…
…

…
வெளிப்படையாக எழுதப்பட்டிருக்கிறது ஒரு கடிதம் …
எழுதி இருப்பது சாதாரண மனிதரல்ல…
குஜராத் மாநில உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தலைவரும்,
மூத்த வழக்கறிஞருமான யதின் ஓஜா….
என்ன சொல்கிறார் கடிதத்தில் –
உங்கள் வங்கிக்கணக்கில் ரூ.6,80,000 மட்டுமே இருப்பதாக
குறிப்பிட்டுள்ள நீங்கள் – உங்கள் மகன் மற்றும் மருமகன்
ஆகியோரின் வருமான வரிக் கணக்கு விவரங்களை
தாக்கல் செய்யத் தயாரா…?
இந்தியாவில் எந்த வழக்கறிஞராலும் சம்பாதிக்க முடியாத தொகையை அவர்கள்
வருமானமாக காட்டி இருப்பது எப்படி…?
நீங்கள் தலைமை நீதிபதியாக இல்லாவிட்டால்,
அவர்களது வருமானத்தில் 10 சதவீதம் கூட
சம்பாதித்திருக்க வாய்ப்பில்லையே… என்று கடுமையான
குற்றச்சாட்டுகளை மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார்.
இதுமட்டுமின்றி, பாலியல் புகார் குற்றம் சாட்டிய பெண்
எப்படி கடந்த அக்டோபர் 3-ம் தேதி, தலைமை நீதிபதி
பதவியேற்பு விழாவில், அவரது சிறப்பு அழைப்பின்பேரில்
விருந்தினராக பங்கேற்க முடிந்தது…?
அவரது சகோதரருக்கு ( அது சகோதரர் அல்ல … மைத்துனர்…)
உச்சநீதிமன்ற விதிகளை மீறி எப்படி பணி வழங்கப்பட்டது – போன்ற
கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
மேலும், பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படும் அளவிற்கு
அந்த பெண் செய்த குற்றம் தான் என்ன…?
அரை நாள் அனுமதி பெறாமல் விடுமுறை எடுத்தது அவ்வளவு பெரிய குற்றமா…?
பொருளாதார ரீதியாக ஒருவருக்கு மரண தண்டனை
அளிப்பதற்கு ஈடானது அல்லவோ பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்வது.
——-
திரு.யதின் ஒஜா’வின் ஆங்கில கடிதத்திலிருந்து
சில முக்கிய பகுதிகள் அவருடைய வார்த்தைகளிலேயே கீழே –

“Can you please disclose, Sir, the return of the income of your Son
and and son-in-law which runs into billions.”
———
“The return [of Gogoi’s son and son-in-law] would not reflect even
ten percent of income if Your Lordships were not a Judge of the
Supreme Court. I don’t think in the whole country, any Advocate
would have reflected this figure of income in their return with such
less number of years in practice. Not one, including any top-notch
respected Senior Advocate of the Supreme Court as on date.”
———-
Oza has also posed queries on factual aspects of the sexual
harassment allegations. Inter alia, he has queried how the lady
Court officer who has accused CJI Gogoi of the same was present at
the occasion of his oath-taking ceremony on a personal invitation,
rather than as an officer of the Court. Other concerns raised
include how the lady officer’s brother was allowed back door entry
into Supreme Court employment.
Further, Oza also opines that the lady officer’s dismissal from
service was disproportionate to her cited delinquency. He argues
that it has already been laid down that the “economic death penalty
i.e. dismissal”, and allied penalties can only be meted out to a
delinquent officer for proved charges of moral turpitude. On the
other hand, the lady officer, in this case, has been dismissed
citing absenteeism.
திரு.யதின் ஓஜாவின் கடிதம் இவ்வாறு முடிவடைகிறது –
“Rest is up to you, Sir, but please to defend your personal cause
don’t put jeopardy the institutional interest. By putting the vile
of the institutional interest, you are doing a great disinterest to
the institution to achieve your personal goal.”
———-
இத்தோடு நிற்கவில்லை விஷயம் –
ஓய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு
இன்னொரு பெரிய குற்றச்சாட்டை கூறுகிறார் –
திரு.கோகோய் அவர்களின் மகள், இன்னொரு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியான
ஜஸ்டிஸ் வால்மீகி மேதா அவர்களின் மகனை மணம் செய்து கொண்டிருக்கிறார்.
