நாஞ்சில் சம்பத் கொடுத்த – அதிரடி “ஒன்லைனர்ஸ்” ….!!!


பல முக்கிய அரசியல் தலைவர்களைப்பற்றி
இந்த பேட்டியில் ஒன்லைன் விமரிசனம் செய்கிறார்
திருவாளர் நாஞ்சில் சம்பத்…

சரியோ தவறோ – நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கிறது…
பாருங்களேன் ….!!!

இப்போது அவர் லேடஸ்டாக எங்கே இருக்கிறார் தெரியுமா…?
கேட்டால் உங்களுக்கு சிரிப்பு வரும்…

Latest – திமுகவை ஆதரிக்கும்….வைகோ’வின் – மதிமுக…. 🙂 🙂 🙂

( யமுனை நதிக்கரையில் ஒன்பது பிரதமர்களை –
தன் கேள்விக்கணைகளால் நடுங்க வைத்த –
உன்னத தலைவன் வைகோ…!!!

மீண்டும் ஆரம்பத்திலிருந்தே…..??? )

.
_____________________________________________________________________________________

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to நாஞ்சில் சம்பத் கொடுத்த – அதிரடி “ஒன்லைனர்ஸ்” ….!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ரொம்ப இண்டெரெஸ்டிங். ஆனா இது கருணாநிதி இறப்புக்கு முன்னால் வந்த காணொளி. அப்போது அவர் தினகரனுடன் இருந்திருக்கலாம். அதனால்தான் ஓபிஎஸ் அவர்களை மிகவும் குறை கூறுகிறார். எடப்பாடி அவர்களை ஒரு குறையும் சொல்லவில்லை. அப்போவும் அவருக்கு ஒரு சந்தேகம் இருந்திருக்கவேணும் (தினகரனைப் பற்றி.. சொன்னபடி படி அளப்பாரான்னு.) அதனால்தான் வைகோவைப் பற்றி பெருமையாகச் சொல்லியிருக்கிறார். இவரே வைகோவை எப்படிக் குறை சொன்னார், மதிமுகவை விட்டு விலகும்போது என்பதைத் தேடித் தெரிந்துகொள்ளலாம்.

    கருணாநிதிக்கு முன்பு இளங்கோவன்தான் சிறந்த கதை வசன கர்த்தா. அவர்தான் நல்ல தமிழில் சினிமா வசனம் எழுதியவர். அதனால நாஞ்சில் சம்பத் அப்சர்வேஷன் சரியானதல்ல. கருணாநிதி அந்தக் காலத்தில் (இளங்கோவனுக்குப் பிறகு) நன்றாக வசனம் எழுதியிருக்கிறார். கருணாநிதியின் சினிமா வசனத் திறமை 80களிலேயே போய்விட்டது (டிரெண்ட் மாறிவிட்டது). (இல்லை என்று சொல்பவர்களை ‘இளைஞன்’ படம் 4 முறை பார்க்கும்படி தண்டனை கொடுக்கலாம்)

    நாஞ்சில் சம்பத்-, இதேபோல், ‘நாஞ்சில் சம்பத்’ என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லியிருப்பார் (அதாவது அவரது மனசாட்சி?) – “நாஞ்சில் சம்பத், வாயால் வடை சுடுகிறவன். வாயை அடகு வைத்து வாழ்பவன். யார் அதிக ஏலம் கொடுத்து எடுக்கிறார்களோ அவர்களுக்காகப் பேசுபவன். கொள்கையற்ற கோமாளி. வசன விபச்சாரி” என்று சொல்லியிருப்பாரோ?

    கருணாநிதி பெற்றுப்போட்டது ‘சனியன்கள்’ என்று சொல்லியிருக்கிறார். காசு கொடுத்தால் ‘சனியன்களையும்’ மேடையில் புகழத் தயங்கமாட்டேன் என்று அவர் நமக்கெல்லாம் காண்பிக்கும் நாள், ஏற்கனவே வந்துவிட்டதே..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.