ரஜினி – ரஜினி தான்…!!!



அவர் அரசியலுக்கு வருகிறாரோ – இல்லையோ…?

வந்தாலும் ஜெயிக்கிறாரோ – இல்லையோ…?

நேற்றைய முன் தினம் தான் மனதிற்குள்
அவரை கடுமையாக திட்டிக் கொண்டிருந்தேன்….
எதற்கு என்று நீங்களே யூகித்துக் கொள்ளலாம்….!!!

ஆனால் – நான் இங்கு ரஜினியின் அரசியல் குறித்து
எதுவுமே விவாதிக்கப்போவதில்லை…

இதைப்பற்றிய சிந்தனைகளை எல்லாம் ஒருபக்கம்
தூக்கிப்போட்டு விட்டு, கீழே இருக்கும் இந்த வீடியோவை
பாருங்கள்….நேற்று, கலைஞானம் அவர்களின் விழாவில் பேசியது.

அற்புதமான ஒரு மனிதரை…
தன் கடந்த காலத்தைப் பற்றிய எதையுமே மறைக்காமல் –

(மறைக்கத் தெரியாமல் அல்ல –
மறைக்க விரும்பாமல் …! )

அத்தனையையும் பளிச்சென்று வெளிப்படையாகப்பேசும்
ஒரு மிகச்சிறந்த – மனிதரை – இந்த நிகழ்ச்சியில்
பார்க்கலாம்…..

ரஜினி – என்றைக்கும் இப்படியே
வெளிப்படையாக, திறந்த மனிதராக இருக்க வேண்டும்
என்றே நான் விரும்புகிறேன்…

அவர் – அதற்கு முந்தியநாள் விழாவில் பேசிய மாதிரி
அரசியல் மேடைகளில் இனியும் பேசிக்கொண்டிருந்தால்,
தமிழக அரசியலில் ஜெயிக்க முடியாது என்பது
நன்றாகவே தெரிந்திருந்தாலும் கூட …!!!

சரியோ, தவறோ – தனது மனசாட்சிப்படி,
தான் நம்புவதை அப்படியே பேசும் ஒரே ஒரு மனிதராவது –
நம் அரசியலில் இருக்கட்டுமே…

.
———————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to ரஜினி – ரஜினி தான்…!!!

  1. Subramanian's avatar Subramanian சொல்கிறார்:

    நீங்கள் சொல்வது போல் அவர் வென்றாலும் சரி,
    தோற்றாலும் சரி, ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும்.

    பாஜகவுடன் சேர்ந்து அதன் காரணமாக அவர் தோற்றால்,
    அது தமிழர்களின் துரதிருஷ்டமாகவே இருக்கும்.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ரஜினி வெளிப்படையாகப் பேசுபவர். உள்ளொன்று வைத்து பெரும்பாலும் புறமொன்று பேசாதவர். உதவி செய்தவர்களுக்கு தான் நன்றாக இருக்கும்போதே உதவணும்னு நினைக்கிறவர்.

    ஆனால் அவரைச் சுற்றியுள்ள உலகம் அப்படியா இருக்கு? அவர் உதவ நினைக்கும்போதே அதைத் தடுப்பதுபோல பலர் சொல்லிவிடுகிறார்கள். இப்போ கூட, கலைஞானம் அவர்களுக்கு வீடு தரணும்னு நினைக்கிறார். அதை யார் கெடுக்கப்போகிறார்களோ. இதற்குமுன் அவருக்கு படம் நடித்துத்தருகிறேன் (ராகவேந்திரர்) என்று சொன்னதை, கலைஞானம் அவர்கள் ரஜினி வீட்டிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் சிலர் மாற்றி, அந்த ப்ராஜக்டே பிறகு ரஜினி செய்வதுபோல ஆகிவிட்டது என்று கலைஞானம் எழுதியிருக்கிறார்.