எனவே திரு.வால்மீகி மேதா – திரு.கோகோய் அவர்களின் சம்பந்தி முறையாகிறார்.
ஒரு ஊழல் புகார் காரணமாக, திரு.மேதாவை அப்போதைய
உ.நீ.மன்ற தலைமை நீதிபதி தாகூர் அவர்கள்,
டெல்லியிலிருந்து வேறோரு ஊருக்கு மாற்றி அதிரடி உத்திரவு பிறப்பித்தார்.
மார்ச் 2016-ல் அந்த உத்திரவு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், மேற்படியாளர், தனது சம்பந்தியின் மாற்றல் உத்திரவை நிறுத்தி வைக்கும்படி,
மத்திய அரசில் உயர்பதவி வகிப்பவரை ( ??? ) அணுகி வேண்டியிருக்கிறார்.
எதிர்கால உ.நீ.ம.த.நீ. பதவி வகிக்கப்போகிறவர் கேட்டுக்கொண்டால், மத்திய அரசில்
இருப்பவர்கள் அதை ஏற்காமல் இருப்பார்களா ..?
இது பதவி, செல்வாக்கை பயன்படுத்தி சொந்த காரியத்தை
சாதித்துக் கொள்வது ஆகாதா…? என்கிறார் நீதிபதி கட்ஜூ.
மார்ச் 2016-ல் இடப்பட்ட உத்திரவு, ஜனவரி 2017 வரை,
எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல்
நிறுத்தி வைக்கப்பட்டது. (put in cold storage)
ஜனவரி 2017-ல் திரு.தாகூர் ரிடையராகி,
புதிய தலைமை நீதிபதி பதவியேற்ற பிறகு, அவர் மூலம்
பழைய நிறுத்தி வைக்கப்பட்ட மாற்றல் உத்திரவு ஒரேயடியாக
ரத்து செய்யப்பட்டது என்கிறார் கட்ஜூ.
கட்ஜூவின் சொந்த வார்த்தைகளில் கீழே –
The daughter of the present Chief Justice of India, Ranjan Gogoi, is
married to the son of Justice Valmiki Mehta, Judge of Delhi High
Court.
There were some very serious charges against Valmiki Mehta because
of which in March 2016 the Supreme Court Collegium presided over by
the then Chief Justice of India, Justice Thakur, recommended his
immediate transfer from the Delhi High Court to another High Court.
Normally such a recommendation is implemented by the Govt of India
within a couple of weeks, but in Valmiki Mehta’s case it was put in
cold storage till the retirement of CJI Thakur in January 2017.
நாணயத்திற்கு இவ்வளவு புகழ்பெற்றவர்,
இப்போது தன் மீது கூறப்பட்டுள்ள பாலியல்
புகாரை, தானே விசாரித்தது எந்த வகையில் நியாயம்
என்றும் கேட்கிறார் கட்ஜூ.
இந்த இடுகையின் தொடர் பகுதிகள்
தேவைக்கு தகுந்தாற்போல் வரும் –
அதற்கு முன்னதாக, இந்த இடுகையில் சொல்லப்படும் செய்திகள்
எழுப்பும் அடிப்படை கேள்விகள் சில –
– திரு.யதின் ஓஜா எழுப்பியிருக்கும் சந்தேகங்களை
தீர்த்து வைக்கும் வகையில்,
திரு.கோகோய் தன்னுடைய சொத்து விவரத்தை
தானாகவே வெளியிட்டதைப் போல் அல்லாமல்,
மற்றவர்கள் சந்தேகம் எழுப்பிய பிறகாவது தனது மகன் மற்றும் மருமகன்
ஆகியோரின் சொத்து, வருமானம் பற்றிய விவரங்களை வெளியிடுவாரா…?
– புகார் கொடுத்த பெண்மணி மீது –
துவக்கத்தில் அளவிற்கு மிஞ்சிய நெருக்கம்,
சலுகைகள் கொடுக்கப்பட்டதும், பின்னர் –
மிதமிஞ்சிய தண்டனைகள் கொடுக்கப்பட்டதும்
நிஜமா…?
