நொந்து போயிருக்கும் உள்ளங்களுக்கு ஆறுதலாக –


இன்றைய, கேடு கெட்ட கூட்டணி பேரங்களைப் பார்த்து
நொந்து போயிருக்கும் உள்ளங்களுக்கு ஒரு ஆறுதலாக –
என்னால் முடிந்த ஒரு சிறு உதவி…….

————–

NDTV தொலைக்காட்சி தந்திருக்கும் ஒரு பரபரப்பு செய்தி/வீடியோ…

( https://www.ndtv.com/tamil/i-will-make-animals-to-speak-claims-nityananda-1919390 )

‘விலங்குகளை பேச வைப்பேன்!’- பரபரப்பை ஏற்படுத்திய
நித்தியானந்தாவின் புதிய வீடியோ –

—-

பரபரப்புக்கு பெயர் போன நித்தியானந்தா
தற்போது புதிய கூற்றினை முன் வைத்துள்ளார்.
அதில் தன்னால் குரங்குகள், மாடுகள் மற்றும் சிங்கங்களை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் பேச வைக்க முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் அதில், குரங்குகள் உள்ளிட்ட சில விலங்குகளுக்கு, மனிதர்களுக்கு இருக்கும் உள்ளுறுப்புகள் கிடையாது. ஆனால், அவைகளுக்கு சில உணர்வுகளை அளிப்பதன் மூலம் அதனை மாற்றமுடியும். அந்த வகையில், விலங்குகளின் குரல் வளத்துக்கு காரணமான வோக்கல் கார்டு எனப்படும் தொண்டையின் உள்பகுதியை சரி செய்தால் குரங்கு உள்ளிட்ட விலங்குகளை பேச வைக்கலாம் என்பதை மருத்துவ ரீதியிலான ஆராய்ச்சி மூலம் தெரிந்து கொண்டேன்.

இதற்காக உருவாக்கப்பட்ட மென்பொருள் சோதனை வெற்றி அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து தான் என்னால் விலங்குகளை பேச வைக்க முடியும் என நான் வெளிப்படையாக தெரிவிக்கிறேன்.

மனிதர்களைப் போலவே குரங்கு, மாடு, சிங்கம் உள்ளிட்ட விலங்குகளை
இன்னும் ஓராண்டுக்குள் தெள்ளத்தெளிவாகவும், அழுத்தம் திருத்தமாகவும் உங்களிடம் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் நான் பேசவைத்து காட்டுகிறேன் என நித்தியானந்தா தனது சீடர்களின் பலத்த கரகோஷங்கள் மத்தியில் கூறுகிறார்.

————————————–

பரமபூஜ்ய சுவாமி நித்யானந்தாவின் உரையை நீங்களும்
பார்த்து/கேட்டு பரவசப்படுங்கள்….

( வீடியோவில் அவ்வப்போது கரகோஷம் எழுப்பும், அவரது சிஷ்ய கோடிகளைப் பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படுகிறது…! எப்படித்தான் இவரிடம் வந்து சேர்ந்தார்களோ….!!!! )

இதிலும் சிரிப்பு வராதவர்களுக்கு –
என் தரப்பிலிருந்து ஒரு கூடுதல் போனஸ் முயற்சி ….

……………………………………………..

பின் குறிப்பு – நேற்றிரவு முழுவதும்
கோவையில் நடந்த நிகழ்ச்சியும் கூடவே நினைவிற்கு வருகிறதா…?
பூஜ்யஸ்ரீ நித்யானந்தாவோடு –
வேறு யாராவது போட்டி போட முடியுமா என்ன….?

“இவர்” வழி தனி வழி….
“அவர்” வழியும் தனி வழி….

.
————————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to நொந்து போயிருக்கும் உள்ளங்களுக்கு ஆறுதலாக –

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    முதல் படம் பார்த்த உடனே ‘ராவணன்’ நாடகம் போட்ட நாடகக் காவலரான்னு சந்தேகம் வந்தது.

    ஆமாம்… நீங்கதான் நகைச்சுவையோடு எழுதறீங்க. காணாக்குறைக்கு நிறைய நகைச்சுவைக் காட்சிகளை இப்போ அரசியல் மேடைகள்ல பார்க்கலாம். அப்புறம் எதுக்கு தனியா ‘நகைச்சுவைப் பகுதி’ ஆரம்பிச்சிருக்கீங்க?

