MGR -க்கு “தர்மம்” சொல்லிக்கொடுத்தவர்…. (இன்றைய சுவாரஸ்யம்…)



கொடைவள்ளல் என்று அறியப்பட்ட
எம்.ஜி.ஆர். அவர்களுக்கே “தர்ம”த்தின் சிறப்பு பற்றி
சொல்லிக்கொடுத்தவர் – தெருவோரத்தில்
கடை போட்டு “புட்டு” விற்கும் ஒரு பெண்மணி
என்பதை விட சுவாரஸ்யமான விஷயம் என்ன
இருக்க முடியும்….?

சுகி சிவம் அவர்கள் எங்கு பேசினாலும்,
எந்த தலைப்பில் பேசினாலும்,
பலனுள்ள செய்திகள் பலவும் அதில்
நிச்சயம் இருக்கும்…

இந்த உரையில், கொஞ்சம் கூடுதலாகவே –
அற்புதமான நகைச்சுவையும்
இணைந்தே வருகிறது.

முக்கியமாக,
கடைசியில் அவர் சொல்லும் எம்.ஆர்.ராதா “சங்கதி”
இருக்கிறதே…. simply superb…


மிகவும் சுவாரஸ்யமான ஒரு காணொளி –

.
———————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to MGR -க்கு “தர்மம்” சொல்லிக்கொடுத்தவர்…. (இன்றைய சுவாரஸ்யம்…)

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    சுகி சிவம் பேச்சுகள் கேட்டிருக்கிறேன். சுவாரசியமா இருந்தாலும் நிறைய எக்சாஜரேஷன் இருக்கும். உண்மைபோல சிலவற்றைச் சொல்லிவிடுவார்.

    எம்.ஜி.ஆர். கோவையில் கடுமையான பசியில் இருந்தபோது, சாண்டோ சின்னப்பா வீட்டிலிருந்து டிரவுசரின் இரண்டு பாக்கெட் நிரம்ப அரிசி கிடைத்தது. அதனைத் தன் அம்மாவிடம் கொடுத்தார் (இது அவர் எழுதியிருப்பது). பிற்காலத்தில் தேவருக்கு ஏகப்பட்ட படங்கள் நடித்துக் கொடுத்தார், தேவரும் ஒரு குறைவில்லாமல் அவருக்கு ஊதியம் கொடுத்தார் என்பது வரலாறு. தான் பட்ட கஷ்டங்களிலிருந்துதான் பிறருக்கு உதவணும் என்ற நல்ல குணம் வந்தது. அவங்க குடும்ப ஜீனும் அதற்குக் காரணம். (கஷ்டப்பட்ட நிறைய பேர், காசின் மீது ஆசை கொண்டு மேலும் மேலும் சேர்த்துத் தன் குடும்பம் வளமாக இருக்க உழைத்ததையும் நாம் கண்டிருக்கிறோமே… கருணாநிதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, இரவு பகல் பார்க்காமல் கார் ஓட்டிக்கொண்டு வந்தவருக்கு, கடைசியில் தன் வீட்டை அடைந்ததும் 10 ரூபாய் அன்பளிப்பாகக் கொடுத்தார். பின்னால் இருந்த ஆற்காடு வீராசாமி, கருணாநிதி திரும்பியதும், டிரைவருக்கு 500 ரூபாய் கொடுத்தார்.. தலைவர் 10 ரூபாய்தான் கொடுப்பார் என்று சொல்லி. இதுவும் பத்திரிகையில் வந்திருந்தது)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.