…
…

…
தெருக்கூத்து ஆடுபவர்கள் நிகழ்ச்சி இருக்கும் நாளைக்கு மட்டும்
திக்’காக மேக்கப் போட்டுக் கொண்டு, கலர் கலராக, டார்க்
உடையணிந்து கொண்டு மேடைக்கு வருவார்கள்.
பார்ப்பவர்களுக்கு – அவர்கள் தோற்றம்
பளிச்சென்று தோன்ற வேண்டும்..
அவர்களின் குறிக்கோள் அவ்வளவே…!!!
முதலில் வாரணாசியில் ஒரு நாள் கூத்துக்கு நிகழ்த்தப்பட்ட
அரிதாரப்பூச்சைப்பற்றிய ஒரு செய்தித் துண்டு கீழே –
ஊர்வலம் நடந்தது B.H.யுனிவர்சிடியிலிருந்து அஸ்ஸி கட் வரையில்…
5-6 கிலோ மீட்டர் இருக்கும். அந்த இடம் மட்டும்
அடித்து, துவைத்து, பெருக்கி, 1.4 லட்சம் தண்ணீரால்
கழுவப்பட்டு பள பளா ஆக்கப்பட்டது.
(புகைப்படத்தை பார்த்தால் தெரியும்…)
அதற்கு அரை கி.மீ. தள்ளியிருந்த
தெருக்கள் எல்லாம் வழக்கம்போல்,
தெருவின் 2 பக்கங்களிலும்
திறந்த சாக்கடைகளுடன்… தள தளா…!!!
நிகழ்ச்சி முடிந்து, பூஜை நடைபெற்ற
அஸ்ஸி கட்’டிலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில்
ஒரு 15 அடி அகலமுள்ள “நாலா” ( அவர்கள் மொழியில்
அகன்ற சாக்கடைக்கு பெயர்…!!), தனக்கு அவ்வளவு
அருகே VVIP வந்திருப்பதே தெரியாமல் – வழக்கம் போல்,
கங்கையுடன் சங்கமித்துக் கொண்டிருந்தது….
(மேலேயுள்ள புகைப்படத்தில் பார்க்கலாம்…
அழகாக concrete போட்டு, சாக்கடை – கங்கையில்
சங்கமிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்…)
அதன் பிறகு … கீழே வாருங்களேன் சொல்கிறேன்…
…

….
இந்த வீடியோ MIRROR NOW தொலைக்காட்சியில் வெளிவந்தது….
உரையாடல் ஹிந்தியில் இருந்தாலும், மொழியின் அவசியம் தேவைப்படாமல்,
காட்சியே உண்மைகளை விளக்கி விடும்…
இதில் என்ன விசேஷம் என்றால்,
இத்தனை காட்சிகளும், வாரணாசி நகர எல்லைக்குள்ளேயே –
கடந்த 5 வருடங்களாக
சர்வ வல்லமையும், அதிகாரமும் உடைய,
பாரத பிரதமராக – பதவி வகிப்பவரின்
தொகுதிக்குள்ளாகவே வருகின்றன…
இதில்- கீழ்க்கண்ட நொடிகள் கவனிக்கத்தக்கவை..
1.33, 2.33, 3.37,
4.29, 4.35, 5.10,
5.26, 5.39, 6.38,
7.18, 7.23
…
…
.
——————————————————————————————————



ஆமாம்…உண்மைதான். வாரணாசியைச் சுத்தப்படுத்த ஏகப்பட்ட செலவு செய்யவேண்டும். முதலில் மக்களுக்கு வாழ்வாதாரம் மேம்படுத்தப்படவேண்டும். பிளாஸ்டிக் தடை, குடிநீர் பாட்டில்கள் விற்பனை தடை என்று நிறைய செய்யவேண்டும்.
