பகுதி-2 – அந்த மறக்க முடியாத மார்ச் 30-ந்தேதி ….!!!


( அந்த மறக்க முடியாத மார்ச் 30-ந்தேதி ….!!! -யின் தொடர்ச்சி…)

உள்ளே ஏதோ மீட்டிங் நடந்து கொண்டிருந்தது.
6-7 சீனியர் அதிகாரிகளுடன் ஜி.எம். விவாதித்துக் கொண்டிருந்தார்….
சாதாரணமாக அத்தகைய சந்தர்ப்பங்களில்
வேறு யாரும் உள்ளே போகக்கூடாது. ஆனால்,
எனக்கென்று சில உரிமைகள் இருந்தன. நான்
எப்போது வேண்டுமானாலும் ஜி.எம். அவர்களை பார்க்கலாம்…

உள்ளே பரபரப்பாக நுழைந்த நான், கதவருகிலேயே நின்றுகொண்டு
ஜி.எம். அவர்களை பார்த்தேன். என்னையும்,
கையில் காகிதத்தையும் பார்த்த ஜி.எம். ஏதோ அவசரம் என்பதை புரிந்துகொண்டு, discussion-ஐநிறுத்தி விட்டு –
” கே.எம். – என்ன விஷயம்…எதாவது அவசரமா…?”
என்று கேட்டார்.

நான் அருகே சென்று, சார் Defence Ministry-யில்
இருந்து ஒரு அர்ஜண்ட் மெசேஜ் வந்திருக்கிறது
என்று சொல்லி, காண்பித்தேன்…. வாங்கிப்பார்த்த ஜி.எம்.
படித்து விட்டு, ஒரு வித ஏமாற்ற உணர்வோடு என்னை பார்த்தார்.
என்ன இது, நாளை 31-ந்தேதி.
இன்று இப்படி ஒரு மெசேஜ் அனுப்புகிறார்கள்…?

அதுவும் ” ஆசிரியர் பணியிடங்கள், கட்டிடங்கள்,
ஃபர்னிசர்கள் எதற்குமே எந்தவித நிதி ஒதுக்கீடும் (budget allocation) கிடையாது…. இவை எதுவுமே இல்லாமல், உங்களால் பள்ளியை நடத்த இயலுமா…? ” என்று கேட்டால் -எப்படி முடியும்…?

நாம் தொடர்ந்து அவர்களை வற்புறுத்திக்கொண்டே இருப்பதால்,
இப்படி முடியாத கண்டிஷன்களை போட்டு, செய்யச்சொல்கிறார்களா…? – என்றார் கடுப்பாக…

( என் மனதில் ஏகப்பட்ட விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன… எப்படியாவது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, ஸ்கூல் அட்மிஷன் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும்…

நான் தொழிலாளர்களிடம் நெருங்கிப்பழகுபவன் என்கிற முறையில், அவர்களது பிரச்சினைக்கு எப்படியாவது ஒரு தீர்வு காண வேண்டும் என்கிற பதட்டம்…(என் குழந்தைகள் ஏற்கெனவே கேந்திரிய வித்யாலயாவில் தான் படித்துக் கொண்டிருந்தார்கள்… எனவே, எனக்கு இது தனிப்பட்ட விதத்தில் பிரச்சினை இல்லை…)

நான் ஜி.எம்.மிடம் சொன்னேன் –

“சார் இந்த சந்தர்ப்பத்தை நாம் நழுவ விடக்கூடாது… எப்படியாவது நாம் இதை பிடித்துக்கொள்ள வேண்டும்.. முதலில் sanction-ஐ வாங்கிக்கொள்வோம்… பிறகு மற்றவைகளுக்கு எதாவது வழி செய்யலாம்” என்றேன்.

“அது எப்படி முடியும்…? teacher posts கிடையாது,
building கிடையாது…. furniture கிடையாது – வெத்துக் காகிதத்தில்
sanction-ஐ வைத்துக்கொண்டு நாம் என்ன செய்ய முடியும்…?” என்றார்.

