எலெக்டிரானிக் ஓட்டிங் மெஷின் ஓரங்கட்டப்பட வேண்டுமா….?



திறந்த மனதோடு இந்த பிரச்சினையை அணுகினால் எலெக்டிரானிக் ஓட்டிங் மெஷின்களில் தில்லுமுல்லுகள் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்கிற கேள்விக்கு அப்பாலும் சில காரணங்கள் இருப்பதை காண முடிகிறது.

ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ,
EVM மெஷின்களின் செயல்பாடுகளில் தில்லுமுல்லுகள் செய்ய
நிச்சயம் முடியாது என்று தேர்தல் கமிஷன் பல தடவை
உறுதி செய்து, சில தடவை மற்றவர்களை செய்துகாட்டும்படி
சவால்கள் கூட விட்டிருக்கிறது.

ஆனால், அண்மையில் நடந்து முடிந்த மத்திய பிரதேச தேர்தலில் மொத்தமுள்ள 230 பேரவைத் தொகுதிகளில் 204 தொகுதிகளில் –

பதிவான வாக்குகளுக்கும்,
எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையிலான
வேறுபாடுகள் தெளிவாகத் தெரிந்தன.

‘எவ்வளவு வாக்குகள் எண்ணப்பட்டனவோ அவ்வளவு வாக்குகள்தான் பதிவாகியிருக்கின்றன’ என்ற தேர்தல் ஆணையத்தின் வாதம், இதைச் சரிபார்ப்பது அவசியமில்லை என்றே அது கருதுவதை வெளிப்படுத்தியது.

பதிவான வாக்குகளுக்கும்
எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையில்
ஒரே ஒரு வாக்கு வித்தியாசம் இருந்தாலும் கூட –
அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

இது மிக உயர்வான தரமுடைய தேர்தலுக்கான இலக்கணம் அல்ல…
நம்பகத்தன்மை குறித்த – இத்தகைய காரணங்களை
ஒருபக்கம் அப்படியே விட்டு விட்டு,
ஏன் வேண்டாம் ஈவிஎம் என்பதற்கான காரணங்களை
வேறு சில கோணங்களில் பார்ப்போம்.

ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல்கள் நடத்தப்படுவதில் சில அடிப்படை
கொள்கைகள் அவசியம் பின்பற்றப்பட வேண்டும்…

அவை –

ரகசிய வாக்குரிமை அடிப்படையில் மக்கள் தங்களுடைய
தேர்வைத் தெரிவிக்கிறார்கள்.
இந்த வாக்குகள் சரியாகப் பதிவுசெய்யப்பட வேண்டும்;
சரியாக எண்ணப்பட வேண்டும்.
வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை தொடர்பான நடைமுறைகள்
மக்களால் நேரில் பார்க்கும்படியாகவும்
சரிபார்க்கும் வகையிலும் இருக்க வேண்டும்.

‘வெளிப்படைத்தன்மை’
‘சரிபார்க்கும் தன்மை’
‘ரகசியம்’

– ஆகிய மூன்று அடிப்படைகளின் மீதுதான் சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்று எந்த நிலையை எடுப்பவராக இருந்தாலும், இந்த மூன்று அடிப்படைத் தன்மைகளை நிச்சயமாக விட்டுக்கொடுக்க முடியாது.

காகிதத்தாலான வாக்குச்சீட்டு மட்டுமே இந்த மூன்றையும் உறுதிப்படுத்தும்.

1) தான் எந்தச் சின்னத்தின் மீது முத்திரை குத்தினோம் என்பதற்கு வாக்காளர்களே பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்.

2) அப்படி வாக்களிப்பது சாவடியில் மறைவான இடத்தில் நடப்பதால் ரகசியம் காக்கப்படுகிறது.

3) வாக்குகள் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளிப்படையாகக்
காட்டப்பட்டு பிறகு எண்ணப்படுகின்றன.

ஈவிஎம் இயந்திரங்களை பயன்படுத்தும்போது –
அவை – இந்த மூன்று சோதனைகளிலும் தோற்றுவிடுகின்றன.

ஈவிஎம் இயந்திரங்களில் எத்தனை வாக்குகள் பதிவாயின
என்று மட்டும் தான் பார்க்க முடியுமே தவிர,

அந்தந்த வாக்காளர் அழுத்திய பொத்தான்படிதான் சின்னங்களில் பதிவானதா என்று பார்க்க முடியாது.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் தெரியும் வரிசைப்படி, இயந்திரத்தின் நினைவுப்பகுதியில் அது சேமிக்கப்படும் என்பது நிச்சயமில்லை. அதை உறுதி செய்ய முடிவதில்லை….இப்படியொரு இடைவெளி இருப்பதால்தான் வாக்குப்பதிவு ‘ஒப்புகைச் சீட்டு முறை’ (விவிபாட்) அறிமுகப்படுத்தப்பட்டது.

மோசடி நடக்காமல் தடுக்க வேண்டும் என்றால், அந்தத் தொகுதியின் எல்லா வாக்குச் சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டு முறையைக் கையாள வேண்டும்….

இல்லாவிட்டால், இது ஆதாரபூர்வமாக அல்லாமல், மேம்போக்கான
நடவடிக்கையாகவே இருக்கும்.

காகிதத்தால் ஆன வாக்குச் சீட்டு என்றால், தேர்தல் ஆணையம் அவற்றை ஒன்றாகக் கலந்துவிட்டு பிறகு எண்ண முடியும். அதனால்,
ஒரு குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் யாருக்கு வாக்குகள் அதிகம் என்பதை அறிய முடியாது. ஈவிஎம் இயந்திரங்களை
பயன்படுத்தும்போது, இது சாத்தியமில்லை.

