( என் விருப்பம் -30 ) – கே.ஜே.யேசுதாஸ்- ஹிந்தி பாடல்கள்…!!!(மேடையில் திரைப்பாடல்கள்…!!!)

…..


(மார்கழி மாத இசை விழாவில், கர்நாடக இசைக்கச்சேரி…!!!)

———————–

விடுமுறை நாளில் என் விருப்பம்…
எல்லாமே நல்ல பாடல்கள் தான்…
முடிந்த வரை அனைத்தையுமே நிதானமாக –
பார்த்து/கேட்டு ரசியுங்கள்.

கேரளத்தில், கத்தோலிக்க கிறிஸ்தவராகப் பிறந்து,
துவக்கத்தில், செம்மங்குடி சீனிவாச அய்யரிடமும்,
பின்னர் செம்பை வைத்தியநாத அய்யர் அவர்களின்
பரம சீடராக குருகுல வாசம் புரிந்தும்,
கர்நாடக இசையில் விற்பன்னரானதோடு,

திரைப்படங்களில் ஆயிரக்கணக்கான
பாடல்களையும், தனியே நூற்றுக்கணக்கில்
பக்திப்பாடல்களையும் –

எல்லாவற்றிற்கும் மேலாக, சபரிமலை ஐயப்பனின்
அதிகாரபூர்வ நடைசாத்தும் பாடலான
ஹரிவராசனம் பாடியதும் எந்த இசைக்கலைஞருக்கும்
கிடைக்காத அரியதொரு வாய்ப்பு / சாதனை…!

எல்லாருக்கும் பிடிக்கும் யேசுதாஸை,
கிட்டத்தட்ட 80,000 பாடல்களைப் பாடியிருக்கும்
யேசுதாஸ் அவர்களின் பாடல்களில் –
எதைச் சேர்ப்பது, எதை விடுவது…?

தமிழில் வெளிவந்துள்ள, பிரபலமான யேசுதாஸ்
பாடல்கள் குறித்து நான் புதிதாக சொல்ல எதுவும்
இல்லை…

யேசுதாஸ் ஹிந்தியிலும் பாடுவார் என்பதை
மக்கள் அறிவர். ஆனால், ஹிந்தியிலும்
அவர் அற்புதமான பல ஹிட் பாடல்களை
கொடுத்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது…

ஹிந்தியில் அவர் பாடிய அனைத்துமே,
கிட்டத்தட்ட க்ளாசிகல் பாடல்கள் என்று தான்
சொல்ல வேண்டும்.

எனக்குப் பிடித்த பாடல்கள் அனைத்தையும் போட
ஒரு பதிவு பத்தாது. இருந்தாலும் குறிப்பிட்ட
சில ஹிந்தி பாடல்களையாவது இன்று இங்கே
பதிவிடலாமென்று நினைக்கிறேன்.

………………………………………….

(எந்த பாடலின் மீதாவது தடை ஏற்பட்டால்,
அந்த ஸ்கிரீன் மேலேயே watch this video on you tube
என்று ஒரு indication இருக்கும். அங்கே க்ளிக்
செய்தால், யூ ட்யூப் லிங்க் உடனேயே கிடைக்கும்…)

tu jo mere sur men sur

என் ஆயுட்காலத்தில் என்னால் மறக்க முடியாத
ஒரு அற்புதமான ஹிந்தி பாடல் இது.

இந்தப் பாடல் வெளியானது 1952-ல் –
பாடல்களுக்காகவே சூப்பர் ஹிட்’டான –
பாய்ஜூ பாவாரா என்கிற ஹிந்தி திரைப்படத்தில்…
மொஹம்மத் ரஃபி அவர்களின் உயிருக்கு உயிரான பாடல்..

இந்த வீடியோவில், முதலில்,
இந்த பாடலை ரஃபி மேடையில் பாடுகிறார்…

பிறகு, யேசுதாஸ் அதே பாடலை சில வருடங்களுக்கு
முன் தனது இசை நிகழ்ச்சி ஒன்றில் மேடையில்
பாடுகிறார்….

Oh Duniya Ke Rakhwaale | Mohammad Rafi | K.J. Yesudas

Ka Karoon Sajani Aaye – Swami 1977

gori tera gaon bada pyara

Koi Gata Main So Jata

chand akela jaya sakhi ri

bole to bansjuri kahin

palkon pe chalte

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.