நான் தொடர்ந்து அவரிடம் சொன்னேன் –

“சார் டெல்லி லைனை நிறுத்தி வைத்துக்கொண்டு இங்கே வந்திருக்கிறேன்…. லைன் போய் விட்டால் – மீண்டும் நமது பதிலை அனுப்ப லைன் கிடைக்காது…

நீங்கள் இப்போது OK மட்டும் சொல்லுங்கள்.
நான் அவர்களுக்கு பதில் அனுப்பி விட்டு வருகிறேன்.. பிறகு நாம்
செய்யக்கூடியதைப்பற்றி விவரமாக பேசலாம்…
இதை விட்டால், நாளையோடு sanction காலாவதி ஆகிவிடும்.
அடுத்து ஒரு வருடத்திற்கு நம்மால் எதுவும் செய்ய முடியாது…
டவுன்ஷிப் குழந்தைகள் தொடர்ந்து திண்டாடுவார்கள் ..
தொழிலாளர்கள் நம்பிக்கையிழந்து தவிப்பார்கள் ” என்றேன்.

“உனக்கு நம்பிக்கை இருக்கிறதா…? நம்மால் இதை செயல்படுத்த
முடியுமா…?” என்று ஜி.எம். மீண்டும் என்னிடம் கேட்டார்…

(எனக்கும், என் அலுவலக பிரிவுக்கும் –
பள்ளிக்கூடம் நடத்துவதற்கும், எந்தவித சம்பந்தமும் இல்லை…
அலுவலக ரீதியில், அது நான் handle
செய்ய வேண்டிய subject இல்லை….
இருந்தாலும், என் மனம் இதில் என்னை ஈடுபடத் தூண்டியது…)

“Yes Sir… Defenitely we can make use of this…
I have some ideas….We can work out some methods …
I will come back to you later with details ” என்று சொல்லி விட்டு,

எப்படியாவது அழுத்தம் கொடுத்து அவரை சம்மதிக்க வைக்க வேண்டுமென்று – தொடர்ந்து, “சார் நான் ஓகே சொல்லி மெசேஜ் அனுப்பி விடவா…?” என்று வேகமாகக் கேட்டேன்…. “பதில் மெசேஜை அனுப்பி விட்டு மீண்டும் உங்களிடம் வருகிறேன் – இது பற்றி விவரமாக பேசலாம்” என்றேன்….

அவநம்பிக்கையுடனே என்னிடம்
” If you are so sure… Go ahead –
tell them OK .. But I have absolutely no hope…
Ministry is going to fire us later ”

என்றார்….

ஓடினேன்.. ஒரே ஓட்டம் என் பணியிடத்திற்கு …!

அந்த TPM Operator லைனை இன்னும் engage- ல் வைத்திருந்தார். ஓடிப்போய், அவரை நகரச் சொல்லி விட்டு, அவர் இருக்கையில் நான் அமர்ந்து கொண்டு,

வந்த மெசேஜுக்கான பதிலை, நேரடியாக டெலிபிரிண்டரில் டைப் அடிக்கத் துவங்கினேன். எந்தவித draft தயாரிப்பும் கிடையாது…அதற்குள் லைன் போய் விடுமே…! மனதிலிருந்தே வார்த்தைகள் நேரடியாக TPM-க்குள்ளே வந்து விழுந்து கொண்டிருந்தன…

சாதாரணமாக உயர்மட்டத்திற்கு,
அதுவும் பாதுகாப்பு அமைச்சகம் போன்ற
முக்கியமான இடங்களுக்கு அனுப்பும் கடிதங்களை எல்லாம்

முதலில் draft தயார் செய்து, அதை எனக்கு மேலிருக்கும் அதிகாரிகளின் மூலம் ஜி.எம். வரை அனுப்பி, அவர்கள் (தேவைப்பட்டால்) உரிய திருத்தங்கள் செய்தபிறகு, மீண்டும் final letter தயார் செய்யப்பட்டு, அதில் ஜி.எம். கையெழுத்து போட்ட பிறகு தான் அனுப்பப்பட வேண்டும்.