ஆனால் இதெல்லாம் பெரிய குறையில்லை. 40 வருடங்களாக பிரதமர் தொகுதியாகவே இருந்தவைகளில் 70%பேர் வறுமைக்கோட்டிலேயே இருப்பதும் அங்கு வாழ்வாதாரங்கள் எதுவும் மேம்படுத்தப்படாததும் நமக்குத் தெரிந்ததுதான். உடனே, இவரைக் குறை சொன்னால், அவரை இழுக்கக்கூடாது என்று வரக்கூடாது. ‘ஐயே உன் டிரஸ் அலங்கோலமாக இருக்கு. அழுக்காகவும் இருக்கு’ என்று ஒருவனைப் பார்த்துச் சொன்னால், ‘ஆமாம் நீங்கள் சொன்னது சரிதான்’ என்று 50 கோடியில் ஒருத்தர் சொல்வார். மற்றவர்கள், ‘அது சரி… உனக்கு உடையே இல்லையே…நீ எதுக்கு என்னைக் குறை சொல்ல வருகிறாய்’ என்றுதான் கேட்பார்கள்.
புதியவன்,
நேரடியாக கேட்கிறேன்.
உங்கள் பின்னூட்டத்தில்,
இந்த இடுகையில் பேசப்படும் பொருளைப்பற்றி –
எதாவது கருத்து கூறி இருக்கிறீர்களா…?
முதலில் இந்த இடுகையில் எழுப்பப்பட்டுள்ள விஷயத்தைப்பற்றி
மட்டும் உங்கள் கருத்து என்ன என்பதை தனியாக கூறுங்கள்…
முந்தைய ஆட்சியாளர்களை குறை கூறி
விஷயத்தை திசை திருப்புவதை
தனி ஆவர்த்தனமாக வைத்துக்கொள்ளுங்கள்…!
கங்கையை சுத்தப்படுத்துவதே என் வாழ்க்கையின் லட்சியம்
என்று நாலரை ஆண்டுகளுக்கு முன்னர் இதே
கங்கைக்கரையில் சபதமிட்டு கூறியது யார் ..?
கங்கையை சுத்தப்படுத்துவதற்காகவே “நமாமி கங்கே” என்று
ஒரு சுலோகனை உருவாக்கியது யார்…?
மத்தியில் ஆட்சி செய்வது யார்…?
உத்திரப் பிரதேசத்தில் ஆட்சி செய்வது யார்…?
கங்கையை சுத்தப்படுத்தவென்றே, இந்தியா முழுவதிலும்
வசிக்கும் மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம்
20,000 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக மட்டுமே
ஒதுக்கப்பட்டிருக்கிறது…
வாரணாசி நகரிலிருந்தே, சிமெண்ட் கால்வாய் போட்டு,
சாக்கடை கங்கையில் கலக்கப்படுவதை
வீடியோவில் பார்த்தீர்கள் அல்லவா…?
இதற்கு யார் பொறுப்பு…?
ஆட்சியில் இருப்பவர்கள் இல்லையா…?
உரக்க சப்தம் போட்டு, சபதம் போட்ட,
இன்றும் சப்தம் போட்டுக்கொண்டிருக்கின்ற –
அந்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் இல்லையா…?
இதையெல்லாம் ஏன் மூடி மறைக்கப் பார்க்கிறீர்கள்…?
சாக்கடையையும், அசுத்தத்தையும் ஜமக்காளம் கொண்டு
மூடினால் மட்டும், நாற்றம் போய் விடுமா…?
வெறும் பத்திரிகை செய்தியை வைத்து அல்ல –
வாரணாசியும், கங்கையும் எந்த லட்சணத்தில்
இருக்கின்றன என்பதை 4-5 மாதங்களுக்கு முன்
நான் நேரிலேயே பார்த்து அனுபவித்து விட்டு தான்
இதை எழுதி இருக்கிறேன்.
