…
…

…
கொஞ்ச காலம் முன்பு இந்த வலைத்தளத்தில்
இந்தியாவில் கொள்ளையடித்து, அமெரிக்காவில் யுனிவர்சிடி கட்டிய கடைந்தெடுத்த அயோக்கியனின் கதை…
– என்கிற தலைப்பில் அமெரிக்காவில்
“யேல் யுனிவர்சிடி” உருவான கதையைப்பற்றி
விவரமாக எழுதியிருந்தேன்.
இப்போது, அதற்கு சற்றும் குறையாத இன்னொரு
வெள்ளைக்கார துரை (கவர்னர்…!!!) பற்றிய தகவல்
வெளிவந்திருக்கிறது…( .என்னை இந்த இடுகையை எழுதத்
தூண்டியது தினமலர் செய்தித்தளத்தில் வெளிவந்த
சில தகவல்கள்… தினமலருக்கு நன்றி….)
இவரது பெயருடனேயே இவர் கொள்ளையடித்த
பணத்தில் வாங்கிய வைரத்தையும் சேர்த்து விட்டது
சரித்திரம்….!!!
————
Thomas “Diamond” Pitt
(5 July 1653 – 28 April 1726) was an English merchant
involved in trade with India, the President of Madras
and a Member of Parliament.
————-
1674-ஆம் ஆண்டு, தன்னுடைய 21-வது வயதிலேயே
முதல் தடவையாக, ஈஸ்ட் இண்டியா கம்பெனி வேலையுடன்
இந்தியா வந்திருக்கிறார் இந்த வெள்ளைக்கார
கொள்ளையர் தாமஸ் பிட்.
அப்போது, ஒரிசாவின் பாலாசூர் நகரில் தங்கியிருந்த,
தாமஸ் பிட், தான் பணியாற்றி வந்த கிழக்கிந்திய கம்பெனியின்
ஒப்புதலை பெறாமலே, பிற நாடுகளுடன் வணிகத்தில்
ஈடுபட்டிருக்கிறார். இதனால், இங்கிலாந்திலிருந்த கம்பெனி
மேலிடத்திற்கும், இவருக்கும் அடிக்கடி மோதல்
ஏற்பட்டிருக்கிறது.
அண்ணனை ஒடுக்க, கிழக்கிந்திய கம்பெனி பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. ஆனால், அவை
அனைத்தையும் தன்னுடைய சாமர்த்தியத்தால்(…..!!!)
வெற்றிகரமாக முறியடித்திருக்கிறார் தாமஸ் பிட்.
1683-ல், இங்கிலாந்து சென்ற, பிட்டை, மடக்கிப் பிடித்து,
கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான, அவரது செயல்களுக்காக,
அந்தக்கால 400 பவுண்டு அபராதம் விதித்தனர். இன்றைய
மதிப்பில், இது 33 ஆயிரம் ரூபாய் தான். ஆனால், 1683-ல்
இதன் மதிப்பு எவ்வளவு….?
மதிப்பிட முடியவில்லை…எக்கச்சக்கம்…!!!
ஆனால், இந்தியாவில் அதைவிட எக்கச்சக்கமாக சம்பாதித்து
விட்டதால், அபராத தொகையை எந்தவித சிரமமும் இன்றி
சுலபமாக கட்டி விட்டார் அண்ணன் பிட்.
மேற்கொண்டு – சில காலம் இங்கிலாந்திலேயே தங்கியிருந்து,
நிறைய நிலங்களை வாங்கிப் போட்டு, உள்ளூர்ப் பெரிய
மனிதர்களில் ஒருவராகி மிஸ்டர் தாமஸ் பிட்,
பாரளுமன்ற உறுப்பினராகவும் (எம்.பி.,யாக)
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்…. முழுநேர அரசியல்வாதி…!!!
பத்தே வருடங்களில், தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்ட
தாமஸ் பிட், கிழக்கிந்தியா கம்பெனியுடன் சமரசம்
செய்துகொண்டு, 1693-ல் மீண்டும் இந்தியா வந்திருக்கிறார்.
அவரது திறமைகளை இப்போது நன்கு புரிந்துகொண்ட (…!!!)
கிழக்கிந்திய கம்பெனி, இந்த முறை அவரை சென்னைக்கு
அனுப்பியது. சென்னைக்கு வந்த அடுத்த ஆண்டே,
புனித ஜார்ஜ் கோட்டையின், ( இப்போ நம்ம சி.எம்.