இப்படி நேரடியாக Ministry – க்கு
மெசேஜ் அனுப்புவதைப்பற்றி எல்லாம்
யாரும் யோசித்துக்கூட பார்க்க முடியாது… ஆனால் –

ஆனால் – மணி ஏற்கெனவே மாலை ஆறை
நெருங்கிக் கொண்டிருந்தது.
நான் இதையெல்லாம் செய்து கொண்டிருந்தால்,
சந்தர்ப்பத்தை தவற விட்டு விடுவோம் என்பதால்,

துணிந்து, எனக்கு தோன்றியதை நேரடியாக மெசேஜாக அனுப்பிக்
கொண்டிருந்தேன். அமைச்சகம் சொல்லி இருக்கும் கண்டிஷன்களை ஏற்று, புதிய பள்ளியை திருச்சி தொழிற்சாலை நிர்வாகம் நடத்த உறுதியளிக்கிறது என்றும் இதுகுறித்து விவரமான கடிதம் தனியே தொடரும் என்றும், அதற்குள் financial year நாளையே முடிவடைந்து விடும் என்பதால் –

பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக இதற்கான உரிய “formal Govt.
sanciton” -ஐ வழங்கி விடுமாறும் கேட்டுக்கொண்டு எழுதி இருந்தேன்…

நான் அனுப்பும் செய்தி நேரடியாக online-ல் சென்று கொண்டிருந்தது.
ஒருவழியாக செய்தியை முடித்து விட்டு, அந்தப்பக்கத்தில் இருப்பவரை
” confirmed… message received clearly ” என்றும் சொல்ல வைத்து –
acknowledgement -உம் வாங்கினேன்…

“அப்பாடா” என்று சத்தமாக சொல்லிக்கொண்டே திரும்புகிறேன்…

surprise… என் முதுகுக்கு பின்னால், ஜி.எம். நின்று நான் செய்தியனுப்புவதை கவனித்துக் கொண்டிருக்கிறார். என் செக்ஷனில் பணிபுரியும் அனைவரும், ஜி.எம். அவர்களே அதிசயமாக நேரடியாக வந்திருப்பதால், அவரவர் சீட்’டில் எழுந்து நின்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்… இதுவரை எந்த ஜி.எம்.மும் அப்படிச் செய்ததில்லை….

நான் வியப்பாக ஜி.எம்.மை பார்த்துக் கொண்டே, sorry sir,
நீங்கள் வந்ததை நான் பார்க்கவில்லை என்று சொல்லி விட்டு “சார் மெசேஜை அனுப்பி விட்டேன்” என்று சொல்லிக்கொண்டே – அனுப்பிய செய்தியின் பிரதியை அவரிடம் நீட்டினேன்..

அதற்குள் அவரே …
” I have already read – while you were sending it”
என்றார்…!

“Ok – Let’s discuss about this in detail….
come to my Office with Senior Admin. Officer ”

– என்று சொல்லிகொண்டே அவர் சென்று விட்டார்…

இனி தான் இருக்கிறது பிரச்சினையே….

அரசு இயந்திரம் என்பது ஒரு விசித்திரமான ஜந்து..

யாரும், அவரவர் எல்லையை தாண்டி ஒரு அடிகூட எடுத்து வைக்க மாட்டார்கள்.. government rules, guidelines
இவையெல்லாம் வேதபுத்தகம் மாதிரி…. தப்பித்தவறி
எதாவது செய்ய நேரிட்டாலும், எதையும் எழுத்து வடிவத்தில்
வைத்துக்கொள்ள மாட்டார்கள். அதுவும் இந்த ஜி.எம்.மோ –
விதிமுறைகள் மீறப்படக்கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருப்பவர்.