இது ஜனநாயகம்…
நாமார்க்கும் குடியல்லோம்.. நமனை அஞ்சோம்
என்று கூறியவர் வழியில் வந்தவர் நாம்.
படித்தவர்களும், சுயமாக யோசிக்கத் தெரிந்தவர்களும்,
கண்களை மூடிக்கொண்டு,
காதுகளையும் பொத்திக்கொண்டு –
தவறு செய்பவர்களை – ஆதரித்தால்,
ஆதரித்து எழுதினால் / பேசினால் –
அவர்களின் மொழியும், நடையும் அதை ஏற்றாலும் –
நீங்கள் எழுதியிருப்பதை
உங்கள் மனசாட்சி ஏற்குமா…?
ஏற்கும் என்றால் சரி… அது உங்கள் விருப்பம்.
ஆனால், அதற்குப் பிறகும், மற்றவர்களைப் போல் –
“நான் ஜால்ரா அல்ல ” என்று மட்டும் இனி கூறாதீர்கள்.
அது பொருத்தமாக இருக்காது.
– வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா.மை. சார்.. ரெண்டு நாள ஒன்று என் மனசுல தோணிக்கிட்டிருந்தது.
ஜெ. மறைவுக்குப் பிறகு நான் ஓபிஎஸ் அவர்கள்டதான் நல்ல மதிப்பு வைத்திருந்தேன். ஜல்லிக்கட்டின்போது அவர் பேசினது எல்லாமே எனக்கு அவர் மீது ஒரு நல் மதிப்பை உண்டாக்கியிருந்தது. ஆனால் அவருடைய எதிரிகள் (அதிமுகவில்), அவர் பாஜகவிடம் விலை போய்விட்டார் என்றே எழுதிவந்தார்கள். அவற்றையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. பிறகு, ‘பாஜக சொல்லித்தான் அதிமுகவுடன் மீண்டும் சேர்ந்தார்’ என்று அவர் பேசியதாகப் படித்ததிலிருந்து என்ன இதுமாதிரி பேசறார் என்று நினைத்தேன். மோடி பேரணியில், வாரணாசியில், ஓபிஎஸ் மகன் கலந்துகொள்ளவேண்டிய அவசியம் என்ன? ஜெ. என்ன மாதிரியான கொள்கைகளை அதிமுகவுக்கு பின்பற்றினாரோ அதன் யூ டர்ன் அல்லவா? அதிமுகவை பாஜகவிடம் அடகுவைக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது? நெஞ்சத்தில் நேர்மை இருந்தால், எதற்கு பயப்படவேண்டும்?
தமிழ்நாட்டின் நலனுக்காக மத்திய அரசிடம் நல்லுறவு பேணுவது வேறு. பாஜகவின் ஜால்ரா கோஷ்டியாக அதிமுகவை முடக்குவது என்பது வேறு. ஒருவேளை ஆட்சி போய்விடும் என்று நினைத்தால் (பாஜக நினைத்தால் உதவி செய்யமாட்டாங்கன்னு), so what… எப்படி இருந்தாலும் மக்கள்டதானே வாக்குக்கு வரவேண்டும். எதற்கு கட்சிக்குக் குந்தகமான வேலைகளைச் செய்யவேண்டும்? இந்த மாதிரி வேலைகளைச் செய்தால், தினகரன் (அல்லது சசிகலா) அதிமுகவின் ஒருங்கிணைந்த தலைவராவதை யாரால் தடுக்கமுடியும்?
இதைப்பற்றி நீங்க எழுதணும்னு நினைக்கறேன், அதற்கான வேளை இது என்றால்.
புதியவன்,
முதலில் உங்களிடமிருந்து என்னுடைய பின்னூட்டத்திற்கு
விளக்கமான பதிலை எதிர்பார்க்கிறேன்.
மீண்டும் மீண்டும் சப்ஜக்டை மாற்றும் உத்தி –
எனக்கு பிடிக்கவில்லை.
