…
…

…
வர வர தொலைக்காட்சிகளில் நடத்தப்படும்
வெட்டி விவாதங்களின் மீது ஏற்படும் வெறுப்பின் விளைவால்-
நம்மையும் அறியாமல், சில நல்ல நிகழ்ச்சிகளையும்
தவற விட்டு விடுகிறோம்.
அத்தகைய ஒரு நிகழ்வு அண்மையில் நியூஸ்-7
தொலைக்காட்சியில் திரு.சுகி சிவம் அவர்களுடைய
ஒரு பேட்டி…
பலர் இதை பார்க்கத் தவறி இருப்பார்கள் என்பதால்,
அப்போதே இதனை சேமித்து வைத்திருந்தேன். உரிய
தருணத்தில் இந்த தளத்தில் பதிவிட வேண்டுமென்று…!
இன்று விடுமுறை நாள் தானே –
விவரமாக முழு பேட்டியையும் பாருங்கள்….
தவற விடக்கூடாத ஒரு நல்ல பேட்டி.
மதம் வேறு –
ஆன்மிகம் வேறு –
பலர் ஆன்மிகத்தை – மதத்தோடு
சேர்த்து குழம்புகிறார்கள்.
மதம் என்கிற எல்லை எங்கே முடிகிறதோ …
அங்கே துவங்குவது தான் ஆன்மிகம் …
ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் என்கிற
வித்தியாசமெல்லாம் ஆன்மிகத்தில் கிடையாது.
ஆன்மிகம் எல்லா மதங்களுக்கும் பொதுவானது…
மதங்களை கடந்து ஆன்மிகத்திற்கு செல்வது
மனிதரின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது.
மதம் என்பது வீட்டை அடையும் ஒரு வழி..தெரு.
தெரு முடிந்தால் தான் தான் வீட்டிற்குள் வர முடியும்.
அது போல், வீட்டை நெருங்கும் அளவிற்கு தான் அது தேவை.
வீட்டிற்குள் செல்லும்போது தான்
கடவுளின் உண்மையான தரிசனம்-அனுபவம் கிடைக்கிறது.
பக்தி மார்க்கத்தில்,
மனிதரே கடவுளிடம் நேரிடையாக தொடர்பு கொள்ள முடியும்
என்கிற நிலையில் – இடையே சாமியார்களின் தேவை ஏன்…?
சாமியார்களின் தலையீட்டால், மனிதன் இறைவனை
மறந்து, சாமியார்களை கொண்டாடத் துவங்கி விடுகிறான்…!!!
….
….
ஏற்கெனவே என்னளவில் நான் தீர்மானித்துக் கொண்டு,
செயலாற்றி வரும் பல கருத்துகள், இந்த சிந்தனையாளரின்
மூலம் உறுதிப்படுத்தப்படுவது – எனக்கு மிகவும்
மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும் தருகிறது.
யாம் பெற்ற பயன்களை பெறுக இவ்வையகம் …
….
….
.
————————————————————————————————————



K krishnamurthy beautifully said….banana is spirituality while the skin is the religion. We are holding the peel ignoring the fruit….
An apt explanation between religion and spirituality.