ஜி.எம்.மிடம் discussion க்கு போகும் முன்னர்,
நான் அட்மின் ஆபிசரை சம்மதிக்க வைத்து,
என் பக்கம் ஒத்துழைக்க வைக்க வேண்டும்.

Deputy G.M. அந்தஸ்தில் இருப்பவர் அவர். ஒரே ஒரு சாதகமான விஷயம் என்னவென்றால் – எனக்கு அவருடன் நல்ல பழக்கமும், புரிதலும் உண்டு. என்னை 100 சதவீதம் நம்புபவர் அவர்…

முதலில் அவரது அறைக்கு போய், அவரிடம் விவரங்களை எல்லாம்
எடுத்துச்சொல்லி, தொழிற்சாலை ஊழியர்களுக்காக செய்யப்படும் ஒரு நல்ல காரியம்(welfare matter) இது என்பதால், நாம் சில விஷயங்களில் வளைந்து கொடுத்து தான் ஆக வேண்டும் என்று கூறினேன்…

ஆனால் ஜி.எம். எதுவும் rules படி தான் நடக்க வேண்டும் என்பாரே…
உங்கள் யோசனைகள் அதற்குள் வராதே… ஒப்புக்கொள்வாரா… ? என்று பலத்த சந்தேகத்தை கிளப்பினார்….

“சார் … ஜி.எம். கிட்ட நான் பேசறேன்… நீங்க என்னை சப்போர்ட்
பண்ணி பேசினா போதும் ” என்று கூறி அவரை என் யோசனைகளுக்கு தயார் செய்தேன், பின் இருவருமாக ஜி.எம். அறைக்கு போனோம்.

இரவு 7 மணியை தாண்டி விட்டது.
ஜி.எம். வழக்கமாக 6 மணிக்கு கிளம்பி விடுபவர், வீட்டுக்கு போகாமல்,
எங்களுக்காகவே காத்திருந்தார்.
உட்காரச்சொல்லி விட்டு, ஜி.எம்.கேட்டார்…

“K.M. tell me – What are your plans…?
How we are going to manage this situation..?” என்றார்.

நான் அதற்குள்ளாகவே, என் மனதில் சில யோசனைகளை வைத்திருந்தேன்… அவற்றை வரிசையாக விளக்கினேன்…

1) புதிய பள்ளிக்காக, டவுன்ஷிப்பில் இருக்கும் –
Officers Club-ல் பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக இருக்கும்
Hall-ன் ஒரு பகுதியை 1-st Standard வகுப்பறையாக
பயன்படுத்திக் கொள்வது…

முதல் வருடத்தில், ஒரு வகுப்பை மட்டும் (1st Standard alone)
துவக்கலாம்…. அதன் வகுப்பறையாக இந்த Hall-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். 3-4 மாதங்களுக்கு ஒருமுறை தான் அந்த ஹால், நிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. அதுவும் மாலை/இரவு நேரத்தில் தான். அப்போது மட்டும் ஃபர்னிசர்களை இடம் மாற்றி விடலாம்.

ஜி.எம். தான் Officers Club-ன் President என்பதால், அதற்கு வேறு
யாரின் அனுமதியும் தேவையில்லை.

2) ஃபர்னிசர் என்று ரொம்ப சீரியசாக போகாமல்,
தொழிற்சாலைக்குள்ளேயே, கார்பெண்டரி செக்ஷனில், 5-6 வயது
குழந்தைகள் அமர்கின்ற அளவில் சிறியதாக – 12 பெஞ்சுகள்,
12 டெஸ்க்குகள் (ஒவ்வொரு பெஞ்சிலும்
3 குழந்தைகள் அமர்கிற மாதிரி…) தயாரிக்கலாம்…
ஒர்க் ஷாப் பயன்பாட்டிற்காக அவற்றை தயாரிப்பதாக
work order உருவாக்கலாம்.