விவாதம் என்று வந்தால், மனசாட்சிக்கு விரோதம்
இல்லாமல் விவாதிக்க வேண்டும். இப்போதைக்கு வேறு
எதையாவது கிளப்பி திசை திருப்பிச் செல்வது
உங்களுக்கு சிறந்த வழியாகத் தோன்றலாம்.
ஆனால், மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல்
பேசுபவர்களைத் தான் என்னால் ஏற்றுக்கொள்ள
முடிகிறது.
நீங்கள் பாஜகவை / மோடியை ஆதரிப்பவராகவே
இருந்தாலும் கூட – இங்கே ஒரு நிஜமான
தவறு சுட்டிக்காட்டப்படும்போது, அதை ஏற்றுக்கொள்ளும்
பக்குவம் வேண்டும். இதைத்தான் உங்களைப் போன்றவர்களிடம்
நான் எதிர்பார்க்கிறேன்.
இல்லையென்றால் – கண்களை மூடிக்கொண்டு
மோடிஜி / பாஜக பஜனை பாடுபவர்களுக்கும்
உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று தான்
கேட்கத்தோன்றுகிறது….
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா.மை. சார்…. உங்கள் பதிலில் இருந்த உண்மைத்தன்மைதான் அந்த சப்ஜெக்டை மேலும் எழுத விடவில்லை. இல்லைனா, ‘நான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை’ என்றாவது எழுதியிருப்பேன். நிச்சயம் வாரணாசியில் மாறுதல்கள் இருக்கின்றன (பத்திரிகைச் செய்திகளின்படி, பார்த்தவர்கள் பகிர்ந்த படங்களின்படி). ஆனால் விளம்பரம் செய்துகொள்ளும் அளவு எந்த மாறுதலும் அங்கு இல்லை. ‘சென்னையை சிங்கப்பூராக்கினேன்’ என்பதுபோல வெட்டி விளம்பரக் கூச்சல்கள் அதிகம் கேட்பதால் (யார் விளம்பரம் செய்கிறார் என்று சொல்லத் தேவையில்லை. பிரதமர் மோடி அவர்கள், 20-30% வேலை நடந்ததுகூட ஒன்றும் இல்லாததுபோல் இருக்கிறது என்பதுதான் என் கருத்து.
/வாரணாசியும், கங்கையும் எந்த லட்சணத்தில் இருக்கின்றன என்பதை 4-5 மாதங்களுக்கு முன் நான் நேரிலேயே பார்த்து அனுபவித்து விட்டு // – இதைப் படித்ததும் நான் வேறு எதுவும் எழுதத் தோன்றவில்லை. நேரில் பார்த்தவர்கள் சொல்வதைவிட வேறு எது உண்மையாக இருக்கமுடியும்? அதனால், ‘வி ள ம் ப ர க் கூ ச் ச ல்’ என்பதைப் புரிந்துகொண்டேன்.
போகவேண்டிய இடம் வெகு தூரம். ஆரம்பித்த உடனேயே இடத்தை அடைந்துவிட்டதுபோல் கூச்சல் அதிகம் கேட்பதை உணர முடிந்தது.
அதனால்தான் உங்கள் விளக்கமே sufficient என்று அந்த சப்ஜெக்டை விட்டுவிட்டேன்.
ஓபிஎஸ், வாரணாசி மோடி பேரணி என்ற செய்தியைப் படித்து மனது கசந்துகொண்டிருந்த நான், அதனை இங்கு வெளிப்படுத்தினேன். சப்ஜெக்டை மாற்ற அல்ல.
நன்றி புதியவன்.
ஓபிஎஸ் பற்றியும் தாராளமாக பேசலாம்.
ஆனால், இந்த இடுகையின் ஊடாக அல்ல.
