மதவெறி கொண்ட மூர்க்கர்களுக்கு –




A Sri Lankan roman catholic woman prays during a three minute nationwide silence observe to pay homage to the victims of Easter Sunday’s blasts outside St. Anthony’s Shrine in Colombo, Sri Lanka, Tuesday, April 23, 2019. A state of emergency has taken effect giving the Sri Lankan military war-time powers not used since civil war ended in 2009. Police arrested 40 suspects, including the driver of a van allegedly used by suicide bombers involved in deadly Easter bombings. (AP Photo/Eranga Jayawardena)

This image made from video, released by Derena TV shows women in despair after an explosion in Colombo, Sunday, April 21, 2019. Witnesses are reporting two explosions have hit two churches in Sri Lanka on Easter Sunday, causing casualties among worshippers.(Derena TV via AP)

A grieving woman is supported during a funeral service attended by Cardinal Malcolm Ranjith for Easter Sunday bomb blast victims at St. Sebastian Church in Negombo, Sri Lanka, Tuesday, April 23, 2019. (AP Photo/Gemunu Amarasinghe)

NEGOMBO – SRI LANKA – APRIL 23 : People attend burial ritual of the victims of multiple terror attacks during a funeral ceremony in Negomboo, Sri Lanka ,Tuesday, April 23 , 2019. The death toll from Sunday’s multiple terror attacks in Sri Lanka has risen to 310, according to media reports.
( Chamila Karunarathne – Anadolu Agency )

Men coordinate a mass burial of victims, two days after a string of suicide bomb attacks on churches and luxury hotels across the island on Easter Sunday, at a cemetery near St. Sebastian Church in Negombo, Sri Lanka April 23, 2019. REUTERS/Athit Perawongmetha – RC1E447FC1F0


epa07522408 Coffins of the victims of a series of bomb blasts are buried at cemetery Don David Katuwapitiya during the mass funeral in Colombo, Sri Lanka, 23 April 2019. According to police, at least 290 people were killed and more than 400 injured in a coordinated series of blasts during the Easter Sunday service at churches and hotels in Sri Lanka on 21 April 2019 EPA-EFE/M.A. PUSHPA KUMARA

எந்த மதமாக இருந்தால் என்ன…?
“பற்று”
எப்போது
“வெறி”யாக மாறுகிறதோ –

அப்போதே –
அங்கே மனிதத்தன்மை மறைந்து விடுகிறது…
ம-னி-தம் மறைந்து மதம் மட்டுமே மிஞ்சுகிறது…
மனிதன் – மிருகமாகி விடுகிறான் …

திரும்ப திரும்ப இதைத்தான் வலியுறுத்தி சொல்லிக்கொண்டே
இருக்கிறோம் … என்ன பயன்…?

என்ன பாவம் செய்தன அந்த 321-7 மனித உயிர்கள்…?

இதை யோசித்த,
திட்டம் போட்ட,
செயல்படுத்திய –

அந்த “மதம்” பிடித்த மனிதர்கள் இப்போது சொல்லட்டும் –
இதை பார்க்கும்போது அவர்களுக்கு
மகிழ்ச்சியா உண்டாகிறது…?

அது அவர்களுக்கு இம்மையிலும் இல்லை –
மறுமையிலும் கிடைக்காது.

ஏனெனில், எந்த மதமும் இதை செய்யச்சொல்லவில்லை…
மதத்தின் பெயரால் அப்பாவிகளை அழிக்க – எந்த மதம் சொல்கிறது…?

பலியானவர்களின் குடும்பத்திற்கு – இந்த துக்கத்தை
ஜீரணித்துக் கொள்ளக்கூடிய மனவலிமையையும்,
அமைதியையும் கொடுக்க இறைவனை இறைஞ்சுவோம்…

….

….

.
———————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to மதவெறி கொண்ட மூர்க்கர்களுக்கு –

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … !
    // மொழி, இனம், மதம் – ஆகியவற்றின் மீது பற்றுதல் இருப்பது
    எந்த விதத்திலும் தவறு இல்லை.

    ஆனால், இதே பற்று “வெறி” ஆனால் ….?
    “பற்று” – “வெறி” யாக உருவெடுக்கும் பட்சத்தில் –
    அங்கு முதலில் விடைபெற்றுக் கொள்வது “சகிப்புத்தன்மை” தான்.
    அந்த இடத்தில் பதிலுக்கு உள்ளே புகுவது “மற்றவரின் மீது ஆதிக்கம் ”
    -என்கிற வெறி.

    அனைத்து மதங்களும் –
    இறைவனை நோக்கித்தான் பயணிக்கின்றன. எந்தப் பெயரைச்
    சொல்லி அழைத்தாலும் – அந்த இறைவனுக்கு கேட்கும்…..

