அலிபாபா’வின் “ஜாக் மா” – அவசியம் காண வேண்டிய ஒரு மூன்றரை நிமிட காணொளி ….


சீனாவின் மிகப்பெரிய நிறுவனம் “அலிபாபா”….
அதன் உரிமையாளர் “ஜாக் மா” …
சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் –

மிகப்பெரிய வெற்றியாளரான அலிபாபா,
வாழ்க்கையின் எந்தெந்த வயதில் எப்படியெப்படி
இருக்க வேண்டும் என்பது குறித்து இன்றைய
இளைஞர்களுக்கு –

சுருக்கமாக, அதே சமயம் மிகத்தெளிவாக
எடுத்துக் கூறுகிறார்….

அவசியம் காண / கேட்க வேண்டிய ஒரு காணொளி ….

.
——————————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to அலிபாபா’வின் “ஜாக் மா” – அவசியம் காண வேண்டிய ஒரு மூன்றரை நிமிட காணொளி ….

  1. Subash's avatar Subash சொல்கிறார்:

    A very useful talk.
    Thanks for sharing

  2. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    Certainly worth watching. At sixty or seventy above, we, common men, are unable to detach ourselves from day to day life. ‘Attached but be detached’ is a great trait that should be developed, at least at this age, but the process isn’t easy. I would like to see some ideas exchanged on this. KM, what do you think?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      சந்திரமௌலி,

      உங்களுக்கு ஆலோசனை சொல்லும் அளவிற்கு
      எனக்கு நான் தகுதி இருப்பதாக நான் நினைக்கவில்லை…
      இருந்தாலும், என் அனுபவத்திலிருந்து சிலவற்றை சொல்கிறேன்…

      குடும்பத்தில் இருந்துகொண்டே, முற்றிலும் அதன்
      தொடர்புகளிலிருந்து விடுபட இயலாது தான்…
      ஆனால், நிச்சயமாக, படிப்படியாக –
      ஓரளவு குறைத்துக் கொள்ள முயன்றால் – முடியும்..

      Detached Attachment -ன் அவசியத்தை நீங்கள் உணர ஆரம்பித்து
      விட்டாலே – பாதி தூரம் பயணம் பண்ணி விட்டீர்கள் என்று
      தான் அர்த்தம். இன்னும் கொஞ்சம் உணர்வு நிலையோடு
      (consciously…??) பழகத் துவங்கினால், இன்னும்
      கொஞ்சம் முன்னேறலாம்.

      நான் கடந்த சில வருடங்களாக முயற்சித்துக்
      கொண்டிருக்கிறேன்… ஓரளவு வெற்றி கிடைத்திருக்கிறது.

      – first step – அவர்களாக கேட்டாலன்றி, யாருக்கும் அட்வைஸ்
      கொடுக்காதீர்கள்… எதிலும் தலையிடாதீர்கள்…!!!

      – second step – நீங்கள் எதிர்பார்ப்பது போல் குடும்பத்தினர் நடந்து கொள்ள
      வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

      -third step – மிக நெருக்கமான உறவுகளைத்தவிர்த்து,
      மற்றபடி – கல்யாணம், வளைகாப்பு, சீமந்தம், காதுகுத்து,
      நாமகரணம் போன்ற விழாக்களில் கலந்து கொள்வதை
      தவிர்த்து விடுங்கள்…

      (தெரிந்தவர்கள் / உறவினர்கள் குடும்பத்தில் “இறப்பு”
      நேர்கையில் மட்டும் – தவறாமல் கலந்து கொள்ளுங்கள்..
      கல்யாணத்திற்கு போகாவிட்டாலும் – கருமாதிக்கு
      போக வேண்டும் என்பது அனுபவ மொழி…)

      இது பற்றி கொஞ்ச நாட்கள் கழித்து விவரமாக
      ஒரு இடுகை எழுதுகிறேன்.. நம்மைப் போன்றவர்கள்
      கருத்துகளை பரிமாறிக்கொள்வதோடு,
      மற்றவர்களின் ஆலோசனையையும் பெறலாம்.

      நம்மை நம்பி இருக்கும் குடும்ப உறுப்பினர்களை
      (மனைவி, மகள், பேரன், பேத்தி ….) கொஞ்சம் கொஞ்சமாக
      சுதந்திரமாக செயல்பட தூண்டுங்கள்…
      அவர்கள் எந்த விஷயங்களுக்காக உங்களை
      சார்ந்து இருக்கிறார்களோ, அந்த விஷயங்களை
      அவர்களே சுயமாக செய்ய – பழகிக் கொடுங்கள்.

      பின்னர் நேரம் வாய்க்கையில் – விரிவாக பேசலாம்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! “ஜாக் மா” காணொளி மூலம் இளைஞர்களிடம் கூறுவது நம்பிக்கையை ஊட்ட — இங்கேயும் பலர் காணொளி மூலம் — வானொலி மூலம் தோன்றுகிறார்கள் — அது எதற்காக என்பதை விளக்காமலேயே அனைவருக்கும் விளங்கும் — ! இதே போன்ற சில அறிவுரைகளை கட்டளையாக ஒருவர் கூறியுள்ளதும் தளத்தில் இருக்கிறது — அது :– // எழுத்தாளர் சுஜாதாவின் 10 கட்டளைகள்… !!!
    Posted on ஜனவரி 11, 2019 by vimarisanam – kavirimainthan // அடித்தளம் வலுவாக இருக்கணும் அப்படித்தானே …?

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இவர் அல்ரெடி அனேகமா ரிடையர் ஆகிவிட்டார் (from day to day running, as he thinks he has too much money to enjoy is rest of his life).

    அவர் சொல்லியிருப்பது அருமையான கருத்து. An eye opener. நான் ஆரம்ப காலத்துல வேலைக்குப் போனபோது (24கள்ல), முதல் 5 வருடத்தில் 4 வேலைகளை-actually 2 வேலைகள் – மாற்றிவிட்டேன். அப்போ என் பெரியப்பா (ப்ரொஃபசர்) இதென்ன ரோலிங் ஸ்டோன் மாதிரி வேலையை மாத்தற… ஒரே கம்பெனில இருக்கவேண்டாமா என்ற மாதிரி எண்ணினார்கள். இப்போ நிறைய ஐ.டி. கம்பெனிகள்ல, கொஞ்சம் சேலரி அதிகமானாலே வேலையை மாத்திடறாங்க. இந்தக் காணொளி அனைவரும் காணவேண்டிய ஒன்று. நல்ல பகிர்வு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.