…
…

இந்த selfie முகத்தின் மூலம் தான் இவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்…!!! இந்த முகத்திற்கு உரியவரை எவ்வளவு தூரம் நம்பலாம்… ???
…
32 வயது… தொழிலில் அதிகம் அனுபவம் இல்லாதவர்..
பஞ்சாபைச் சேர்ந்தவர்…அங்கேயே உயர்நீதிமன்றத்தில் தொழிலை துவக்கியவர்,
2 வருடங்களுக்கு முன்னர், சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்து கொண்டார்…
இந்த வயதில், இந்த பின்னணியை கொண்டவருக்கு –
பழுத்த அனுபவம் பெற்ற, பழம் தின்று கொட்டையும் போட்ட சுப்ரீம் கோர்ட்
மூத்த வழக்கறிஞர்கள் மத்தியில் – என்ன வழக்கு கிடைக்கும்…?
சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி ஜெயிக்கக்கூடிய அனுபவம், திறமை இவருக்கு
இருக்குமென்று யார் நம்புவார்கள்…?
இந்த சூழ்நிலையில் – முன்னுக்கு வர, புகழ்பெற என்ன வழி…?
வலத்தளங்களில், பாலியல் கொடுமையால், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம்
வெளியானவுடனேயே திடீரென்று மீடியா வெளிச்சத்திற்கு வந்தார் திருவாளர் உத்சவ் பெயின்ஸ்….!
நீதித்துறை மீதும்… (???), அதன் தலைமை மீதும் எவ்வளவு அக்கறை.. எவ்வளவு பொறுப்பு
அவருக்கு இருக்கிறது என்பதை, பரபரப்பான விதத்தில் உலகிற்கு பறைசாற்றினார்.
ஏப்ரல் மாதம் 4-ந்தேதி நடந்ததாக கூறும் ஒரு சந்திப்பை, சாவகாசமாக – 15 நாட்களுக்கு பிறகு,
ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் கதை வெளிவந்த சில மணி நேரங்களுக்குள்ளாக –
வெளிப்படுத்தி – அவரது கரிசனத்தை வெளிப்படுத்தினார்.
உ.நீ.ம.தலைமை நீதிபதியை செயலற்றவராக்க ஒரு குழு சதி செய்கிறது…. என்று
தனது முகநூல் பக்கம் மூலம் காரியத்தை துவங்கினார்…
அந்தப் பெண்ணின் அழுகையும், கண்ணீரும், துயரமும் – மறந்து, மறைந்துபோகும் வண்ணம்
இவர் புதுக்கதையை உருவாக்கினார்…
அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் Offer செய்யப்பட்டதாம்…
இருந்தும் அவரது நேர்மை அதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதாம்.
அவரது முகநூல் பக்கத்திலிருந்து –
I was offered bribe to help frame CJI in the sexual harassment case
by lawyering and organising a Press Conference against the CJI for
the Ex SC staffer who has accused the CJI of sexual harassment just
a few days back and also specifically asked to organise a press
conference only at the Press Club of India.
…..
suddenly offered me 50 lacs as my legal fees if I agreed to lawyer
and again he asked me specifically to organise a press conference at
the PCI after I refused as I found the story facts fishy and also he
couldn’t reply to any question about the many loopholes in the story
he narrated. When I again refused he said 1.5 Cr. I then asked him
to leave my office…
…
இந்த சதியை உடனடியாக ( 15 நாட்களுக்குப் பிறகு… !!! ) சம்பந்தப்பட்டவருக்கு
நேரடியாக தெரிவிக்க முயற்சித்தாராம்….
I was convinced about a well planned conspiracy after days of
getting such credible information.
I then finally went to CJI residence yesterday evening to inform him
about the bribe offer and the conspiracy, around 7 pm. But his staff
said he’s not at his residence. My CDR tower location details can be
checked.
…
இங்கே அவர் புகார் துவங்குவது –
– by a lobby of disgruntled judges, SC fixers, corporate scamsters
and a few corrupt Politicians – ஆகியோர் மீது.
After hours of ponder and soul searching, I have decided to speak
the truth and file a detailed affidavit in this regard in the SC
along with evidences of the conspiracy against the CJI by a lobby of
disgruntled judges, SC fixers, corporate scamsters and a few corrupt
Politicians – All who have meticulously planned the conspiracy to
force the CJI to resign as their ‘Corrupt works were not going
through in SC‘
…..
ஆனால், பின்பு, அவரை உ.நீ.மன்றம், அவர் சொன்னதையெல்லாம்
பிரமாண பத்திரமாக (affidavit) சமர்ப்பிக்கும்படி சொன்னபோது,
அப்படியே ஜகா வாங்கி விட்டார்…
சமர்ப்பிக்கப்பட்ட எழுத்து மூலமான affidavit-ல் அவர் என்ன சொல்கிறார்….?

