இந்தியாவை கொள்ளையடித்த இங்கிலாந்து …


பிரிட்டன் தனது 200 ஆண்டுக்கால காலனி
ஆட்சியில் இந்தியாவிற்கு செய்த கொடுமைகள் குறித்து,
இங்கிலாந்திலேயே, ஆக்ஸ்ஃபோர்டில்,
அந்நாட்டு பிரமுகர்களின் முன்னிலையிலேயே
சசி தரூர் ஆற்றிய ஒரு அற்புதமான உரையை
முன்னர் பார்த்திருந்தது நினைவிற்கு வந்தது….

அவர் தரும் பல செய்திகள், புள்ளி விவரங்கள்
மிகவும் சுவாரஸ்யமானவை.
இதற்கு முன் நாம் இந்த கோணத்தில் யாரும்
பேசிக்கேட்டதில்லை என்றே நினைக்கிறேன்.

காலனி ஆட்சிக்கு இந்தியர்கள் எவ்வளவு கூலி
கொடுத்திருக்கிறார்கள் என்பதை அவரது உரை
முதன் முறையாக நமக்கு அழுத்தந்திருத்தமாக,
உணர்த்துகிறது…

– நமது வலைத்தள நண்பர்கள் – மறக்க முடியாத
அந்த உரையை அவசியம் பார்க்க/கேட்க வேண்டுமென்று
விரும்பி இங்கே பதிகிறேன்….

இந்தியா தனது 73-வது சுதந்திர தினத்தை
கொண்டாடும் நிலையில் –
நேற்று, இதை பதிய வேண்டுமென்று தான்
எடுத்து வைத்திருந்தேன்.
நேற்று பதிவிட முடியவில்லை.

( இந்த உரை ஏற்கெனவே, யூ ட்யூபில் இருந்தாலும்,
சப்-டைட்டிலுடன் வேண்டுமென்று இப்போது தனியே
நானும் பதிந்திருக்கிறேன்…)

2-வது முறையும் கேட்டுப்பாருங்கள்…
இன்னும் அதிகம் பிடிக்கும்…ரசிக்கும்…!!!

.
———————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.