3) சிவில் செக்ஷன் மூலமாக அந்த hall-ன் ஒரு பகுதியில்,
தற்காலிக ஏற்பாடாக சுவற்றில் ஒரு black board-உம் அமைக்கச் செய்யலாம்…

இவை போதும் சார் – பள்ளியை துவங்க – என்றேன்….

“முக்கியமான விஷயத்தை விட்டுவிட்டாயே… ஆசிரியர்களுக்கு என்ன
செய்வது..? ” என்றார் ஜி.எம்.

நான் தொடர்ந்தேன் –

எனக்குத் தெரிந்து, தொழிற்சாலைக்குள்ளே, தற்போது பணிபுரிபவர்களிடையேயே, இதற்கு தகுதியான நபர்கள்
இருக்கிறார்கள். நாம் ஒரு சர்குலர் போட்டு,
விருப்பம் உள்ளவர்களை விண்ணப்பிக்கச் சொல்லலாம்…

அவர்கள் பதவி, சம்பளம் எல்லாம் – இப்போது இருப்பதே தொடரலாம்..
தற்காலிகமாக ஒரு வருட காலத்திற்கு தொழிற்சாலையில்
வேலை செய்வதற்கு பதிலாக, அவர்கள் இந்த பள்ளியில் ஆசிரியராக பணி புரிய வேண்டும்…

எனக்கு நம்பிக்கை இருக்கிறது…
நமக்கு தகுந்த நபர்கள் கிடைப்பார்கள்.
இரண்டு பேர் இருந்தால் போதுமானது…

ஜி.எம். அவர்கள், கண்டிப்பானவரே தவிர மிகவும் சின்சியரானவர். நியாயமான யோசனைகளை மறுக்க மாட்டார்.

ஜி.எம். முகத்தில் ஒரு வித நிம்மதியை பார்த்தேன்…
இருந்தாலும் அவர் சந்தேகம் அவருக்கு…
தொழிலாளர்களின் நன்மையை கருதி
இதைச் செய்ய வேண்டுமென்று அவரும் நினைத்தாலும் –
ஸிஸ்டத்தை விட்டு வெளியே வர அவரால் இயலாது… 8 ஆண்டுகள்
இங்கிலாந்தில் இருந்து விட்டு வந்த அவரது இயல்பான குணம் …!!!

” இதெல்லாம் சரியாக வருமா…?
Can we justify these activities…..?”
Will Hqrs approve this…? என்றார்.

நம்ம அணுகுமுறை …?
“நாலு பேருக்கு நல்லது என்றால்,
எதை வேண்டுமானாலும் செய்யலாம்..
After all மக்களுக்காகத்தானே சட்டங்கள்…???
முடிந்தால் அதற்குத் தகுந்தாற்போல் சட்டத்தை வளைத்துக் கொள்ள
வேண்டும் (the way of interpretation of rules) என்பதே…

நான் சொன்னேன்…
சார்…இவற்றை எல்லாம் விவரமாக மேலிடத்திற்கு
சொல்ல வேண்டிய அவசியமில்லை.

“We are trying to manage with our existing resources..”
என்று மட்டும் சொல்லி விடுவோம்…
மற்றதை நம் அளவிலேயே வைத்துக்கொள்ளலாம் என்றேன்…
அப்படி மீறி அவர்கள் எதாவது கேட்டாலும்,
தொழிலாளர்களின் நலன் கருதி இதைச் செய்தே ஆக வேண்டியிருக்கிறது
என்று சொல்லிக் கொள்ளலாம்…அவர்களுக்கும் புரியும்” என்றேன்.

இருந்தாலும் ஜி.எம். அவர்களுக்கு ஒரு relief கொடுப்பதற்காக
ஒரு யோசனை சொன்னேன்.

” நீங்கள் எதிலும் கையெழுத்து போட வேண்டாம்..
நேரடியாக எதிலும் இன்வால்வ் ஆக வேண்டாம்…
எந்த பிரச்சினையும் எழாமல், இதை
செயல்படுத்தும் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள்…..”

