…
…
காஷ்மீர் பிரச்சினை குறித்து –
ஏற்கெனவே தெரிந்த சில தகவல்களையும்,
பல வாசக நண்பர்களுக்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லாத சில தகவல்களையும்,
ஜூனியர் விகடன் இதழ் வெளியிட்டிருக்கிறது.
இந்த தளத்து வாசக நண்பர்கள் அனைவரும்
இந்த தகவல்களை ஒருமித்து தெரிந்துகொள்ள
வசதியாக, அந்த கட்டுரை இங்கே பதிவிடப்படுகிறது.
…

…

…

…

…
.
——————————————————————————-



கள நிலவரத்தை சரியாக எடுத்துக்கூறியது போல் தெரிகிறது …
.
சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதை நான் வரவேற்கிறேன்.
அந்த முடிவு சரியான முடிவு தான்.
லடாக்கை தனியே பிரித்தது கூட சரியான முடிவே.
ஆனால், காஷ்மீரின் மாநில அந்தஸ்தை குறைத்து,
அதை யூனியன் பிரதேசமாக (Union Territory) ஆக்கியது
தான் ஏற்கத்தக்கதாக இல்லை.
காஷ்மீர் மக்கள், தாங்கள் அவமானப்படுத்தப்பட்டு
விட்டதாக, தண்டிக்கப்பட்டு விட்டதாக நினைக்கிறார்கள்.
அவர்கள் தன்மான உணர்வு பாதிக்கப்பட்டிருக்கிறது.
பிரச்சினை இப்போது ரணமாக முற்றுவதற்கும்,
அமைதி திரும்பாமல் இருக்கவும் அதுவே காரணமாகத்
தெரிகிறது.
நிர்வாக ரீதியாக அனைத்தையும் ஒழுங்குபடுத்துவதற்கு
தேவையான 2 அல்லது 3 மாதங்களை எடுத்துக் கொண்டு,
மூன்று மாதங்களுக்குப் பிறகு, காஷ்மீர் மீண்டும்
முழு அந்தஸ்து பெற்ற மாநிலம் ஆகும் என்று
மத்திய அரசு இப்போதே ஒரு தேதியை குறிப்பிட்டு அறிவித்தால் –
பிரச்சினைகள் அமைதியாக முடிவுக்கு வர வாய்ப்பு
உண்டு என்று தோன்றுகிறது.
மத்திய அரசின் திட்டம் அப்படித்தான் இருக்கும்னு (அதாவது 3-6 மாசத்துல) நினைக்கிறேன். இன்னும் 6-9 மாதத்துக்குள் அங்கு பொதுத் தேர்தல் நடத்துவார்கள்னு நினைக்கிறேன். இந்த சமயத்துல வாக்களிப்பதும் அதிகமாகலாம், காஷ்மீர் மாநில உண்மையான மனநிலை தெரிந்துவிடும்.