    நான் இந்து மதத்தை சேர்ந்தவன் தான். இருந்தாலும் எனக்கு
    எந்தவித வித்தியாசமும் கிடையாது.
    நான் நெற்றியில் விபூதியுடனேயே –
    சர்ச்சுக்கும் போவதுண்டு. தர்க்காவுக்கும் போவதுண்டு.
    (இதைக்குறித்து நான் ஏற்கெனவே எழுதி இருக்கிறேன் )

    ——————–
    – இஸ்லாமியப் பெரியவர் ஒருவர் சொன்னது இது –

    ” இஸ்லாத்தை பின்பற்றுபவர்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயர்.
    முஸ்லிம் என்ற அரபிச் சொல்லுக்கு “கீழ்ப்படிந்தவன்” –
    “அமைதியடைந்தவன்” என்று பொருள்.
    அமைதி பெறுவதும், அமைதி தருவதும் அவனது கடமைகள்.

    – தனது கரத்தாலும், நாவாலும் – பிறருக்கு தீங்கிழைக்காதவனே
    உண்மையான முஸ்லிம் ஆவான்.

    – எவரிடம் மனிதர்களின் உயிர்களும், உடைமைகளும் –
    பாதுகாப்பு பெறுகின்றனவோ, அவரே இறை நம்பிக்கையாளர் ஆவார்.

    – ஒருவரையொருவர் சந்திக்கும்போது கூட
    “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறுமாறு இஸ்லாம்
    அறிவுருத்துகிறது. அதன் பொருள் –
    “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்” என்பதே…

    —————————-

    மறைந்த காஞ்சி முனிவர் சொன்ன வார்த்தைகள் இவை –

    – “எல்லா சமயங்களும் கடவுளை வழிபட ஏற்பட்டவையே.
    எல்லா சமயங்களும் ” கடவுள் ஒன்றே ” என்றே சொல்கின்றன.
    “ஒருவரேயான அந்தக் கடவுள்” எந்த சமயத்தின் மூலம்
    வழிபட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார்.
    எனவே –

    எவருமே தாங்கள் பிறந்த சமயத்தை விட்டு வேறோரு
    சமயத்தை தழுவ வேண்டியது இல்லை.

    கோயில், சர்ச், மசூதி, விஹாரம் முதலிய கட்டிடங்கள்
    ஒன்றுக்கொன்று வித்தியாசப்படலாம். உள்ளே இருக்கிற
    மூர்த்தி அல்லது சின்னம் மாறுபடலாம். ஆனால் –

    அநுக்ரஹம் செய்கிற பரமாத்மா மாறவில்லை. ஒவ்வொரு
    தேச ஆச்சாரத்தையும், ஒவ்வொரு ஜனக்கூட்டத்தின்
    மனப்பான்மையையும் பொறுத்துப் பல்வேறு சமயங்கள்
    ஏற்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் ஒரே பரமாத்மாவை
    அவரவர் மனோபாவத்தின்படி பக்தி செய்து, அவரோடு
    சேர்வதற்கு வழி செய்பவையே ஆகும்.

    ஒரு பரமாத்மாவை அடைவதற்கான
    பல மார்க்கங்களே – பல சமயங்களும் – என்று
    நம் முன்னோர்கள் உணர்ந்திருக்கின்றனர்.

    ஒரே சத்தியத்தை தான் ஞானிகள்
    பல பெயர்களில் சொல்கிறார்கள் என்கிறது வேதம் – .

    ———————

    மதங்களின் உண்மையான நோக்கம் இவ்வாறிருக்க –

    மத வெறியர்கள் ( எல்லா மதங்களிலும் உண்டு ),
    மக்களிடையே மத வெறியைத் தூண்டி விட்டு –
    தங்கள் நோக்கங்களை சாதித்துக் கொள்கிறார்கள்.

    மதம் என்பது மிகவும், நுண்ணியமான – உணர்வுபூர்வமான விஷயம்.
    மத உணர்வைத்தூண்டி விடுவது மிக மிக எளிது.
    அதனால் விளையும் விளைவுகள் தான் மிக மிக மோசமானவை.

    சுயநலவாதிகள் மத உணரவைத் தூண்டி விட்டு வன்முறை, கொலை,
    கொள்ளை, கற்பழிப்பு என்று அடாத செயல்களில் ஈடுபட வைக்கிறார்கள்.

    எப்போதுமே, இதனால் உண்மையில் பாதிக்கப்படுவது –
    எந்த பாவமும் அறியாத அப்பாவிகள் தான் –
    அவர்கள் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் சரி…..

    இஸ்லாமியரோ, இந்துவோ – தாங்கள் மைனாரிடியாக வாழும்
    இடங்களில் அவர்கள் எதிர்கொள்ளும் – சூழ்நிலைகளையும்,
    அவர்களது அச்ச உணர்வுகளையும் என்னால் நன்றாகவே
    உணர முடிகிறது. எனவே, எந்த காலத்திலும் – எந்த சூழ்நிலையிலும் –
    மத விரோதங்களைத் தூண்டும் விதமாக நான் எழுதவும் மாட்டேன் –
    பேசவும் மாட்டேன். அத்தகையோரை ஆதரிக்கவும் மாட்டேன்.//

    மேலே உள்ளதை எழுதியது தாங்கள் தான் — நினைவுக்கு வருகிறதா ..? // கலவரத்தை தூண்டி விட்ட கயவர்கள் …. (கலவர பூமி – 4 )
    Posted on மே 30, 2015 by vimarisanam – kavirimainthan // என்கிற ஐந்து பகுதி தொடரில் நான்காவதில் உள்ள முகவுரை தான் அது — என்ன ஒரு சத்தான பதிவு — !