    பசு தமிழ்ல பேசறதும் ஆடு ஆங்கிலத்துல பேசறதும் நாம பல யுகங்களாக் கேட்டுக்கிட்டிருக்கோமே. ‘அம்மா’, ‘May May’.

    நித்யானந்தா ஏதேனும் உள்குத்து வைத்து அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசறாரோ?

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ஒரு சின்ன கான்சப்டை வச்சிக்கிட்டு, ஆங்கிலத்தில் ஏதோ எல்லாம் தெரிந்தவர் மாதிரி பேசறாரே….. ஜீவாத்மா, பரமாத்மா கான்சப்டை வச்சிக்கிட்டு. அடடா… காலத்தை வீணாக்கிட்டேனே… நானும் தெரிந்ததை ஆங்கிலத்தில் அடித்துவிட்டிருந்தால் ஒரு ஆதீனமாயிருக்கலாமோ? இல்லை அமராவதியில் ஆசிரமம் கட்டியிருக்கலாமோ? ஒவ்வொரு சாமியார்களைப் பார்க்கும்போது, என்ன என்ன வாய்ப்புகள்னு தோணுது…

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    இன்று அரசியலில் நடக்கும் காட்சிகள் நகைச்சுவையாக இருந்தாலும்,
    அவை நமக்கு சிரிப்பை ஏற்படுத்துவதற்கு பதிலாக – கோபத்தையும், எரிச்சலையும் தானே உண்டு பண்ணுகின்றன…?
    அந்த mood -ஐ மாற்றத்தான் இந்த முயற்சி…. 🙂 🙂 🙂

    மேலே இடுகையில் – “போனஸ்” – புதிதாகச் சேர்த்திருக்கிறேன்… அதையும் அவசியம் பார்த்து ஆனந்தியுங்கள்…!!!

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  4. Mani's avatar Mani சொல்கிறார்:

    அடடா முகத்தில் என்ன தெய்வீகக்களை ! எவ்வளவு தேஜஸ் !
    பேசாமல் இவர் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம்.
    யாரோடும் கூட்டணி வேண்டாம்.
    நிச்சயம் அடுத்த முதல்வர் இவர் தான்.
    விஜய்காந்தை பார்த்த பிறகு எனக்கு நிச்சயம் நம்பிக்கை வருகிறது.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Mani,

      அற்புதமான யோசனை….
      இவர் மட்டும் கட்சி ஆரம்பித்தால் போதும் –
      விஜய்காந்த் பின்னால் இருக்கும் அத்தனை பேரும் இவர் பின்னால் வந்து விடுவார்கள்… 🙂 🙂

      .
      வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  5. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இந்த நித்யானந்தாவின் சிஷ்யகோடிகளை பார்க்கும்போது எனக்கு ஒரு பயம் ஏற்படுகிறது… எதிர்காலத்தில், இந்த சி.கோடிகள் ஒவ்வொருவரும் ஒரு நித்யானந்தாவாக உருவெடுத்து விட்டால் என்ன ஆகும்… இந்த நாடு தாங்குமா…?

  6. இன்றில்லாவிட்டாலும்'s avatar இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

    இந்த ஆளை (சி. கோடிகள் மன்னிக்கணும்) பார்த்தாலே ஏதோ உடல்வாகு கொழுப்பால் (கொலெஸ்ட்ரால்) செய்யப்பட்ட உடல் போல பேச்சு, நடவடிக்கைகள், தனக்கு தானே கடவுள் என்று கூறிக்கொண்டு அலங்காரம் செய்துகொள்வது, தன்னை சுற்றி எப்பொழுதும் பெண்கள் இருக்கும்படி ஒரு சூழலை வைத்துக்கொள்வது என்று இந்த சமூகத்தை சீர்குலைக்கும் அனைத்து நடவடிக்கைகளும் செய்து வந்துள்ளது மிகுந்த கோபம் வருகிறது..ஆனால் அதே நேரம் இவர்கள் செய்யும் இதனை தவறுகளை கட்டிங் வாங்கிக்கொண்டு பேசாமல் இருக்கும் அரசாங்கமும் அதிகாரிகளும் இவர்களை போன்றவர்களை ஊக்குவித்து மக்களை முட்டாளாக்க ஆமோதிப்பதை நினைக்கும் போது யாரை குறை கூறுவது என்று தெரியவில்லை…
    நமக்கென்ன விடியோவை பார்த்து சிரித்து விட்டு இந்த சிரிக்கும் கூட்டத்தை அதிகமாக்க பாடுபடுவோம்..அப்படியாவது விழிப்புணர்வு வரட்டும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.