    ரஜினி அரசியலுக்கு வருவதற்கோ, வெல்வதற்கோ இனி வாய்ப்பு கிடையாது என்றே நான் நினைக்கிறேன். அவர் அந்தக் காலத்தை எப்போவோ கடந்துவிட்டார். அஜித் வந்தால் நன்றாக இருக்கும். அவரும் குணத்தில் ரொம்ப நல்லவர், பிறருக்கு உதவணும் என்று நினைப்பவர், மதமாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டவர்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      அஜீத் அரசியலுக்கு வருவார் என்று
      நிஜமாகவே உங்களுக்கு தோன்றுகிறதா…?
      நம்பிக்கை இருக்கிறதா…?

      எதை வைத்து அஜீத் அரசியலுக்கு
      வருவார் என்று நினைக்கிறீர்கள்…?

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        கா.மை சார்… அஜீத், கருணாநிதி முன்னிலையில் தைரியமாகப் பேசியதும், பிறகு கருணாநிதி கொடுத்த குடைச்சலினால் ரஜினி, அஜீத்தை அழைத்துக்கொண்டு கருணாநிதி வீட்டுக்குச் சென்று சமாதானம் பேசியதும் அப்போ படித்திருப்பீர்கள்.

        நான், ஜெ. உடல்நிலை நன்றாக இல்லாதபோது, அஜீத்தை கட்சிக்குக் கொண்டுவந்து அதிமுகவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவார் என நினைத்தேன், ஆசைப்பட்டேன். அதிமுக இயக்கத்தின் ஆணிவேர், மக்களைத் தொந்தரவு படுத்தாத, ரவுடிகளை ஊக்குவிக்காத, தேச விரோதச் செயல்களை வெறுக்கும், எளிய மனிதர்களை நினைத்துப் பார்க்கும், வெறுப்பு அரசியலை மேற்கொள்ளாத தன்மை. அதனால்தான் அது மக்கள் செல்வாக்கை எப்போதும் பெற்றது. அதற்கு ஒற்றை, கவர்ச்சி, ஆளுமை உடைய தலைமை தேவை.

        ஆனால் அரசியலுக்கு வந்தால் ஏற்படப்போகும் மன நிம்மதி இழப்பு, கஷ்டம், இழக்கும் சுதந்திரம் இவற்றை நினைத்து அஜித் வருவார்னு தோணலை.

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          புதியவன்,

          சந்தேகமே இல்லை. அஜீத் நேர்மையான,
          பொருத்தமான மனிதர் தான்.

          ஆனால், அவருக்கு பொதுவாழ்வில்
          விருப்பம் இருப்பதாக தெரியவில்லை.
          ரசிகர் மன்றத்தைக் கூட கலைத்து விட்டாரே.
          அவர் தனிமையையும், நிம்மதியையும் தான்
          விரும்புவதாகத் தெரிகிறது. அரசியலுக்கு
          வந்தால் இந்த இரண்டையுமே இழக்க நேரிடுமே.

          .
          -வாழ்த்துகளுடன்,
          காவிரிமைந்தன்

        • இன்றில்லாவிட்டாலும்'s avatar இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

          ரஜினி அஜித் கமல் என்று எதுவும் சரியான பாதை கிடையாது. இவர்கள் நம் நாட்டின் மீடியாவின் மிக அற்பத்தனமான பழக்கங்களால் முதலில் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் ஆகி, வாழ்க்கையை நன்றாக செட் செய்து, ரோல்ஸ் ராய்ஸ் ஆடி கார்கள், இ சி ஆர் போன்ற படுதிகளில் பங்களா கட்டிக்கொண்டு சுகபோக வாழ்க்கையில் திளைத்து இருப்பவர்கள். நாட்டின் அட்மின் எப்படி இவர்களுக்கு தெரியும்?
          இவர்கள் சினிமாவில் முதல்வராக நடிப்பது தகுதி ஆகாது இதை நாம் உணரும் வரை 100 அல்ல 1௦௦௦ விவேகானந்தர் வந்தாலும் நம்மை காப்பாற்ற முடியாது

          • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

            இன்றில்லாவிட்டாலும்,

            நண்பரே,

            இப்படி ஒட்டு மொத்தமாக எல்லாரையும்
            கழித்துக் கட்டி விட முடியாது.

