” செவிடர்கள் ” – மோடிஜி அரசு மீது டாக்டர் சுப்ரமணியன் சுவாமி கடும் தாக்குதல்…



News X தொலைக்காட்சிக்கு டாக்டர் சுப்ரமணியன் சுவாமி
நேற்றிரவு ஆங்கிலத்தில் அளித்துள்ள பேட்டியில், பொருளாதார
விஷயங்களுக்காக மோடிஜி அரசை மிகக்கடுமையாக தாக்கிப்
பேசி இருக்கிறார்…

– இந்த பொருளாதாரத்தை சரிவிலிருந்து நாட்டை மீட்க
புத்தி, தைரியம் – இரண்டும் தேவை. இவர்களிடம்
அது இரண்டுமே இல்லை….

அவரது பேட்டியிலிருந்து – சில ஹைலைட்ஸ் –

– இந்த பொருளாதாரத்தை சரிவிலிருந்து நாட்டை மீட்க
புத்தி, தைரியம் – இரண்டும் தேவை. இவர்களிடம்
அது இரண்டுமே இல்லை….

– பிரதமர் மோடி அவர்களுக்கு பொருளாதாரத்தைப்பற்றி தெரியாது.
அவர் பொருளாதாரத்தை முறைப்படி கற்றவரில்லை.

– 5 ஆண்டுகளின் ஜிடிபியை இரட்டிப்பாக்குவது,
2024-ல் 5 ட்ரில்லியன் பொருளாதாரமாகும் என்றெல்லாம்
இலக்கு வைத்ததை சுத்தமாக மறந்து விடலாம்.

– நான் எவ்வளவோ கூறியும் இந்த அரசு காதில் வாங்கவில்லை.
கடந்த 5 ஆண்டுகளாக நான் எதைக் கூறினாலும் அவர்கள் காதில்
வாங்கவே இல்லை…

– எனவே, இனியும் என் கருத்துகளை இவர்களுக்கு விற்க நான்
தயாராக இல்லை. அவர்களுக்கு தேவைப்பட்டால் அவர்களே
என்னிடம் வந்து ஆலோசிக்கட்டும்…
நியூஸ் எக்ஸுக்கு டாக்டர் சு.சுவாமி நேற்று அளித்துள்ள பேட்டி –

———————————–

டாக்டர் சு.சுவாமி பேட்டியின் தமிழாக்கம் –

இப்போது எரியும் இந்தப் பிரச்சினை செய்தித்தாள்களில்
கட்டுரையாக வருகிறது, நாட்டின் பல்வேறு பேச்சுகளிலும்
இது பேசப்பட்டு வருகிறது,

ஆனால் எனக்கு இது புதிதல்ல. நான் கூறிவருவது
என்னவெனில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சில கால
வரம்புகளை நிர்ணயித்தது.
அதனை நாம் விரவச்செய்ய முடியவில்லை. திரு.ஜேட்லி
இதனை செய்ய முடியவில்லை காரணம் அவருக்கு
பொருளாதாரம் தெரியாது. அவர் பயிற்சி பெற்ற
பொருளாதாரவாதி அல்ல.

பிரதமரும் கூட முறைப்படி பொருளாதாரம் கற்றவர் அல்ல.

ஆகவே நான் என்ன கூற வருகிறேன் என்றால் அந்தரத்தில்
தொங்குவதன் தொடக்கத்தில் இருக்கிறோம். 2015-ல்
இதைத்தான் நான் தி இந்து (ஆங்கிலம்) செய்தித்தாளில்
கட்டுரையாக எழுதியிருந்தேன்.

அதுமுதலே நான் பல எச்சரிக்கைகளை விடுத்தேன்
பிரதமருக்கு எழுதினேன் ஆனால் என்ன நடந்தது எனில்
2015 முதலே நம் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது.

இப்போது 5% ஆகக் குறைந்து விட்டது, அதுவும் தற்போதைய
விலை நிலவரங்களின் படி 5%, ஆனால் மாறா விலை
(Constant prices) நிலவரங்களின் படி 3.5% வளர்ச்சிக்கு மேல்
இருக்காது என்றே நினைக்கிறேன். இது உண்மையான வீழ்ச்சியாகும்.

