…
…

…
இந்த காட்சியின் துவக்கத்தில்,
இந்த பெரியவர்களை பார்த்தபோது,
இவர்கள் இதையெல்லாம் செய்வார்களென்று
என்று நான் கொஞ்சம் கூட
எதிர்பார்க்கவில்லை…
ஒருவர், அடுத்தவரை தூக்கும்போது,
அய்யய்யோ எலும்பு உடைந்து விடப்போகிறதே
என்று நடுங்கிக் கொண்டே இருந்தேன்…
என்ன தான், மனதில் உரம் இருந்தாலும்,
உடம்பு வளைந்து ஒத்துழைத்தாலும் கூட,
80 வயதில் இவர்களது எலும்பு எப்படி
இந்த கனத்தை தாங்குகிறது என்பது
வியப்பாகவே இருக்கிறது…
( வயதாக, வயதாக – உடல் எலும்புகள்
அடர்த்தி குறைந்து, இலேசாகி, பலமிழந்து
விடுகின்றன. முதியவர்கள், சாதாரணமாக
கால் தடுக்கி விழுந்தால் கூட எலும்பு முறிவு
ஏற்பட்டு விடுகிறது. )
அவர்கள் நிகழ்ச்சியை முடித்த பிறகு தான்
எனக்கு மூச்சே வந்தது…!!!
இதை டேலண்ட் என்று சொல்வதைக் காட்டிலும்,
அவர்கள் இந்த வயதில், இந்த அளவு
உடல் வலிவை காப்பாற்றிக்கொண்டிருப்பது
தான் ஆச்சரியம்…
நிஜமாகவே அதிசயம் தான்….!!!
( நன்றி – சைதை அஜீஸ்…)
…
…
.
————————————————————————————————————–



என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…