ஜூ.வி. – ஸ்டாலினுக்கு எதிராக வேலை செய்கிறதா…?


ஜூ.வி. கடைசியாக யார் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது தெரிந்ததே… கலைஞர் இருந்த வரையில், அதன் நடவடிக்கைகள், திமுக தலைமைக்கு ஆதரவாகவே இருந்தன.

ஆனால், திரு.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அதன் நிலை மாறி வருவது தெரிந்தது.

இப்போது, வெளிப்படையாகவே ஸ்டாலினுக்கும் பல திமுக தலைவர்களுக்கும் எதிராக ஜூ.வி. நிறைய எழுத ஆரம்பித்து விட்டது.

கீழே இருக்கும் லேடஸ்ட் கட்டுரைத் துண்டுகளை பார்த்தால் புரியும்…

———————-

சில துளிகள் –

சாதாரண அம்பாசிடர் காரில் வந்து போன துரைமுருகனுக்குஇப்போது – ஏலகிரி மலையில் பங்களா, விதம் விதமான கார்கள்…..

விழுப்புரத்தில், பொன்முடி – சாதாரண ஆசிரியராக சில ஆயிரம் சம்பளத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் – இன்று ஐந்து கல்லூரிகள், 500 ஏக்கர், பிஎம்டபுள்யு தொடங்கி ஏகப்பட்ட கார்கள்……

இன்னும் – டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, பழனிமாணிக்கம், பொங்கலூர் பழனிச்சாமி  என்று சீனியர்கள் எல்லாரையும் மறைமுகமாககாட்டிக் கொடுக்கிறது ஜூ.வி……. சாதாரண திமுக தொண்டர்களை உசுப்பேத்துகிறது…!

 


..

..

..

ஏன் – என்ன ஆயிற்று….?

உள்ளே என்ன பிரச்சினை…?
இப்போது ஜூ.வி. யாருக்காக வேலை செய்கிறது….?

-இது குறித்து மேற்கொண்டு விவரங்கள் அறிந்த நண்பர்கள்
பின்னூட்டத்தில் எழுதினால், அனைவரும் அறிய வசதியாக இருக்கும்…!!!

.
—————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to ஜூ.வி. – ஸ்டாலினுக்கு எதிராக வேலை செய்கிறதா…?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      MERCY,

      வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர
      நம்மால் வேறு என்ன செய்ய முடிகிறது.

      -காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        அவசர அவசரமாகப் பண்ணவேண்டிய அவசியம், தேர்தலுக்காக பாஜக விளம்பரங்களுக்கு டேட்டா தேவைப்படிகிறதா?

    • Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

      அடுத்து — நான் விற்பனைக்கு ரெடி …!

  1. Prabhu Kalidas's avatar Prabhu Kalidas சொல்கிறார்:

    உண்மையான தகவல்கள் தானே

    ஜூவி பொய் சொல்ல வேண்டும் .. இவர்கள் எல்லாம் உத்தமர்கள் என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிண்றீர்களா ?

    • Mani's avatar Mani சொல்கிறார்:

      அப்படி இல்லை நண்பரே.
      திமுக தலைவர்களைப்பற்றிய நெகடிவ் உண்மைகளை
      ஜூ.வி. சொல்வது அபூர்வம்.
      அதைத்தான் கே.எம்.சார் சொல்கிறார்.

  2. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    `திமுகவின் தலைவர்கள் எல்லாம் பெரும் கோடீஸ்வரர்கள் என்பதை
    எத்தனை நாள்தான் மறைத்து வைக்க முடியும்? அதிமுகவில் சாதாரண
    தொண்டர்கள் கூட அவர்களின் தலைவியால் எம் எல் ஏ , எம் .பி
    ஆகி இருக்கிறார்கள். ஆனால் திமுகவில் பெரும் செல்வந்தர்கள் அல்லது
    தலைவர்களின் வாரிசுகள் அவர்களுக்குத்தான் சீட்டு கிடைக்கும். வட்டம்
    மாவட்டங்களுக்கு ரோடு காண்ட்ராக்ட் கிடைக்கும். கௌன்சிலர்களுக்கு மாமூல் கிடைக்கும். சாதாரண தொண்டர்களுக்கு பிரியாணியும் குவாட்டரும்தான் கிடைக்கும்.

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    காமை சார்… உங்களுக்கு மறந்திருக்காதுனு நினைக்கறேன். ஜூவில மாறன்களுக்கு பங்கு நிறைய இருக்கு. அதனால ஜூவி கேடிகள் சொல்லும் செய்திகளையும் வெளியிடுது. இரண்டாவது, இப்போ இப்படிச் சொன்னால்தான் தேர்தல் நெருக்கத்தில் அடுத்த முரசொலியாக ஆனாலும் நடுநிலைமைனு சொல்லிக்கலாம்னு விகடன் நினைக்குது. பசுத்தோல் போர்த்தியிருந்தாலும் ….. ….தான் (புலி நல்ல மிருகம்)

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      // இப்போ இப்படிச் சொன்னால்தான்
      தேர்தல் நெருக்கத்தில் அடுத்த முரசொலியாக ஆனாலும்
      நடுநிலைமைனு சொல்லிக்கலாம்னு விகடன் நினைக்குது ..//

      – உண்மை….இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  4. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    விற்பனையில் தொய்வு ஏற்படும் போது கையிலெடுக்கும் தந்திரம் … ! திமுகவில் அப்போது கலைஞர் முடிவு எடுக்கும் எந்த ஒரு விஷயத்திற்கும் முரோசொலி மாறனுக்கு இருந்த முக்கியத்துவம் — கேடி பிரதர்ஸ்களுக்கு இல்லை என்பதும் காரணமாக இருக்கலாம் — தற்போதைய தலைவர் தனது வாரிசை முன்னிறுத்தற அளவுக்கு இவர்களை கண்டுகொள்வதில்லை — காரணங்கள் பல இருக்கலாம் — கிச்சன் கேபினெட் உட்பட …?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      செல்வராஜன்,

      //விற்பனையில் தொய்வு ஏற்படும் போது கையிலெடுக்கும் தந்திரம் … ! //

      // தற்போதைய தலைவர் தனது வாரிசை முன்னிறுத்தற அளவுக்கு இவர்களை கண்டுகொள்வதில்லை //

      நீங்கள் கூறுவது போல், இவையும் முக்கிய காரணமாக இருக்கலாமென்று நினைக்கிறேன்.
      இதற்குப் பின்னாலும் இன்னும் எதாவதும் இருக்கலாம்… 🙂 🙂

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.