…
…

E04JM3
…
ஹிட்லரின் மெய்க்காப்பாளராக –
அவரது வாழ்வின் கடைசி நாள் வரை பணியாற்றிய
Rochus Misch என்பவர் எழுதிய ஒரு புத்தகத்திலிருந்து சில
விவரங்களை படித்துக் கொண்டிருந்தேன்… அதிலிருந்து சில செய்திகள் –
..

Rochus_Misch
..
2-ஆம் உலகப்போரில், ஜெர்மனி தோல்வியைத் தழுவிய பிறகு,
தான் எதிரிகளிடம் பிடிபடுவது உறுதி என்றாகி விட்ட நிலையில் –
ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லரும்
அவரது மனைவியும் தற்கொலை செய்துகொண்டு
இறந்து போயினர் என்பது ஏற்கெனவே தெரிந்த சரித்திரம்….
ஹிட்லரும், அவரது மனைவி இவா-வும் இறந்த விதம்
குறித்து, ஹிட்லரின் மெய்க்காப்பாளர் Rochus Misch
விவரமாக எழுதி இருக்கிறார்…
1945-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந்தேதி,
ஜெர்மனி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தது…
அன்றைய தினம் ரஷ்யப்படைகள்,
ஹிட்லரின் பங்கரிலிருந்து அரை கி.மீ. தூரம் வரை வந்து விட்டன….
ஹிட்லரின் அந்த இறுதி நாளில் என்ன நடந்தது என்பதைப்பற்றி,
அவரது மெய்க்காப்பாளர் சொல்வது –
அன்றைய தினம் ஹிட்லர் தனது பங்கரில் ( Führerbunker ) உள்ள அனைவரையும் அழைத்து, “எல்லாம் முடிந்து விட்டது. அவரவர் தாங்கள் விரும்பும் இடங்களுக்கு செல்லலாம். அவசியம் தேவையானவர்கள் மட்டும் இங்கே இருந்துகொள்ளலாம்” என்றார்.
இப்படி அவர் சொன்னதால், நானும் அங்கே இருக்க வேண்டியவர்களில் ஒருவனாகி விட்டேன். ஹிட்லரும், அவரது மனைவி இவா- வும் தற்கொலை செய்துகொள்வது என்னும் முடிவு அப்போது தான் எடுக்கப்பட்டது. எப்படி தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்பதற்கான யோசனையை கூறியவர் அங்கிருந்த டாக்டர் வெர்னர் ஹாஸெ.
முதலில் சயனைட் மாத்திரைகளை விழுங்கி விட்டு, பின்னர் துப்பாக்கியால் சுட்டுக்கொள்வது தான் சிறந்த வழி என்றார்.
இதைக்கேட்ட பின்னர் ஹிட்லர் சில நிமிடங்கள் ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்திருந்தார். அவர் முகம் இறுக்கமாக இருந்தது.
பின்னர் தனது மனைவி இவாவுடன் தங்கள் அறையை நோக்கிச்சென்று கதவை சாத்திக்கொண்டார். நெடுநேரம் வரை அங்கிருந்து சத்தம் எதுவும் இல்லை… ஒரே நிசப்தம்.
சிறிது நேரம் இடைவெளியிட்டு,
ஹிட்லரின் அறையை திறந்தோம். நான் மெல்ல எட்டிப்பார்த்தேன்.
அங்கு கண்ட காட்சி மனதை உறையச்
செய்யக்கூடியதாக இருந்தது…. உலகையை ஆட்டிப் படைத்த ஒரு
சர்வாதிகாரியின் இறுதி முடிவு…!
ஹிட்லர் பெரிய சோபாவில் ரத்தக்கறையுடன் இறந்து கிடக்க, அருகில் இருந்த சிறிய சோபாவில் இவா தலை சாய்ந்து விழுந்து கிடந்தார்.
அப்புறம் அங்கிருந்த சிலர், அவர்கள் இருவரையும், ஒரு பெட்ஷிட்டில் சுருட்டி, தூக்கிச்சென்று, பங்கருக்கு வெளியே – தோட்டத்தில் இருந்த வெற்றிடத்தில் வைத்து, பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினர்.
ஹிட்லரின் இந்த முடிவுக்கு காரணமாக இருந்தது –
ஹிட்லர் இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர் தான், அவரது மிக நெருங்கிய நண்பரும், கூட்டாளியுமான – இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினியும், அவரது மனைவியும் எதிரிகளால் கொல்லப்பட்டிருந்தனர். அத்துடன் அவர்களது உடல்கள், ஒரு பெட்ரோல் நிலையத்தில், தலைகீழாக தொங்கவிடப்பட்டு, அவமரியாதை செய்யப்பட்டிருந்தது.
…

