…
…
…
…
ஹிமாசல் பிரதேசம் அற்புதமான, அழகிய மாநிலம்.
அங்கே பயணம் போகும்போது, மனதிற்கு மிகவும்
ஆனந்தமாகவும் உற்சாகமாகவும் இருக்கும். ஆனால் –
சண்டிகாரிலிருந்து புறப்பட்டு, ஹிமாசல் பிரதேசில்
குலு-மணாலியிலிருந்து ரோதங் பாஸ் வழியே
லடாக் செல்லும் பாதை மிகவும் ஆபத்தானது.
National Highway என்றாலும் கூட, அதிகம் அகலம் இல்லாத,
அதிக வளைவுகளைக் கொண்ட பாதை.
ஒரு பக்கம் உயர்ந்த மலைச்சரிவுகள்… இன்னொரு பக்கம்
அதல பாதாளத்தில் அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும்
பியஸ், ஜீலம் போன்ற ஜீவநதிகள். அழகும், பயமும் ஒருசேர
அனுபவிக்க வேண்டுமானால், இங்கே அவசியம் பயணிக்க
வேண்டும்… ஆனால் –
முந்தாநாள் –
4-5 ஆண்டுகளுக்கு முன்னர் நான் சென்ற அதே பாதையில்,
பெரிய அளவிலான -ஒரு நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது….
…

சென்ற வருடம் இதே போல் மழைக்காலத்தில்
இந்த பாதையில் நிகழ்ந்த சில நிலச்சரிவுகளின் வீடியோ கீழே –
இந்த நிலச்சரிவுகள் ஏற்படும் நேரத்தில், அங்கே ரோட்டில்
வாகனங்கள் எதாவது இருந்திருந்தால் அவற்றின் கதி என்னவாகி
இருக்கும் என்று யோசிக்கவே பயமாக இருக்கிறது….
வாகனம் அங்கேயே முடக்கப்பட்டிருந்தால் –
உள்ளே இருந்தவர்கள் சட்னியாகி இருப்பார்கள்.
உருட்டித் தள்ளப்பட்டிருந்தால், கீழே பாதாளத்தில் ஓடும்
பியாஸ் நதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்கள்….
…
…
மழைக்காலத்தில் ஹிமாசல், உத்தராகண்ட் போன்ற
பிரதேசங்களில் பயணம் செய்வதே ஆபத்தானது…
உள்ளூர்க்காரர்கள் எப்படியாவது சமாளித்துக் கொள்வார்கள்.
ஆனால், வெளியிலிருந்து போகிறவர்கள் – மழைக்காலங்களில்
இந்த இடங்களுக்கான பயணங்களை தவிர்க்க வேண்டும்.
கீழே நேற்றிரவு(சனிக்கிழமை) குலுவின் அக்கரா பஜார்
அருகே பியாஸ் நதியின் மேலே இருந்த ஒரு பிரிட்ஜ்
சரிந்து வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில்,
மாட்டிக்கொண்ட மக்கள் மீட்கப்படும் காட்சி….
…
…
பயணங்கள் நிச்சயம் சுவாரஸ்யமானவை தான்…
ஆனால், அதற்குரிய நேரங்களை சரியாக தீர்மானிக்க
வேண்டியது மிக மிக அவசியம்…
.
————————————————————————————————————-



நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…