…
…

…
ஸ்மார்ட் போன்கள் எதற்காக உருவாக்கப்பட்டன…?
நம் வாழ்க்கையை சுலபமாக்கவா அல்லது
அழிக்கவா…?
அற்புதமான, அவசியம் காணவேண்டிய
ஒரு காணொளிக் காட்சி கீழே …
(நன்றி – நண்பர் அஜீஸ்…)
…
…
செல்போனுக்கு அடிமையாகாதீர்கள்…
பழைய வாழ்க்கைக்கு திரும்புங்கள்…
உங்கள் குழந்தைகளிடம் பேசுங்கள்…
குடும்பத்தாருடன், நண்பர்களுடன் பேசுங்கள்…
உங்கள் மகிழ்ச்சியை, இன்ப துன்பத்தை
அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…
உங்களைப் பார்த்து தான் –
உங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்கின்றன…
நீங்களே செல்போனுக்கு அடிமையாக இருந்தால்…?
உங்கள் குழந்தைகளிடம், குடும்பத்தாரிடம்,
நண்பர்களிடம் – அன்பைச் செலுத்துங்கள்…
அவர்கள் அதையே பன்மடங்காக உங்களுக்கு
திரும்பக் கொடுப்பார்கள்…
செல்போன்கள் உங்களுக்கு அன்பைக் கொடுக்குமா…?
அருமையானதொரு நினைவூட்டல்…!!!
.
————————————————————————————————————



Sir, irony is this was also shared through watsup and most of the people thought sharing this message is enough instead of following the message.
‘
ரகுராமன்,
நீங்கள் சொல்வது நிஜம் தான்.
இந்த மெசேஜையும் செல்போன் மூலமாகவே
பரப்பி வருகிறார்கள். அதை படிக்கவும் செய்கிறார்கள்.
அதன் அவசியத்தை உணரவும் செய்கிறார்கள்.
ஆனால் –
அதை நடைமுறையில் செயல்படுத்த வேண்டிய
அவசியத்தை அலட்சியப்படுத்துகிறார்கள்…
அல்லது அவர்களால் அந்த பழக்கத்திலிருந்து
விடுபட்டு வெளிவர முடியவிலை என்றும்
சொல்லலாம்.
ஆக, செல்போனும் ஒரு போதையாகி விட்டது.
வருத்தமாக இருக்கிறது.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்