இருக்கிற கோட்டை தான்….) கவர்னராக நியமிக்கப்பட்டார்.
முகலாய பேரரசர், அவுரங்கசீப்பின் தளபதியான,
தாவூத்கான், 1702ல், புனித ஜார்ஜ் கோட்டையை
முற்றுகையிட, அதை வெற்றிகரமாக முறியடித்தார்
தாமஸ் பிட்.
தாமஸ் பிட்டின் ஆட்சி காலத்தை, சென்னையின் பொற்காலம்
என்றும் கூறுகின்றனர், சில வரலாற்று ஆய்வாளர்கள்.
மடமடவென்று வேலையில் இறங்கிய தாமஸ் பிட்,
சென்னை நகரை முதன் முறையாக, துல்லியமாக சர்வே
எடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார்…
1708-ல், திருவொற்றியூர், கத்திவாக்கம், வியாசர்பாடி மற்றும்
சாத்தங்காடு ஆகிய கிராமங்களை, தோற்றுப்போன
தாவூத்கானிடமிருந்து பெற்று (பிடுங்கிக்கொண்டு…? ),
அவற்றை சென்னையுடன் இணைத்தார், தாமஸ் பிட்.
இந்தியாவில் கிடைத்த பெரிய வைரங்களில்,
முக்கியமானது, ‘ரீஜென்ட்!’ இதற்கு, மற்றொரு பெயர்,
பிட் வைரம்….! இந்த வைரம், தற்போதைய தெலுங்கானா
மாநிலத்தில் உள்ள, கோல்கொண்டாவில் உள்ள, பர்க்கால்
சுரங்கத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
வெட்டி எடுத்தபோது, 410 காரட்டாக இருந்த இந்த வைரத்தை,
கவர்னர் தாமஸ் பிட், 1701-ல், 48 ஆயிரம் பகோடாக்கள் விலை
கொடுத்து வாங்கி இருக்கிறார்.
பின், இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று பட்டை தீட்டப்பட்டதும்,
இது 137 காரட்டாக எடை குறைந்தது… ஆனால் மதிப்பு ஏறியது.
“பிட் வைரம்” என்று அழைக்கப்பட்ட இதை, பிரெஞ்ச் அரசுக்கு,
1.35 லட்சம் பவுண்டுகளுக்கு (இன்றைய மதிப்பு, 1.13 கோடி
ரூபாய்) விற்று, மிகப்பெரிய லாபம் சம்பாதித்தார்.
பிரெஞ்ச் மன்னரால், 1717ல், ‘ரீஜென்ட்’ என்று பெயர்
மாற்றப்பட்ட இந்த வைரத்தைதான், நெப்போலியன் போனபார்ட்
தன் வாளின் கைப்பிடியில் பதித்து வைத்திருந்தார்.
‘ரீஜென்ட்’ வைரம், தற்போது, பிரான்ஸ் தலைநகரான,
பாரீஸ் நகரில் உள்ள, ‘லுாவர்’ அருங்காட்சியகத்தில்
பத்திரமாக பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
பதவிக் காலம் முடிந்ததும், பெரும் செல்வத்துடன்,
1709ல் இங்கிலாந்து திரும்பிய, தாமஸ் பிட், பல பகுதிகளில்
அரண்மனை வீடுகளை வாங்கி, ராஜா மாதிரி
வாழ்ந்திருக்கிறார்.
அப்போதும், சும்மா இருக்காமல், மீண்டும், எம்.பி.யாகி,
இங்கிலாந்து பார்லிமென்டில் நுழைந்து விட்டார்.
இதனிடையே, அவர் மகனும், எம்.பி.,யாகி விட்டதால்,
அப்பாவும், மகனும் சேர்ந்தே பார்லிமென்டுக்கு
சென்று வந்தனர்…!!!
இவரது பேரனான, வில்லியம் பிட் சீனியரும்,
கொள்ளுப் பேரனான, வில்லியம் பிட் ஜூனியரும்,
இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர்கள்….!!!
( கொள்ளைக்காரரின் கொள்ளுப்பேரன் – இங்கிலாந்தின்
பிரதமர்….!!!)
Every Sinner has a potential of becoming Saint…???
இவரது இறுதி நாட்களில், இவர் ஜமைக்காவின்
கவர்னராக கூட நியமிக்கப்பட்டார். ஆனால், சில சொந்த
காரணங்களால், அந்த பதவியை தாமஸ் பிட் ஏற்கவில்லை.