அதாவது இதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

சிறு மற்றும் குறுந்தொழில்கள் மூடப்பட்டு வருகின்றன,
வங்கிகளும் சரிவைச் சந்தித்துள்ளன, வங்கிகள் அல்லாத
நிதி நிறுவனங்கள் மூடப்படும் சூழ்நிலையில் இருக்கின்றன.
ஆகவே நாம் பொருளாதார சரிவைச் சந்தித்துக்
கொண்டிருக்கிறோம்.

இந்தச் சூழ்நிலையில் 5 ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற
இலக்கு, அதாவது 5 ஆண்டுகளின் ஜிடிபியை இரட்டிப்பாக்குவது,
2024-ல் 5 ட்ரில்லியன் பொருளாதாரமாகும் என்று இலக்கு
வைக்கின்றனர். இது ஆண்டுக்கு 14.5% வளர்ச்சி விகிதமாகும்.
ஆண்டு ஒன்றிற்கு 14.5% வளர்ச்சியில் சென்றால்தான் 5
ட்ரில்லியன் பொருளாதார இலக்கை எட்ட முடியும்.

ஆனால் உங்கள் கணக்கீட்டின் படியே 5% வளர்ச்சியையே
தாண்ட முடியவில்லையே? மேலும் வரும் காலமும் ட்ரெண்ட்
கீழ்நோக்கிச் செல்கின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்
தவறுகளை சரி செய்யாமல் நாம் இப்போது விலை கொடுத்துக்
கொண்டிருக்கிறோம்.

இது குறித்து புத்தகம் ஒன்று எழுதியுள்ளேன் அது விரைவில்
வெளிவருகிறது, அதில் சரிவை எப்படி சரி செய்யலாம் என்று
தெரிவித்துள்ளேன்.

நான் எவ்வளவோ கூறியும் இந்த அரசு காதில் வாங்கவில்லை.
கடந்த 5 ஆண்டுகளாக நான் எது கூறினாலும் அவர்கள் காதில்
வாங்கவே இல்லை.

ஆகவே உடனடியான தீர்வுகளை நான் ஏன் சொல்ல வேண்டும் ?
என் கருத்துகளை விற்க நான் தயாராக இல்லை.

அவர்களுக்கு தேவைப்பட்டால் என்னிடம் வந்து ஆலோசிக்கட்டும்;
நான் அவர்களுக்கு தெரிவிப்பேன்.

பொருளாதாரத்தில் ஒரு அளவு கோல் என்பதில்லை.
இது பல அளவுகோல்களை ஒருங்கிணைப்பதாகும்.
ஏனெனில் பெரும்பொருளாதாரம் என்பது பொதுச்சமனமாக்க
ஒழுங்கமைப்பு.

நான் சில விஷயங்களைக் கூறினேன்..
உதாரணமாக வருமானவரியை ரத்து செய்தல்,
வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்றேன்.
பிக்ஸட் டெபாசிட்டுக்கு 9% ஆக வட்டியை அதிகரிக்கவும்
என்றும் ஆலோசனை தெரிவித்தேன். ஆனால்
இவையெல்லாம் அவர்கள் காதில் விழவில்லையே.

எனவே 2015 முதலே நான் கூறிவருவது என்னவெனில்
பொருளாதாரம் மந்த நிலையை நோக்கிச் சென்று கொண்டே
தான் இருக்கும் என்பதே.
2015க்கு முன்னரே இதற்கான தீர்வை நோக்கி தொடங்கி
யிருக்க வேண்டும்.

வெறுமனே வங்கிகளை இணைப்பது
மூலம் இதனைச் சரி செய்து விட முடியாது,
ஏனெனில் இதுவும் வேலையின்மையைத்தான் உருவாக்கும்.

ஆட்சி அதிகாரங்கள் மூலம் இதனை
சரி செய்து விட முடியுமா?

இது பொருளாதாரம் பற்றிய புரிதலின்மையை பறைசாற்றுகிறது.
ஆகவே நான் கூறுவதெல்லாம் அந்தரங்கத்தில் தொங்கும் நிலை
கீழே விழுவதில்தான் முடியும்.

.
———————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to ” செவிடர்கள் ” – மோடிஜி அரசு மீது டாக்டர் சுப்ரமணியன் சுவாமி கடும் தாக்குதல்…

  1. Prabhu Ram's avatar Prabhu Ram சொல்கிறார்:

    டாக்டர் சு.சுவாமி கூறும் கருத்துகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையாகவே
    இருக்கின்றன. மோடிஜி அரசு அவரை ஏற்க மறுப்பதன் பின்னணி
    தான் மர்மமாக இருக்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.