையும் கூட குருமூர்த்தி சாரிடம் கார்த்திகைச் செல்வன் கேட்டிருக்கலாம்.
.
ஐயா, மாறன் ஒழுங்கற்ற 400;லயன் எக்ஸ்சேஞ் பற்றிய விவகாரத்தில் எவ்வளவு அரசுக்கு நஷ்டம் என்று கண்டறிந்து FIR-ல் சேர்க்க முற்பட்டார்கள்; ஆனால் எவ்வளவு அழைப்புகள் அந்த தடத்தின் வழியே போனது என்பதற்கு எந்த வித ஆவணமும் இல்லை. அவர்கள் உத்தேசமாக இவ்வளவு அழைப்புக்கள் என்று சேர்க்க முயன்ற பொது அதற்கு என்ன ஆதாரம் என்று மாறன் தரப்பு கேட்டதால், அந்த லயனை அமைத்தது நிச்சயம்; குறைந்தது அதற்கான செலவு அரசுக்கு நஷ்டம் தானே என்று தான் அந்த ஒரு கோடி சில்லறை சேர்த்தார்கள் என்று படித்த ஞாபகம். குருமூர்த்தி போன்றவர்களும் வழக்கு பதிவு ஆவது முக்கியம் அதற்காகவேனும் நீதி மன்ற படி ஏறட்டும், அவர்கள் குற்றவாளி என்று நீதி மன்றம் சொல்லட்டும் என்று அதை தொடராமல் விட்டார்கள் என்றும் நினைவு.
.
Madhavan Sekhar,
திரு.குருமூர்த்தி அவர்கள் எழுப்பிய
ஒரிஜினல் புகாரில், தயாநிதி மாறன்
தன்னுடைய அடையாறு வீட்டிலிருந்து,
தேனாம்பேட்டையில் இருந்த தனியார்
தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சிக்கு
தரைக்கு அடியே (underground) கேபிள் பதித்து,
ரகசிய தொடர்பு கொடுத்து, கோடிக்கணக்கான
ரூபாய்க்கு (சுமார் 400 கோடி ) bsnl – ஐ
ஏமாற்றியதாக கூறி இருந்தார்.
இந்த அடிப்படையில் தான் விசாரணை
துவங்கியது.
ஆனால், இறுதியில், திரு.ர.ச.பிரசாத்
காலத்தில், 400 கோடி ரூபாய்
ஏமாற்றியதற்கான கிரிமினல் புகாரை,
வெறும் ஒன்றரை கோடி ரூபாய்
நஷ்டம் ஏற்படுத்தியது போன்ற
சிவில் வழக்காக மாற்றப்பட்டு விட்டது.
த.மாறன் வீட்டிலிருந்து தேனாம்பேட்டை
சன் தொலைக்காட்சி அலுவலகம்
(அண்ணா அறிவாலயம்) வரையில் போடப்பட்ட
underground cable இப்போதும்
பூமிக்கு அடியில், அப்படியே தான் இருக்கும்…
இந்த கிரிமினல் குற்றத்திற்கு அதுவே
போதுமான, பலமான சாட்சியமாக இருக்கும்.
ஆனாலும் வேண்டுமென்றே வழக்கு
நீர்த்துப்போக வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த பெரிய மோசடி வழக்கு,
நீர்த்துப்போனதால் –
யாருக்கு, என்ன, பயன் கிடைத்தது…?
திரு.குருமூர்த்தி அவர்கள் இதை
மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பது
நியாயமா…? அவர் யாருக்காக
மௌனம் காக்கிறார் … ?
ரகுராம் ராஜன் போய் எத்தனை வருடங்கள் ஆயிற்றூ ?
அதற்குப்பிறகு இவர்களுக்கு வேண்டியவர்களை தானே
ரிசர்வ் வங்கி கவர்னராக நியமித்தார்கள் ?
நிலைமையை ஏன் சீர்திருத்தவில்லை ?
அவர் போட்டது தவறான உத்திரவுகள் என்றால் அந்த
தவறான உத்திரவுகளை ஏன் திருத்தவில்லை ?
பொருளாதார வீழ்ச்சிக்கு இன்னும் எத்தனை காலம்
ரகுராம் ராஜனையே காரணம் காட்டப்போகிறார்கள் ?
Yes your are 100 % correct. Instead of finding the solution, they are just put blame on others.
கே.டி.பிரதர்ஸ் + விசாரணை அமைப்புகள் v/s திரு.குருமூர்த்தி + உண்மை = முடிவு ஆகஸ்ட் 17 2015
கெட்டிக்காரனின் பாெய்யம் புரட்டும் By/ எஸ்.குருமூரத்தி டிசம்பர் 10 – 2015
மாறன் சகாேதரர்கள் வழக்கு திரு.குருமூர்த்தி அவர்களுக்கு இதில் திருப்திதானா ..ஏப்ரல் 4 – 2017
இந்த மூன்று முந்தைய இடுகைகள் தற்பாேது மறு பார்வைக்கு ….!
மனிதன் மாறிவிட்டான் …அவன் ….?
செல்வராஜன்,
உங்கள் உழைப்புக்கு, reference-க்கு நன்றி.
—————-
பாசம்… பந்த பாசம்… கட்சி நண்பர்களின்
மீதுள்ள பாசம் பார்வையை மறைக்கிறதோ…?
அவர்கள் செய்யும் தவறுகள் மட்டும் இவருக்கு
உறுத்தவே இல்லையே… துரியோதனன் கும்பல்
செய்த தவறுகள் எதுவும் திருதிராஷ்டிரர்
சிந்தையில் உறுத்தாதது போல்…!!!
ஆனால், மனசாட்சி நிச்சயம் உறுத்தும்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
.
–