உங்கள் ஒப்புதலோடு ஒரு simple Office Order –
நாம் வழக்கமாக போடும் duty allocation மாதிரி ஒன்றை போடலாம்.

————-
Govt. sanction has been received for the functioning
of a new Kendriya Vidyalaya No.2. from the
current academic year itself.

In view of the above, the following additional responsibilities
are given to shri k.m. in addition to his routine duties.

Until regular arrangements are made,
shri k.m. will co-ordinate and arrange creation of
necessary basic infrastructures and facilities required
for functioning of the new school.

– என்று.
—————-

இந்த Office Order- ஐ அடிப்படையாக வைத்துக்கொண்டு,
நான் தேவையான அனைத்து வேலைகளையும் நடத்திக் கொள்கிறேன்…

அவ்வப்போது என்னென்ன பணிகள் நடந்து
கொண்டிருக்கின்றன என்பதை நான் விவரமாக
உங்களிடம் ரிப்போர்ட் செய்கிறேன்…

அடுத்த 15 நாட்களில் அனைத்து வேலைகளையும் முடித்து,
புதிய பள்ளியை திறந்து விடலாம்..என்றேன்…

இதற்கு மேல் நான் செயலாற்றிய விவரங்களைப்பற்றி அதிகம் விவரிக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்…

மறுநாள் காலையில் டெல்லி பாதுகாப்பு
அமைச்சகத்திலிருந்து, அதே TPM- மூலம் -ஒரு மெசேஜ் வந்தது …!

திருச்சியில், Kendriya Vidyalaya No.2 – என்கிற
நாமகரணத்தோடு புதிய பிரைமரி ஸ்கூல் துவங்க
Govt. of India கொடுத்துள்ள அனுமதியை அனுப்பியது.

அடுத்த மாதமே, புதிய ப்ரைமரி பள்ளி, ஒன்றாம் வகுப்புடன், Officers Club-ல் செயல்படத் துவங்கியது… இந்த பள்ளிக்கு Kendriya Vidyalaya (கே.வி.) -2 என்று பெயரிடப்பட்டது.

அதற்குப் பிறகு, அடுத்த நிதியாண்டிலிருந்து, ஏற்கெனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் பள்ளி என்கிற அந்தஸ்தில்,அதற்கு வேண்டிய அனைத்தையும், budget projection மூலம் நிதியமைச்சகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பெறப்பட்டது.

கொஞ்சம் கொஞ்சமாக, நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, வளம் பெற்று,
இன்றைய தினம் அந்த பள்ளி -(Kendriya Vidyalaya No.2, Trichy-25)
சுமார் 850 மாணவர்களுடன், 65 ஆசிரியர்களுடன் –
1-வது முதல் 12-வது வகுப்பு வரை அமையப்பெற்று –

-இப்படி உருப்பெற்றுள்ளது….!!!

இன்று வளர்ந்து, இவ்வளவு பெரிய பசுமையான
ஆலமரமாக நிற்கும் இந்த பள்ளியை பார்க்கும்போது,
என் மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மத்திய அரசில், அதுவும் பாதுகாப்புத் துறையில்
பணிபுரிந்து கொண்டிருக்கும்போது – தமிழ்நாட்டில்,
அதுவும் சொந்த ஊரிலேயே –
இத்தகைய ஒரு பணியைச் செய்யக்கூடிய பாக்கியம்
எத்தனை பேருக்கு கிட்டும்…?

இந்த மாபெரும் ஆலவிருக்ஷத்தை உருவாக்கும் பணியில் எனக்கும் சிறுதுளி பங்கு இருந்தது என்று நினைக்கும்போது ஒரு பெருமிதமும் ஏற்படுகிறது.