    எதற்கெடுத்தாலும் சாதி — மதம் — இனம் தமிழன் – மலையாளத்தான் — கர்நாடகத்தான் — தெலுங்கன் — வடகத்தியன் என்று புலம்புகிற ஜென்மங்கள் உயிரோடு இருக்கும் வரை மட்டுமே — ! ஆவிகளாக அலையும் போதாவது இந்தப் பாடலை கேட்கும் எண்ணம் அவர்களுக்கு வருமா …?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      செல்வராஜன்,

      Hats Off to You again.
      மிகப் பொருத்தம்.
      என் எழுத்துகள் எனக்கே மறந்து விட்டன.

      நீங்கள் கொடுத்திருக்கும் பழைய இடுகையை படிக்கும்போது –
      இப்போதெல்லாம் என் எழுத்தில் வீர்யம் குறைந்து விட்டதோ
      என்கிற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது.

      மீண்டும் உங்களுக்கு நன்றி.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

        அய்யா…! உங்கள் எழுத்தில் வீர்யம் குறையவில்லை ..சில நேரங்களில் ..சில விஷயங்களில் காெஞ்சம் காரம் கம்மியாக இருக்கிறது … அவ்வளவே …! குறையுமளவுக்கு எம்மை பாேன்றவர்கள் விடமாட்டாேம் ..இது பாேல் முந்தைய பதிவுகளை மேற்காேள் காட்டி உங்களை ” ரீ சார்ஜ் ” செய்துவிடுவாேம் ..என்கிற உறுதி எமக்கு இருக்கிறது …எல்லாம் நீங்கள் எழுதியதுதானே ….!!!

        • bandhu's avatar bandhu சொல்கிறார்:

          செல்வராஜன்… கே எம் மின் எல்லா பதிவுகளுக்கும் cross reference எப்படித்தான் வைத்திருக்கிறீர்களா! சடார் என்று 2015 இல் இருந்து இது குறித்த பதிவு என்று எடுத்துக் காட்டுகிறீர்கள்! அசர வைக்கும் உழைப்பு, உங்களது மற்றும் எழுதிய காவிரி மைந்தன் அவர்களுடையதும்!

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


          செல்வராஜன்,

          // சில விஷயங்களில் காெஞ்சம் காரம் கம்மியாக இருக்கிறது … அவ்வளவே …! //

          சகிப்புத்தன்மையை மற்றவர்களுக்கு போதித்து, போதித்து –
          அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் -re-bounce…ஆகி,
          என்னிடமே திரும்பி வந்து விட்டதோ… 🙂 🙂

          உங்களைப் போன்ற நண்பர்கள் தரும் உற்சாகம் தான்
          என்னை தொடர்ந்து எழுத வைக்கிறது….நன்றி செல்வராஜன்.

          -வாழ்த்துகளுடன்,
          காவிரிமைந்தன்

  2. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    தீவிரவாதிகள் ”எவன்களுக்கும்” மதம் இல்லை.

    அவன்கள் இந்தந்த‌ மதத்திற்காக செய்கிறேன் என்று சொன்னாலும் அந்தந்த மதத்திற்கு எதிராக தான் அவன்களின் தீவிரவாத செயல்கள் அமைகின்றன.

    அவன்கள் அப்பாவி மக்களை கொன்றுவிட்டு போய்விடுகிறான்கள். அந்த மதத்தில் இருப்பவர்களை பற்றி கொஞ்சமாவது தீவிரவாதிகள் யோசித்து இருப்பான்களா?

    தீவிரவாதத்தால் எதை சாதித்து இருக்கிறான்கள். அந்த மதத்திற்கும் அதை பின்பற்றுகிறவர்களுக்கும் அதனால் என்ன பலன் கிடைத்து இருக்கு.

    அந்த மதத்தை மற்றவர்கள் தூற்றுவதற்கும் அந்த மதத்திலுள்ளவர்களை மற்றவர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதற்கும் தான் அவன்களின் அந்த தீவிரவாத செயல்கள் காரணமாகிறது.

    எனில், அந்த தீவிரவாத மாபாவிகள் யார்?

    எந்த மதம் அப்பாவிகளை கொல்ல சொல்லி போதித்திருக்கு.

    அந்த தீவிரவாத மாபாவிகள் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அந்த மதத்தை பற்றி சரியாக அறிந்துகொள்ளாத‌ அப்பாவி இளைஞர்களை தன் வலையில் சிக்கவைத்து தீவிரவாத பாபாதக செயல்களை செய்து முடித்துவிடுகிறான்கள்.

    அவன்கள் எவனாக இருந்தாலும் பொதுவெளியில் வைத்து மற்ற பாவிகளுக்கும் படிப்பினையாக தண்டிக்கபடவேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.