            நல்லவர்களை அடையாளம் கண்டுகொண்டு,
            உற்சாகப்படுத்தினாலொழிய, நமது அரசியல்
            கடைசி வரை இந்த இரண்டு கட்சிகளிடமே தான்
            மாட்டிக் கொண்டு விழிக்கும்.

            .
            -வாழ்த்துகளுடன்,
            காவிரிமைந்தன்

          • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

            @இன்றில்லாவிட்டாலும் – //நாட்டின் அட்மின் எப்படி இவர்களுக்கு தெரியும்?// – நாட்டின் அட்மின் தெரிந்தவர்கள் அதிகாரிகள் மட்டும்தான், அதிலும் பெரிய இடத்தில் இருக்கும் அதிகாரிகள்தாம். அவர்களுக்கு மக்கள் வாக்களிக்கப்போவதில்லை. உதாரணமாக கிரிஜா வைத்தியநாதனும், ரஜினிகாந்தும் சீமானும் மாத்திரம் ஒரு தொகுதியில் நின்றால், உங்கள் வாக்கு யாருக்கு?

            அரசியல்வாதிக்கு அட்மின் தெரியவேண்டியதில்லை. நம் அரசியலமைப்பும், அதற்கு உதவுவதற்காகவே அதிகாரிகளை வைத்திருக்கிறது. அரசியல்வாதிக்கு தெரியவேண்டியது ஒன்றே ஒன்றுதான். காமன்சென்ஸ். அதிகாரிகள் என்ன சொல்றாங்க, எப்படி அதை மக்களுக்கு உதவும்படிச் செய்வது, சட்டத்தில் உள்ள ஓட்டை வழியாக மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா என்று யோசிக்கத் தெரிந்தால் போதும்.

            காமராசர், அதற்கு முன்பிருந்த ஓமந்தூரார் போன்ற பல முதலமைச்சர்கள் ‘அட்மின்’ அனுபவம் உடையவர்கள் அல்லர். அவர்கள் எண்ணத்தில் சத்தியமும் மக்கள் சேவையும் இருந்தது. அதனால் அவர்கள் கற்பனை செய்திராத உயரத்துக்கு அவர்களை காலம் தூக்கிச் சென்றது.

  3. Jksmraja's avatar Jksmraja சொல்கிறார்:

    வருமான வரி துறை , அமுலாக்க துறை, இன்னும் என்ன எல்லாமோ துறைகளுக்கு , பயப்படாத சினிமா துறையில் உள்ளவர்கள் யாராவது உண்டா என்ன. ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் . கிருஷ்டினர் , அர்ஜுன் எல்லாம், என்னை விட்டுவிடுங்கள் ,நான் என் வழியில் செல்கிறேன் என்பதற்க்காக சொல்லப்பட்டவை. ஆனால் கிருஷ்ட்டினரும் அர்ஜுனும் அவ்வளவு எளிதாக விட்டு விடுவார்களா என்ன ?

    மக்களிடம் செல்வாக்கு இழந்து, கெட்ட பெயர் எடுத்துதான் சாகவேண்டும் என்று விதி இருக்கும்போது அதை யாராலும் மாற்ற முடியுமா என்ன ?

  4. Prabhu Ram's avatar Prabhu Ram சொல்கிறார்:

    ரஜினியின் மீது ஏன் எவ்வளவு வெறுப்பு ?
    லாஜிக்கே இல்லாமல் எழுதுகிறீர்கள்.
    வருமான வரி தான் காரணம் என்றால், அவர் எப்போதோ
    பாஜகவில் சேர்ந்திருப்பாரே;
    சோ எவ்வளவு வருடமாக வற்புறுத்தினார்.
    ஒப்புக்கொள்ளவில்லையே;
    உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதற்காக
    எந்த காரணத்தை வேண்டுமானாலும் கூறாதீர்கள்.

  5. Jksmraja's avatar Jksmraja சொல்கிறார்:

    தான், அதிக சம்பளம் வாங்கவேண்டும் என்பதற்க்காக அரசாங்கம் நிர்ணயத்த தொகைக்கு மேல் வாங்கவேண்டாம் , என்று சொல்லாதவர், தான், வாடகைக்கு எடுத்த இடத்திற்கு வாடகையே கொடுக்காதவர், நேர்மையான நிர்வாகத்தை கொடுப்பார் என்று நம்புவது எவ்வளவு பெரிய புத்திசாலித்தனம்.