…
இதனை ஹிட்லர் அறிந்திருந்தார். எனவே, எதிரிகளிடம் தங்களது உடல்கள் எக்காரணம் கொண்டும் சிக்கிவிடக்கூடாது என்று முடிவு செய்தார்… அதனால் தான் அவரது மற்றும் இவா-வுடைய உடல்களை எரித்து விடுமாறு ஆணையிட்டிருந்தார்.
—————-
ஹிட்லரின் சாவிற்குப் பிறகு,
அங்கிருந்து தப்பிச்சென்ற மெய்க்காப்பாளர் Rochus Misch,
சில நாட்களிலேயே, ரஷ்யப்படைகளின் வசம் சிக்கினார்.
அவர் கைது செய்யப்பட்டு, ரஷ்யாவில் – மாஸ்கோவில் இருந்த சிறையில் (Lubyanka Prison) அடைக்கப்பட்டு, பலவித சித்ரவதைகளுக்கு உள்ளானார்.
ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின், ஒருவேளை ஹிட்லர் உயிரோடு
தப்பிச்சென்றிருப்பாரோ என்கிற சந்தேகத்தில், ஹிட்லரின் மெய்க்காப்பாளரை பலவித சித்ரவதைகளுக்கு உட்படுத்தி, ஹிட்லரைப் பற்றிய பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார்….
இறுதியில், 8 ஆண்டுக்கால கொடுமையான சிறைவாசத்திற்குப் பிறகு, 1953-ல் Rochus Misch விடுதலை செய்யப்பட்டார்.
அதன் பிறகு Misch 2013 வரை உயிர் வாழ்ந்து, தனது 96-வது வயதில்
பெர்லினில் இறந்து போனார்.
…

வயதான பிறகு –
Rochus_Misch
…
ஆனால், Rochus Misch –
இறுதி வரை, தனது boss-ஐ பற்றி
நல்லவிதமான கருத்துகளையே வெளியிட்டு வந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது ….
” Misch was loyal to Hitler to the end of his life – stating –
“He was no brute.
He was no monster.
He was no superman”,
“…very normal. Not like what is written”, and
” He was a wonderful boss”….!!!
.
————————————————————————————————————————————————–



