…
…

…

இந்த “முகரக்கட்டை”களை பாருங்கள்… இந்த வயதிலேயே இவ்வளவு என்றால் – இவர்கள் “வளர்ந்த” பிறகு என்னவெல்லாம் செய்யத் துணிவார்கள்… ???
…
சட்டம் தன் கடமையை செய்யும்
என்று சொல்லிச் சொல்லி, கேட்டு, கேட்டு
அலுத்து விட்டது. 5 வருடம் 10 வருடம்
என்று வழக்குகள் வாய்தா வாங்கியும், கீழ்க்கோர்ட்,
மேல் கோர்ட் என்று இழுத்தடித்துக் கொண்டேயும் இருக்கும்…
கொலைகார மிருகங்கள் – இடையில் ஜாமீனில்
வெளியே வந்து மேலும் மேலும் தங்கள் ‘திறனை’
செயல்படுத்தி நிரூபித்துக் கொண்டே இருக்கும்.
ரவுடித்தனமும், கொலைகளும் அரங்கேறிக்கொண்டே
இருக்கும்.
மீண்டும் மீண்டும் கைது… மீண்டும் மீண்டும் ஜாமீன்.
மீண்டும் மீண்டும் பொறுக்கித்தனம்….
இதற்கென்ன முடிவு… விடிவு…?
நமது நீதிமன்றங்கள் செயல்படும் விதமும், முறையும்
நமக்கு நன்கு தெரியும். அவற்றை குறை சொல்லி பயனில்லை.
சட்டங்களில் அத்தனை ஓட்டைகள்…!
நீதிமன்ற முடிவுகள் கிடைப்பதற்கு முன்னால்,
இந்த சமூகத்திற்கு கொஞ்சம் முதலுதவி தேவைப்படுகிறது.
எனக்கு செயல்பட வாய்ப்பு கிடைத்திருந்தால் –
என் கைகளில் அதிகாரம் இருந்தால் –
நான் என்ன செய்திருப்பேன்… ???
நீதித்துறை செயல்படும்போது செயல்படட்டும்.
உடனடியாக – என்னால் இயன்ற முதலுதவியை
நான் கொடுக்கிறேன் – என்று செயல்பட்டிருப்பேன்.
நான் செய்ய விரும்பியது –
வேறு யாராலோ நிறைவேறும்போது –
“சபாஷ் – தொடருங்கள் இதை” –
என்று பாராட்டத் தோன்றுகிறது…
மாவுக்கட்டு ட்ரீட்மெண்ட் தொடரட்டும்.
ரவுடித்தனம் கொஞ்சமாவது குறைய இது உதவும்.
இவர்களின் “செயலாற்றும் திறன்” -தற்காலிகமாவது
முடக்கப்படும் அல்லவா…?
இதைப்பார்க்கும் மற்ற பொறுக்கிகளுக்கு –
கொஞ்சமாவது அச்சம் ஏற்படும் அல்லவா….?
சமூக நலனில் அக்கறையும், பொறுப்பும் உடைய
பொதுமக்கள் அனைவரும் நிச்சயம் இதை வரவேற்பார்கள்.
.
———————————————————————————————————-



சட்டம் தன் தண்டனையை கொஞ்சம் தாமதமாகவோ அல்லது மறுக்கப்பட்டு விடும் முன்பு கழிப்பறைகள் பெரும்பாலும் இன்ஸ்டாண்ட் தண்டனையை சிறிய அளவிலாவது கொடுத்து விடுவது உண்மையில் வரவேற்கதக்கது தான், சாதரண மக்கள், நேர்மையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களுக்கு இது போன்ற அச்சம் ஏற்பட்டு விடாதவாறு அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்துதல் அவசியம்.
ரவுடிகள், பொறுக்கிகளுக்கு இதை விட கடுமையான இன்ஸ்டாண்ட் தண்டனை கிடைத்தால் ஓரளவுக்கு குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது.
மாவுக்கட்டு 2 மாதங்களில் சரியாகிவிடுமே…. இதற்கு வேறு சரியான தண்டனை கிடையாதா? குதிகால் நரம்பு கட் போன்று பாத்ரூமை வடிவமைக்க இயலாதா? அதாவது எளிய ஆனால் பெர்மனெண்டாக அவங்களை செயலற்றவங்களாகச் செய்ய முடியாதா? சைனாக்காரங்க கிட்ட கேட்ட ஐடியா தருவாங்க.
எது அவங்களுக்கு இயல்பான உறுப்போ (வலது கை, வலது முட்டி போன்று) அவைகளை பெர்மனெண்ட் ரிப்பேர் செய்தால் போதும்னு நினைக்கிறேன்.
ஒருத்தனுக்கு கட்டு இல்லையேன்னு வருத்தம் எனக்கு…அவரும் இது சம்பந்தபட்டவர் என்றே தோன்றுகிறது
.
தேவலையே…
இந்த மாவுக்கட்டு விஷயத்தில் –
நான் தான் தீவிரவாதி என்று நினைத்தேன்.
என்னைவிட அதி தீவிரவாதிகள் நிறைய பேர் இருக்கிறீர்களே…!!!
இந்த மாதிரி ஆதரவு இருப்பதை சம்பந்தப்பட்டவர்கள்
தெரிந்து கொள்வது நல்லது.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இது தீவிரவாதம் இல்லை, களையெடுப்பது. இன்னும் சொல்லப்போனால் பயிருக்கு பாதிப்பு அடைவதற்கு முன் கலையெடுப்பது இன்னும் சாலச்சிறந்தது