    • Prabhu Ram's avatar Prabhu Ram சொல்கிறார்:

      வருமான வரி தான் காரணம் என்றால், அவர் எப்போதோ
      பாஜகவில் சேர்ந்திருப்பாரே;
      சோ எவ்வளவு வருடமாக வற்புறுத்தினார்.
      ஒப்புக்கொள்ளவில்லையே;

  6. Jksmraja's avatar Jksmraja சொல்கிறார்:

    நண்பர் பிரபு ராம்

    எனக்கு ரஜினிமீது எந்தவிதமான வெறுப்பும் இல்லை. யதார்த்த நிலையை எழுதினேன். உங்களின் கேள்விக்கான பதில், உங்களின் பின்னூடடத்திலேயே இருக்கிறது.

    வயது இருக்கும் போது,
    நல்ல உடல் ஆரோக்கியதுடன் இருக்கும் போது,
    குறிப்பாக புகழின் உச்சத்தில் இருக்கும் போது

    வராத அரசியல் ஆசை இப்பொழுது வருவதற்கு காரணம் என்ன? சோ பதவி வெறி பிடித்தவர் இல்லை. ஆகையால் அவர் ரஜினியிடம் வேண்டுகோள் மட்டும்தான் விடுத்தார். மேலும் அப்பொழுது இருந்த அரசாங்க துறைகளை நடத்தியவர்களுக்கும் பதவி வெறி இல்லை. ஆகையால் ரஜினியை நெருக்கவும் இல்லை. இப்பொழுது உள்ள நிலையை நினைத்து பாருங்கள் உங்களுக்கே உண்மை புரியும்.

    ரஜினி, தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என்று அமைதியாக இருக்கக்கூடிய மனநிலை உடையவர்.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      ராஜா… உங்கள் எழுத்தில் ரஜினி வெறுப்பு தெரிகிறது. பாஜகவை நீங்கள் வெறுப்பது புரிந்துகொள்ளக்கூடியது. ரஜினி வெறுக்க வைக்கும் எந்தச் செயலையும் செய்ததில்லை.

      வருமானவரி, ஃப்ராடு, கொள்ளை, ஊழல், தேசவிரோதச் செயல், நெறியற்ற வாழ்வு, அமலாக்கத்துறை… இதற்குப் பயந்து பாஜக காலில் விழவேண்டுமென்றால் அதற்கு சரியான நபர் ஸ்டாலின்தான். உங்க லாஜிக்படி, ஸ்டாலின், கனிமொழி, ஆ ராசா, பசி குடும்பம், டி ஆர் பாலு, ஜெகத்ரட்சகன்….. இவங்கள்லாம் எப்போ பாஜகவில் உறுப்ப்பினராகப் போறாங்க? உங்கள் ஊகத்தைச் சொல்லுங்களேன்.

  7. Sanmath AK's avatar Sanmath AK சொல்கிறார்:

    Dear KM Sir,

    Mr.புதியவன் said “நான், ஜெ. உடல்நிலை நன்றாக இல்லாதபோது, அஜீத்தை கட்சிக்குக் கொண்டுவந்து அதிமுகவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவார் என நினைத்தேன், ஆசைப்பட்டேன். அதிமுக இயக்கத்தின் ஆணிவேர், மக்களைத் தொந்தரவு படுத்தாத, ரவுடிகளை ஊக்குவிக்காத, தேச விரோதச் செயல்களை வெறுக்கும், எளிய மனிதர்களை நினைத்துப் பார்க்கும், வெறுப்பு அரசியலை மேற்கொள்ளாத தன்மை”…… Do you really think so ?….. Hope you are aware of Valarmathi just one eg. There was a guy named Aathirajaram who was so popular during 91-96. Just a set or group of media try to show JJ in good light by shedding all crime stuff on Sasikala.