எனக்கு முழு சுதந்திரம் அளித்து செயல்படவும்,
எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவும் துணையாக
இருந்த அந்த ஜி.எம். அவர்களையும்,
அந்த மார்ச் 30-ந்தேதியன்று,
சம்பந்தப்பட்ட அனைவரின் மனதிலும் –
ஒரு பாசிடிவ் எனர்ஜியை ஏற்பட வைத்து –
இத்தகைய ஒரு அருமையான கல்விக் கோயில் உருவாக –
கருணை காட்டிய இறைவனையும்
இந்த நாளில் நன்றியுடன் நினைக்கிறேன்….

.
—————————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to பகுதி-2 – அந்த மறக்க முடியாத மார்ச் 30-ந்தேதி ….!!!

  1. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    மத்திய அரசாங்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும், அதையும் நல்ல காரியங்களை செய்ய பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். வாய்ப்பு கிடைத்தது உங்கள் அதிருஷ்டம் என்றாலும் கூட, இந்த மாதிரி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்பவர்கள் அபூர்வம். உங்கள் வலைத்தளத்தையும் எழுத்தையும் பார்க்கும்போதே, நீங்கள் சர்வீசில் இருந்தபோது எப்படி இருந்திருப்பீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. வாழ்த்துகள் கே.எம்.சார். இந்த மாதிரி அனுபவங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    மிகவும் மனம் நெகிழ்ந்த பதிவு. இறைவன் உங்கள் மூலமாக இதனை ஆரம்பித்திருக்கிறார் என்றே தோன்றியது. சக மனிதர்கள் மீது நாம் செலுத்தும் அன்பு, ஆண்டவனிடம் செலுத்துவதாக நாம் சொல்லிக்கொள்ளும் அன்பைக் காட்டிலும் வலிமை மிகுந்தது. மிகுந்த மன நிறைவைக் கொடுத்திருக்கும் இந்தச் செயல் எனக்கும் நிறைவைக் கொடுத்தது. வாழ்க வளமுடன்.

  3. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    ///இந்த மாபெரும் ஆலவிருக்ஷத்தை உருவாக்கும் பணியில் எனக்கும் சிறுதுளி பங்கு இருந்தது என்று நினைக்கும்போது ஒரு பெருமிதமும் ஏற்படுகிறது.///

    நிச்சயமாக.

    ஆனால், இந்த ஆலவிருக்ஷத்தின் மூல வித்து நீங்கள் தான். சிறு துளி பங்கு எல்லாம் இல்லை, முழு முதற் காரணமாக தங்களையே இறைவன் தேர்வு செய்து இருக்கிறான்.

    Bless you Sir.

  4. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    கறாரான ஆபீசர்களிடம் –அர்ப்பணிப்பு — ஆர்வம் — அத்தியாவசியம் என்பதை எடுத்துரைத்தால் காரியங்கள் கைகூடும் என்பதற்கு இதுவே சான்று .. தங்களின் முயற்சி வெற்றியடைந்ததற்கு காரணம்// “நாலு பேருக்கு நல்லது என்றால்,
    எதை வேண்டுமானாலும் செய்யலாம்..
    After all மக்களுக்காகத்தானே சட்டங்கள்…??? // என்பதுதான் ..

    கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தங்களது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்பது பல பெற்றோர்களின் கனவாக உள்ளது. ஆனால், இதற்கு லட்சக் கணக்கில் செலவழிக்க வேண்டுமே என்ற பெற்றோர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் ஓர் சிறப்பம்சமும் இப்பள்ளியில் உள்ளது. …அது — மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் மாணவர்கள், கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்பது தான் .. இதனடிப்படையில் 25 சதவீதம் இதற்காக ஒதுக்கியுள்ளார்கள் — மீதி 75 சதவீதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமையோடு – மாநில அரசு ஊழியரின் பிள்ளைகளுக்கும் உண்டு …