இந்த இடுகையோடு, உங்களுடைய
“ஹிட்லரை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய சில விஷயங்கள் ….”
என்கிற தலைப்பிலான முந்திய இடுகை
படிக்கப்பட வேண்டியது இன்றைய சூழ்நிலையில் அவசியம் என்று நினைக்கிறேன்.
அதற்கான Link :
https://vimarisanam.wordpress.com/2017/07/08/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86/
சர்வாதிகாரிகளின் முடிவு கடைசியில் நல்லவிதமாக இருப்பதில்லை.
காரணம், பல பாதிக்கப்பட்ட மக்கள் மன வேதனையின் போது இடும் சாபம். அந்த மக்கள் அதிகம் எதுவும் இறைஞ்ச வேண்டியதில்லை.
‘இறைவா நீ போதுமானவன்’ என்று கை உயர்த்துவதே போதுமானது.
நிச்சயம், இந்த உலகத்தில் இழிவும் மறுமையில் சொல்லனா தண்டனைகளுக்கும் அந்த நாசகாரர்கள் ஆளாவார்கள்.
சர்வாதிகாரிகளை மட்டுமல்ல, அவர்களுக்கு துணை போகின்றவர்களையும் அந்த கொடுங்கோலர்களை ஆதரிப்பவர்களையும் இறைவன் தண்டிப்பான்.
” நீ வெற்றி பெற்றுவிட்டால் யாருக்கும் விளக்கம் சொல்லத்தேவையில்லை… தோல்வி அடைந்துவிட்டால் விளக்கங்கள் சொல்ல நீயே தேவையில்லை ” … என்று கூறிய ஹிட்லர் அதன்படியே தனது தோல்விக்குப்பின் விளக்கம் சொல்லாமல் இருக்கும் முடிவை எடுத்தாரோ …? வரலாறு பலவற்றை கற்பித்துக்கொண்டே இருக்கிறது — ?
நம்ம பொது பெர்சப்ஷன், சர்வாதிகாரர்கள் பொதுவா மோசமானவங்க என்பதுதான். ஆனால் உண்மை அப்படிக் கிடையாது. ஒரு மனிதன் தான் நம்புகிற கொள்கைகளை வைத்து எடுக்கும் முடிவுகள் தரும் விளைவுகள்தான் அவன் சர்வாதிகாரியா இல்லை மக்கள் நலம் பேணுபவரா என்பதைச் சொல்லும். அதுவும் காலம்தான் அதனைச் செய்யும்.
ஹிட்லர், சதாம். சவுதி தஞ்சம் அளித்த இடிஅமீன், ஸ்டாலின் (நம்ம ஆள் இல்லை), லெனின்.. ஏன்.. எமெர்ஜென்சியை அறிமுகப்படுத்திய இந்திராகாந்தி என்று பலரது வரலாற்றையும் எடுத்துக்கொண்டால், அவருடன் நெருக்கமாக அண்மையில் இருந்தவர்கள், அவர்களைப் பற்றி ரொம்பவும் பெருமையாகவே பேசுவார்கள். ஆனால் அவங்க செய்த செயலின் விளைவுதான் அவர்களைப் பற்றிய பெர்செப்ஷனை விளைவிக்கும்.
ஹிட்லரைப் பற்றிய புத்தகங்கள், நாவல்கள் போன்றவற்றை விரும்பிப் படித்திருக்கிறேன். எப்படி கடைசி நேரத்தில் அவரை முற்றிலும் எரிப்பதற்குத் தேவையான கெரசினை கலெக்ட் பண்ணினார்கள், கடைசி வரை அவருடன் இருந்தவர்கள் (தப்பித்து ஓடாமல்) என்பதெல்லாம்…
சாதாரண ஆள், ஒரு வரலாற்றை உருவாக்கும் விதமாக (ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக) உருப்பெறுவது மிகவும் ஆச்சர்யப்படத் தக்கதுதான். (இதுல நித்யா, வெள்ளியங்கிரி, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் போன்ற பலரும் உள்பட)
நல்லது செய்த நல்லாட்சி செய்த அரசர்களையோ ஆட்சியாளர்களையோ, அவர்களிடம் சர்வ அதிகாரமும் குவிந்து இருந்திருந்தாலும், அவர்களை சர்வாதிகள் என்று குறிப்பிடுவதில்லை தான்.
பொதுப்புத்தியில் சர்வாதிகள் என்றால் கொடுங்கோலர்களை தான் மக்கள் குறிப்பிடுகிறார்கள். வரலாறும் அந்த நாசகாரர்களைதான் சர்வாதிகள் என்று குறிக்கின்றது.
சர்வாதிகளுக்கு பொதுவான ஒரு குணத்தை அவதானிக்க முடிகிறது. தன் கூட இருப்பவர்களிடம் நல்லவிதமாக நடந்துகொண்டு அவர்களை தன் விசுவாசிகளாக தன்னை அதிகம் நேசிக்க கூடியவர்களாக வைத்துக்கொள்வது. இல்லையென்றால் தான் ஒருவன் மட்டும் எல்லா அட்டூழியங்களையும் செய்ய முடியாது என்பதை அவர் அறியாதவரா என்ன? இது சாதாரன அறிவுபடைத்தவர்களுக்கு கூட தெரியும் தானே.
இந்த சுய நல விசுவாசிகளால் துதிக்கப்படுவதை ஒரு கால கட்டத்தில் அந்த சர்வாதிகள் விரும்பிவிடுவது தான் காலத்தின் கோலம். இவர்கள் தான் இன்னும் மோசமானவர்கள்.
இப்படிப்பட்ட சர்வாதிகளால் நல்லது நடந்ததே இல்லை என்பது தான் வரலாறு நமக்கு சொல்லித் தரும் பாடம்.
Most dictators are of inferiority complex