– அனுமதி இல்லாமல் அரை நாள் லீவு எடுத்ததும்,
10-15 நாட்களுக்குள் 3 முறை தன்னை இடமாற்றம் செய்வது ஏன்
என்று சாதாரணமாக தன் மேலதிகாரியிடம் முறையிட்டதும் –
ஒரு மத்திய அரசு ஊழியரை வேலையை விட்டு டிஸ்மிஸ்
செய்யும் அளவுக்கு கடுமையான ஒழுங்கீனங்களா…?
– அவரை பணிநீக்கம் செய்யும்போது ஒழுங்கு நடவடிக்கை
சம்பந்தமான (conduct rules) விதிகள் முறைப்படி
கடைபிடிக்கப்பட்டனவா…?
– உ.நீ.மன்றத்தில், பணியாளர்கள் நியமன விஷயத்தில்
த.நீதிபதிக்கென்று ஒரு கோட்டா இருக்கிற விஷயம் நிஜமா…?
இது மத்திய அரசைச் சேர்ந்த பணியாளர்கள் நியமனமாயிற்றே..
இது சட்டப்படி செல்லுமா..? சரியா… முறையா…?
இப்படி ஒரு கோட்டா இருப்பதோடு,
அதில் அதிகாரத்தில் உள்ளவர்கள்,
தகுதி இல்லாதவர்களை கூட நியமனம் செய்ய முடியுமா…?
– ஒரே மாத இடைவெளிக்குள், ஒரு குடும்பத்தில் –
மத்திய அரசில் பணியும் பெண்மணி டிஸ்மிஸ் செய்யப்படுவதும்,
காவல் துறையில் பணியாற்றும் அவரது கணவர் மற்றும் மைத்துனர்
ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்படுவதும், மற்றொரு
மாற்றுத்திறனாளியான மைத்துனர் வேலையை விட்டு நீக்கப்படுவதும் –
அந்த பெண்மணி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவதும் –
எந்தவித சந்தேகங்களையும் எழுப்பவில்லையா…?
– இந்த விஷயங்கள் பற்றி அந்த பெண்மணி புகார் கொடுத்தவுடன் –
எங்கிருந்தோ திடீரென்று சம்பந்தமில்லாத ஒரு வக்கீல் உள்ளே புகுந்து
“தலைமை நீதிபதியை அகற்ற சதி நடக்கிறது”
என்று தகுந்த ஆதாரங்களின்றி குற்றம் சாட்டி, விஷயத்தை
திசைதிருப்புவது எந்தவித சந்தேகங்களையும் எழுப்பவில்லையா….?
இதில் கடைசியில் கூறப்பட்டுள்ள வக்கீலைப்பற்றி சில விசித்திரமான சங்கதிகள்
தெரிய வருகின்றன… அவற்றை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
தொடர்ந்து உண்மையை தேடுவோம் …..
.
———————————————————————————————————————–



Sir,
Things are going beyond anybody’s control. Trying to clean the system shows how much mud has been settled and while trying to clean all dirts are coming up. Periodic cleaning could have helped the system to remain agile but people had their own reason to allow the mud to continue and show that the shallow water is pure.
Praying GOD to have some mercy on us. It is our KARMA but praying for some respite.
// திடீரென்று சம்பந்தமில்லாத ஒரு வக்கீல் உள்ளே புகுந்து
“தலைமை நீதிபதியை அகற்ற சதி நடக்கிறது”
என்று தகுந்த ஆதாரங்களின்றி குற்றம் சாட்டி, விஷயத்தை
திசைதிருப்புவது எந்தவித சந்தேகங்களையும் எழுப்பவில்லையா….? //
நிச்சயமாக எழுப்புகிறது. அந்த பெண்ணின் புகார் சம்பந்தப்பட்ட செய்திகளை
பின்னுக்கு தள்ளிவிட்டு,
த.நீதிபதியை ராஜினாமா செய்ய வைக்க சதி நடக்கிறது என்கிற ஆதாரமில்லாத குற்றச்சாட்டை முன் வைத்து, அதனை தொடர்ந்து விவாதங்களையும், செய்திகளையும் முன்னிலைப்படுத்துவது
ஒரு திட்டமிட்ட செயல்.
மக்கள் இதில் ஏமாந்து விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.