    . இங்கே எல்கெஜி –யுகேஜி என்கிற பிக்கல் -பிடுங்கல் ஏதுமின்றி நேரடியாக ஒன்றாம் வகுப்பில் சேர்க்கலாம் — ஆனால் ஒவ்வொரு வகுப்பிற்கு 40 மாணவர்கள்தான் — அதனால் போட்டி கடுமையாவே இருக்கும் — தற்போது இப்போது தமிழகம் – புதுச்சேரி யில் உள்ள 49 பள்ளிகளோடு இந்த நான்கும் சேரும் — ! தமிழகத்தில் இந்தாண்டு மேலும் நான்கு பள்ளிகள் நிறுவ மத்திய அரசு உறுதியளித்துள்ளது தற்போதைய தேவை …!!!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      செல்வராஜன்,
      அறிவழகு,
      புதியவன்,
      அரவிந்தன் –

      என்னை ஊக்கப்படுத்தி வாழ்த்தும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  5. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    அற்புதமான சேவை கா . மை . சார். இது போன்ற பொது சேவை சந்தர்ப்பங்கள் அரசு பணியில் இருக்கும்போது மிக அரிது என்றாலும் அதை உபயோகப்படுத்திக்கொள்பவர்கள் மிக மிக அரிது. நீங்கள் போட்ட வித்தால் ஒரு பள்ளி வளர்ந்திருக்கிறது என்பது உங்கள் வாழ்நாளின் பெரும் பேரு!

    In addition to his routine duties
    என்ற வரியில் , இதற்கு எந்த அளவு நீங்கள் உழைத்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது!

  6. Sridhar's avatar Sridhar சொல்கிறார்:

    தங்கள் முயற்சி மற்றும் ஞாபக சக்தி எங்களுக்கு ஒரு உந்துதல் அய்யா.

    தலை வணங்குகிறேன்!!

  7. Mercy's avatar Mercy சொல்கிறார்:

    Fantastic work done by you KM Sir. Even now you are doing wonderful job by writing beautiful ,
    and heart touching articles. God Bless.

  8. Dhamodharan Subramaniam's avatar Dhamodharan Subramaniam சொல்கிறார்:

    A man with a sincere efforts and true belief can do wonders. Sir, you are truly a role model for us to believe and do what is right to the society.

  9. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர்கள் –

    Dhamodharan Subramaniam
    Mercy,
    Sridhar and
    bandhu

    -உங்கள் அன்பிற்கு என் மனமார்ந்த நன்றி.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  10. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    Excellent work KM sir We need more kendriya vidyalayas here. you have utilised your job in central govt to do this. Samething we want from our elected representatives also.

  11. Ganapathy Kannan's avatar Ganapathy Kannan சொல்கிறார்:

    திரு. கேஎம் சார்,

    பள்ளி உருவாக்குவதற்காக தாங்கள் பட்ட முயற்சிகளும், சிரமங்களும் எங்கள் கண்களைப் பனிக்க வைக்கின்றன. தாங்கள் பிறருக்கு உதவக்கூடிய மனத்துடன் பல காரியங்களை தங்கள் அலுவல் நாளில் செய்து வந்திருக்கின்றீர்கள் என்பது மிகுந்த மனநிறைவு அளிக்கிறது. தங்களின் இத்தகைய கட்டுரைகள், அதிகாரத்தில் இப்போது இருந்துகொண்டிருக்கும், தங்கள் தளத்தை படிப்பவர்களுக்கு, தாங்களும் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.

    அரசியல் கட்டுரைகளுக்கு இடையிடையே அடிக்கடி, தாங்கள் தங்கள் பணியில் நடந்த நிகழ்வுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டால் அது அனைவருக்கும் மனதளவில் நல்லது செய்ய உந்துசக்தியாக அமையும் என்று கருதுகிறேன். தயவுசெய்து இதுபோன்ற அனுபவங்களை அனைவரும் அறியத் தாருங்கள்.

    இறைவன் தங்களுக்கு நீடித்த ஆயுளை வழங்க பிரார்த்திக்கிறேன்.

    – கணபதி கண்ணன்

  12. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    கணபதி கண்ணன் மற்றும் தமிழ்மணி,

    – உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.