…
…
`400 பணியாளர்கள்; சாலையைச் சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர்
தண்ணீர்!’ – சர்ச்சையில் மோடியின் வாரணாசி பேரணி
—

…
அடுத்த மாதம் 19-ம் தேதி வாரணாசியில்
தேர்தல் நடைபெற இருக்கிறது.
அதற்கான வேட்புமனுவை மோடி இன்று தாக்கல் செய்திருக்கிறார்.
இதில் குறிப்பிட வேண்டியது என்னவெனில், இந்த வேட்புமனுவை
ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தபடி
மோடி வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.
அதற்காக வாரணாசி நகரமே சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
வாரணாசி மாநகராட்சி 40 டேங்கரில் நீரும், 400 பணியாளர்களையும்
இதற்காகக் கொடுத்திருக்கிறது. அவர்கள் இரவுப் பணியில்
அமர்த்தப்பட்டு சாலைகளைச் சுத்தம் செய்திருக்கிறார்கள்.
இதற்கு ஆன குடிநீர் செலவு மட்டும் 1.4 லட்சம் லிட்டர்.
வாரணாசியில் இதனால் 30 சதவிகித மக்கள்
போதிய தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருவதாகத் தெரிகிறது.
links –
and also –
https://tamil.thehindu.com/india/article26952593.ece?utm_source=india&utm_medium=sticky_footer
.
——————————————————————————————–
பின் குறிப்பு –
ஒரு தனிப்பட்ட மனிதரின் ஈகோ’விற்காக
1.4 லட்சம் லிட்டர் குடிநீரை
தியாகம் செய்த –
வாரணாசி மக்கள்..!
4-5 மாதங்களுக்கு முன்னர் வாரணாசிக்கு
பயணம் சென்றிருந்தேன்…
கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டது…
காசியும் சுத்தமாகி விட்டது..
கங்கையும் அதி-சுத்தமாகி விட்டது.
கொடுத்து வைத்த வாரணாசி மக்கள் … 🙂 🙂 🙂
.
—————————————————————————————————————-



அய்யா …! காசிக்கு போனால் கர்மம் தொலையும் — கங்கையில் மூழ்கினால் பாவம் விலகும் என்று ஒரு நம்பிக்கை உண்டு — அதனால் தற்போது தரைப்பகுதியை சுத்தம் செய்து இருக்கிறார்கள் — கங்கையை சுத்தப்படுத்த ஏற்கனவே பல கோடி செலவு செய்து இருக்கிறார்கள் — அங்கே சென்றுள்ளவர்களின் கர்மமும் – பாவமும் காணாமல் போக செய்கிற செலவு எல்லாம் ஒரு செலவா … இதைப்போய் பெரிசாக கேட்கலாமா .என்று வினவுபவர்களும் இருப்பார்கள் தானே …?