கொஞ்சம் பொறுங்கள். ரிசல்ட் வந்தபிறகு
அவர் பற்றியும் அவசியம் எழுதவேண்டும்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அய்யா …! அயோக்கியர்களின் அம்மணத்தைவிட புனிதர்களின் ஆடைகள் ஆபாசமாக உள்ளன அப்படித்தானே …? சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை பட்டது போதும் — நல்ல ஒரு சமூகத்திற்கு கைப்பிடித்து அழைத்துச் செல்ல யாராவது வருவார்களா என மனம் ஏங்கிக் கிடந்த நிலையில் . சிலர் நினைத்தது போலவே வந்தார்கள், ஆனால் அழைத்துச் சென்றவர்கள் — முந்தையதைப் பற்றி பேசியே நம்மை வெம்ப வைத்து விட்டார்கள் …?
. ஆனால் நம்மால் இந்தக் கருமத்தை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லையே…! இந்த ஜனநாயக அமைப்பில் ஓட்டுக்களை வாங்கி பங்கேற்பாளராய் இருப்பவர்களை விட பார்வையாளர்களாய் இருப்பதுதான் மிகவும் வலியைத் தரவல்லது என்பது தான் நாம் கண்ட உண்மை ..!!
நம்மை ஏதோ ஒன்றுதான் இந்தக் கூத்தின் அவலங்களை சுட்டிக்காட்ட பனித்துக்கொண்டே இருக்கிறது….!. ஒருவேளை அது தன்மானம், சுயமரியாதை போன்றவையாக கூட இருக்கலாம்….இந்த அரசியல் திருவிழாவின் யோக்கியதையைத் தெரிந்துகொண்டு அதில் நீதியையும் நேர்மையையும் தேடுவது என்பது மிகப் பெரிய முட்டாள்தனம் தானே …? வாழ்க — ஒழிக கூட்டங்கள் இருக்கும்வரை — சகித்துக்கொண்டு செல்வது தான் பொதுவுடைமை …!! எம்மை போல திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் …?
ஐயா உங்கள் வாதம் சரிதான். ஆனால் நோக்கம் சந்தேகத்திற்க்கு உரியது. பாஜக -வை விமரிசிப்பதைப்போல் காங்கிரஸின் பெருமைகளையும் எழுதினால் என்னால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியும்.
சுத்தம் பெரும்பாலும் தனிமனிதனை அதிகம் சாரும். உதாரணத்திற்கு இரு சக்கர வாகனம் ஓட்ட தலை கவசம் கட்டாயம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் எத்தனை நபர்கள் அதனை பின்பற்றுகிறார்கள். உங்களால் 100 சதவிதம் அனைவரும் தலைகவசம் எப்பொழுது அணிவார்கள் என்று கூறமுடியுமா? இந்த அரசு எவ்வளவு தூரம் வேலை செய்திருக்கிறது அல்லது இல்லை என்று கணிக்க நான்கு வருடத்திற்க்கு முன் இதை போன்று உள்ள ஒரு கானொளியை தயவுசெய்து பதிவிடவும்.
இதில் சாலையை சுத்தப்படுத்த குடிநீர் பயன்படுத்தபட்டிருந்தால் அது மிகவும் கண்டிக்க தக்கது. அதை பிரதானமாக நீங்கள் குறிப்பிட்டு இருந்தால் உங்கள் இடுகை சரியனதே. அதே சமயம் இது சாதரண தண்ணிரென்றால் அதில் பெரும் குறைகாண முடியாது. டேங்கர் கொள்ளளவு 10000 லிட்டர் என்றால் 15 வாகனம் பயன்படுத்தப்பட்டிருக்கும். இன்னும் விரிவாக எழுதினாலும் முடிவை எட்டிய உங்கள் கருத்தை யாராலும் மாற்றமுடியாதுதான்.
இறுதியாய் ஏன் இங்கு திடிரென வந்து குதித்திர் என கேட்க வேண்டாம். சாத்தியபடும்போது மட்டும் எழுதுவதையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.