…
…

…
கொஞ்சம் மிகைப்படுத்தல் – இருக்கக்கூடும்.
ஆனால், அநேகமாக இவையெல்லாமே எதிர்காலத்தில்
நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் தான்…!!!
(முன் பகுதியின் தொடர்ச்சி…)
முக்கியமா ‘Banking’ எனப்படும் வங்கி சேவைகள்.
‘BitCoin’ னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா?
இல்லனா கூகுளை கேளுங்க…! அடிச்சு சொல்லும்
அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது
ஒண்ணு தான்னு.
அப்புறம், ‘Insurance’ எனப்படும் காப்பீட்டு திட்டங்கள்.
மொத்தமா செம்ம அடி வாங்கும்.
ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப் போகும்.
சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய்
பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே
Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள்
தயாராகும்.
விவசாயம்: இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள்,
மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான்
இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த
நெலமை வந்துடும்.
இன்னும் சொல்லப் போனால் சாப்பாட்டுக்கு
மாற்றாக மாத்திரைகள் வந்து விடும்.
விண்வெளி வீரர்கள் வானில் இருக்கும் பொழுது
மலஜலம் கழிக்க முடியாது. எனவே அவர்களுக்கு
மாத்திரை தான் உணவு.
காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர்
குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ.
‘Moodies’ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை
scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது…
2020-ல நீங்க பொய் சொல்றீங்களா இல்ல உண்மைய
சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும்.
யாராலயும் ஏமாத்த முடியாது.
இப்பவே கூகுள் அசிஸ்டண்டும் Alexa வும்,
Siriயும், வேலைக்காரர், உதவியாளர், செகரட்டரி
வேலைகளை செய்கிறது.
இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம்
வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது..
(2012ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம்
இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம்
100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.
Tricoder X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்க்கு
வருது. உங்க செல் போன்ல உட்கார்ந்துகிட்டு
வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன்
பண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும்.
உங்க மூச்சு காத்தை அலசும். உங்க உடம்புல
என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல
இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2035-ல
100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி. டாக்டர்கள்
Clinic_ வைக்கத் தேவையில்லாம, online-ல யே
ஒரு op – ய Treat பண்ண முடியும்.
In-patient-க்குத்தான் Hospital .
மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றத்திற்கு ஏற்ப நம்மை
தயார்படுத்திக் கொள்ள மட்டுமே நம்மால் முடியும்.
நமது வாரிசுகள் படித்த பின் வேலைக்கு சென்று
சம்பாதிக்க இப்போதைய படிப்புகள் ஒன்றும்
உதவாமல் போகலாம்.
கடந்த நூறு வருடங்களில் நடந்ததை விட
அதிவேக பாய்ச்சல் முன்னேற்றம் அடுத்த
பத்தாண்டுகளில் நடக்கும்.
சந்திக்க தயாராவோம்.
எதிர்காலம் நம் கையில் இல்லை….!!!
கடந்த காலமும் நிகழ்காலமும் மட்டும் –
– நம் கையிலா இருந்தது /இருக்கிறது….?
( தினமணி செய்தித்தளத்தில் வந்த
கட்டுரையை அடிப்படையாக கொண்டது.)
.
———————————————————————————————————–



நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…