    I am able to see a pattern in the group who are talking that JJ might have or should have called Ajith. I dont understand what was the lead but I can understand the purpose, hope you too.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      சன்மத் சார் – கேள்வி கா.மை சாருக்காக இருந்தாலும் நான் எழுதியதைக் குறிப்பிட்டுள்ளதால் அதற்கு விடை சொல்லுகிறேன். 91-96 கால ஜெயலலிதா அரசியலில் அதீத அங்கீகாரம் கிடைத்ததால் balance இழந்து, தன்னால்தான் எல்லாம் என்று எண்ண ஆரம்பித்தவர். அந்த ஜெயலலிதாவை நானும் மறந்துவிட்டேன், தகுந்த தண்டனை கொடுத்து மக்களும் மறந்துவிட்டனர். ஜெ.வை முதலில் ஆட்சியில் அமர்த்தியது, எம்.ஜி.ஆர் என்ற மனிதரின் நினைவும், இரட்டை இலையும், கருணாநிதி மேல் மக்களுக்கு எப்போதுமே இருந்த பிடிக்காத தன்மையும், அப்போது நடந்த ராஜீவ் காந்தி படுகொலையும்தான்.

      2001ல் மாற ஆரம்பித்த ஜெயலலிதா, தன் உணர்வாலும் மெச்சூரிட்டியாலும், 2009 வாக்கில் இன்னும் தன் குணத்தால் உயரச் செல்ல ஆரம்பித்தார். அனைத்து மக்களாலும் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டது அதற்குப் பிறகுதான். (2001ல் நியாயமாகச் செயல்பட ஆரம்பித்து, அது சரியான பாதை அல்ல, அப்படிச் செய்தால் தான் சமூகத்தின் ஒவ்வொரு பகுதியின் ஆதரவை இழப்போம் என்பதைப் புரிந்துகொண்டார். யாரையும் பாதிக்காமல், யாருக்கும் தொந்தரவு தராமல், ஏழைகளின்பால் இன்னும் பரிவோடு நடத்துவதே நல்லாட்சி என்பதை உணர்ந்துகொண்டார்)

      அரசியல் என்பதே நாம் அந்த அந்த காலகட்டத்தில் relatively என்றுதான் ஒப்பீடு செய்வோம். இன்றைக்கு ஜெ. ஆரோக்கியமாக இருந்திருந்தால் திமுகவுக்கு வாய்ப்பு என்பது என்றுமே கானல் நீராகத்தான் ஆகியிருக்கும். கருணாநிதியும் ஆரோக்கியமாக இருந்திருந்தாலும், திமுகவுக்கு வாய்ப்பு ஜெ. முன்னால் கூடியிருக்காது. இதைத்தான் என் பின்னூட்டம் சொல்ல விழைகிறது.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      சன்மத்,

      நண்பர் புதியவனின் பின்னூட்டம் அவரது
      எண்ணங்களை பிரதிபலிக்கிறது. அஜீத் மீது
      அவருக்கு நல்ல அபிப்பிராயம் இருக்கிறது.
      அவர் வந்தால் தேவலை என்று நினைக்கிறார்.
      அஜீத் நல்ல மனிதர் என்று தான் நானும்
      நினைக்கிறேன்.. ஆனால், அவர் அரசியலுக்கு
      வருவதற்கு நிச்சயமாக வாய்ப்பு இல்லை.

      மற்ற விஷயங்களுக்கு அவரே விளக்கம்
      கொடுத்திருக்கிறார்.

      என் அபிப்பிராயத்தை கேட்டால்,
      திமுகவை விட அதிமுக – soft ஆன கட்சி
      என்று தான் சொல்வேன். இரண்டையும் ஒப்பிட்டால்,
      அதிமுகவால், சாதாரண மக்களுக்கு ஏற்படக்கூடிய
      தொந்திரவுகள்/பாதிப்புகள் – குறைவாக இருக்கும் என்று
      சொல்லலாம்.

      பொதுவாக – இந்த இரண்டு கட்சிகளையும்
      தவிர்த்து விட்டு, புதிதாக யாராவது
      வந்தால் தேவலை என்று தான் தோன்றுகிறது.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.