சரித்திரம்-வரலாறு பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கிக்
கொண்டிருக்கிறது… தோண்டித்தோண்டி பார்த்தால், பல
அதிசய உண்மைகள் வெளிப்படுகின்றன.
பல ஆண்டுகளுக்கு முன், என் இளமைக் காலத்தில் – நான்
டெல்லி யுனிவர்சிடியில் பி.ஏ. வகுப்பில்,
பிரிட்டிஷ் ஹிஸ்டரியை விருப்ப பாடமாக எடுத்து படித்தபோது,
பிரிட்டனின் சரித்திரத்திலேயே வயது குறைந்த பிரதமராக –
தனது 28 வயதிலேயே பிரதமராக பதவியேற்றார் ஜூனியர் பிட்
என்று படித்தபோது அசந்து போனேன்…
அவருக்கு இவ்வளவு சுவாரஸ்யமான பின்னணிகள் வேறு இருந்தன
என்பது அப்போது எனக்குத் தெரியாமல் போனது…!!!
.
———————————————————————————————————



குறைந்த வயதில் ஜாமீனில் பலமுறை இருந்தும் பாராளுமன்ற உறுப்பினராக சிவகங்கை மக்கள் தேர்ந்தெடுத்த கார்த்தி சிதம்பரத்தை மனதில் வைத்து இந்த இடுகை எழுதப்பட்டதா என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன் கா.மை. சார்.
ஏனென்றால் இடுகை ப.சிதம்பரத்துக்குப் பொருந்துவதாக என் மனது சொல்கிறது.
புதியவன்,
// இன்றைய கொள்ளையர்களின்
அன்றைய வெள்ளைய குரு …!!! //
இது இடுகையின் தலைப்பு.
உங்கள் வசதிக்கு,
வெறுப்பிற்கு,
அபிமானத்திற்கு – தகுந்தாற்போல்
யாரை வேண்டுமானாலும் நீங்கள் மனதில்
நினைத்துக் கொள்ளலாம்.
———-
உங்கள் பின்னூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட –
இன்னொரு விஷயம் …
இன்றைக்கு உச்ச பதவிகளில் இருப்பவர்களில்
(அரசியல்வாதிகள்..) யோக்கியமான
ஒரு 10 பேர்வழிகளின் பெயரை
உங்களால் தர முடியுமா…?
ஆல் தி பெஸ்ட்… 🙂 🙂 🙂
.
வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//இன்றைக்கு உச்ச பதவிகளில் இருப்பவர்களில் (அரசியல்வாதிகள்..) யோக்கியமான ஒரு 10 பேர்வழிகளின் பெயரை உங்களால் தர முடியுமா…? //
நான் எழுதினது இப்போது நடக்கும் நிகழ்வுகளை வைத்து (தலைமறைவு ஆன முன்னாள் மத்திய அமைச்சர் ப.சி பற்றித்தான்).
உச்ச பதவி என்று வைத்துக்கொள்ள வேண்டாம். அரசியலில் பெரிய பதவிக்கு வரும் வாய்ப்புள்ள லட்சம் பேரில், யோக்கியமான 5 பேரைக் கண்டுபிடிப்பதே சாத்தியமில்லாத வேலை எல்லோருமே, ஆரம்பகட்ட காலத்தில் 5க்கும் 10க்கும் அலைந்துகொண்டிருந்தவர்கள், பதவிகளுக்கு வந்த உடனேயே தானோ அல்லது தன் ரத்த உறவினர்களோ ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாக ஆகி விடுகின்றனர். ‘வெத்துப் பயலுகள்’ என்று நான் நினைப்பவர்கள் எல்லோரும் கல்லூரிகளுக்கு அதிபதியாகின்றனர், இல்லைனா தன் ரத்த சொந்தங்கள் அனைவரையும் சிகரெட், சாராய அதிபர்களாக ஆக்கிவிடுகின்றனர். இதெல்லாம் ஊழல் செய்யாமல் சாத்தியமா? தமிழ்நாட்டிலேயே இருக்கும் அரசியல்வாதிகள் (கவுன்சிலர் உட்பட) இப்படிப்பட்டவர்கள்தாம். அப்போ அகில இந்திய அளவில்…
நீங்களும் சாதாரண ஜனங்களில் ஒருவனாகிய நானும் வாழ்க்கை முழுவதும் உழைத்தாலும் ஒரு வகுப்பறைக்குக் கூட அதிபராக முடியாது. அப்படி இருக்கிறது நம் இந்திய அரசியல்.