பாலியல் புகார் கூறிய பெண் செய்யும் சதியைப் பற்றி பேச ஆரம்பித்தவர் –
எங்கெங்கே போகிறார் பாருங்கள் –
ஜெட் ஏர்வேஸ் – நரேஷ் கோயல்…
மும்பை குண்டு வெடிப்பு புகழ் – தாவூத் இப்ராஹீம்..
ஜட்ஜ்மெண்ட் தரகர் ரோமேஷ் சர்மா…
( இதை ஒட்டுமொத்தமாக கற்பனை என்று ஒதுக்கிவிட முடியாது…
உ.நீ.மன்றத்தில் இத்தகைய முயற்சிகள் தொடர்ச்சியாக
நடைபெற்றுக்கொண்டிருப்பவை தான்…
ஆனால், அவற்றை இந்த பாலியல் புகாருடன்
தொடர்பு படுத்த வேண்டிய அவசியம்….?
திசை திருப்பல் தவிர வேறு எதாவது உண்டா…? )
ஆனால், இவையெல்லாம் பற்றி இவர் “கேள்வி மட்டுமே” பட்டாராம்…
இவரிடம் ஆதாரம் எதுவும் இல்லையாம்…
இவற்றை இவரிடம் யார் சொன்னார்கள் என்பதையும் இவர்
வெளியிட மாட்டாராம்… அது (வக்கீல்) தொழில் தர்மம் இல்லையாம்…!!!
இவற்றைப்பற்றி யெல்லாம் கேள்விப்பட்டவுடனே, த.நீதிபதி அவர்களிடம்
சொல்வதற்காக, அவர் இல்லத்திற்கே நேரில் போனாராம்…
ஆனால் பார்க்க முடியவில்லையாம்…
இதையெல்லாம் வெளிப்படுத்தியதால், இவர் உயிருக்கு பயங்கர ஆபத்தாம்…
இவர் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படுவாராம்…!!!

ஆனால், அதை நீதி,நியாயத்தை காப்பதற்காக செய்யும் தியாகம் என்று
நினைத்து இவர் பெருமைப்படுகிறாராம்…..

————————–
புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி திரு.பட்நாயக் அவர்களின்
தலைமையிலான குழு, இந்த பின்னணிகளை ஆராய்ந்து, திருவாளர் பெய்ன்ஸ் அவர்களின்
கூற்றிலுள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்று கூறப்பட்டிருக்கிறது.
பெய்ன், தான் கூறும் பெரும்பாலான தகவல்கள் கேள்விப்பட்டனவையே என்றும்
அவற்றிற்கு குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும்,
தனக்கு இந்த விஷயங்களை சொன்னவர்கள் பற்றிய விவரங்களை தான் வெளியிட முடியாது
என்றும் அதை தன் தொழில் தர்மம் ( !!! ) அனுமதிக்காது என்றும் கூறுகின்ற நிலையில்,
– இவர் கூறுவதெல்லாம் உண்மையே என்று
நம்மால் முடிந்தவரை நாம் நம்ப விரும்பினாலும் கூட –
– வழக்கை, பரபரப்பை – கொஞ்ச காலத்திற்கு
( தற்போதைய தலைமை நீதிபதி – நவம்பர் 2019-ல் ரிடையர் ஆகிறார்…!!!)
திசைதிருப்புவது தான் இந்த நபரின் நோக்கமோ என்று
தோன்றுவதை தவிர்க்க முடியவில்லையே…
என் செய்வது….???
.
——————————————————————-



It is the fault of CJI Gogoi who instead of sacking the two assistants who tampered with the order in which Anil Ambani’s presence was ordered , should have ordered Detailed enquirer to find out the entire group which indulged in such malpractices.Itis also surprising why no lawyers like Prashant Bhushan and others did not take cudgels on their behalf when the action was to help Anil Ambani.The whole thing reminds one of Bill Clinton and Monica Lewinsky episode,Thiruvengadam