ஆக, வெளிப்படைத்தன்மை, சரிபார்ப்புத்தன்மை, ரகசியத் தன்மை ஆகிய மூன்று அம்சங்களிலும் ஈவிஎம் இயந்திரங்கள் குறைபாடுள்ளவை என்பது
எளிதாகவே புரிகிறது.

இயந்திரங்கள் மீதான சந்தேகங்கள் நியாயப்படுத்த முடியாதவை என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஜனநாயகம் நம்பத்தக்கதாக இருக்க வேண்டுமென்றால் தேர்தல் நடைமுறையும் அதற்கேற்ப இருக்க வேண்டும். எப்போது மக்களுக்கு ஈவிஎம் இயந்திரங்களின் மீது நம்பிக்கை குறைந்து அவநம்பிக்கை அதிகரிக்கிறதோ –

அப்போது, மக்களுக்கு நம்பிக்கை ஏற்டக்கூடியதாக, ஏற்புடையதாக,
அவர்களின் சந்தேகத்தை போக்குவதாக, தேர்தல் முறையை மாற்றியமைக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை இல்லையா..?

மறுக்க முடியாத நிரூபணங்கள் அவசியம் இல்லை…
மக்களுக்கு இந்த ஈவிஎம் இயந்திரங்களின் மூலமான தேர்தலில்
நம்பிக்கை இல்லை என்கிற ஒரு விஷயமே போதும்….

மேலும், வாக்குச் சீட்டு முறைக்கு நாடு திரும்புவதற்கு கொஞ்சம் அதிக செலவு பிடிக்கலாம் என்பதைத்தவிர வேறு எந்தவித தடங்கலும் இல்லை .

உலகின் முன்னேறிய, வளர்ந்த நாடுகள் அனைத்துமே, ஈவிஎம்
இயந்திரங்களை பயன்படுத்துவதை தவிர்க்கின்றன…

நம்முடைய எலெக்டிரானிக் இயந்திரங்களைப்போல், அவையும் தயாரிக்க முடியாதா என்ன….? பின் ஏன் தவிர்க்கின்றன…? அவசியம் யோசிக்கப்பட வேண்டிய விஷயம்.

அதைச் செய்யாததன் முக்கியமான காரணம் – தேர்தல் நடைமுறைகள்
வெளிப்படையாகவும், மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும் இருக்க வேண்டும் என்பதே…

ஒரு ஜனநாயக நாட்டில், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் விதத்தில் தேர்தல்கள் நடைபெறுவது தான் முக்கியம்… அதற்காக வேறு எந்தவித சிரமங்களையும், கொஞ்சம் கூடுதல் செலவுகளையும் தாராளமாக பொறுத்துக் கொள்ளலாம்… தவறே இல்லை …!!!

சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டிய நேரம் இது…

இன்னொரு முக்கியமான விஷயம் – ஓட்டு சீட்டுகள், ஓட்டுப்பெட்டிகள்
முறைக்கு மாறினால், ஏராளமான வேலை வாய்ப்புகளை அது உருவாகும்… என்பது நம்பிக்கை – அவநம்பிக்கைக்கு தொடர்பில்லாத – ஆனால், ஒரு பாசிடிவான காரணம்….!!!

( இந்த இடுகை, சில நாட்களுக்கு முன்னர் ஹிந்து நாளேட்டில்,
திரு.ஜி.சம்பத் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு கட்டுரையின் சில கருத்துகளையும் உள்ளடக்கிக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது….!!!
திரு.சம்பத் அவர்களுக்கு நமது நன்றி… )

.
————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to எலெக்டிரானிக் ஓட்டிங் மெஷின் ஓரங்கட்டப்பட வேண்டுமா….?

  1. R KARTHIK's avatar R KARTHIK சொல்கிறார்:

    Paper ballot will have its own disadvantages, given the volume in our country.

    Today we have all our financial transactions digitised, digitization has become a necessary evil. Not that it is foolproof. The right approach would be to continuously and thoroughly test it and make it robust.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இடுகையில் உள்ள கருத்து அர்த்தமுள்ளது. ஆனால் வாக்குச்சீட்டு முறையிலும் ஏராளமான தில்லு முல்லு நம் நாட்டில் நடைபெற்றது. கள்ள வாக்கு, பெட்டியை மாற்றி அதில் தாங்கள் குத்திய சீட்டுக்களை மட்டும் நிரப்புவது என்று. இரண்டு முறைகளிலும் சரிபார்க்க இயலாது.

    //ஏராளமான வேலை வாய்ப்புகளை அது உருவாகும்… என்பது நம்பிக்கை // – ஆமாம். ப சிதம்பரம் வெற்றி பெற்ற தேர்தலில் பார்த்தோமே…. வாக்கு எண்ணுபவர்களும், அதை ரெகார்ட் செய்பவர்களும், தட்டச்சு செய்பவர்களும், பதிவு செய்பவர்களும் காசு வாங்கிக்கொண்டு தில்லு முல்லு செய்வார்கள் என்பதை.

  3. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    I think it is the brain child of writer Mr.Sujatha. Some time back he has challenged that
    nobody can misuse it I remember.

  4. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    கே.எம்.சார் சொல்லும் முக்கியமான காரணம் –
    மக்களின் மனதில் நம்பகத்தன்மையை உருவாக்குவது.
    ஜனநாயக ஆட்சியில், மக்கள் நம்பிக்கையை பெறும் முறையில் தான்
    தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். EVM இயந்திரத்தில் ஓட்டுப்போடும் மக்களுக்கு
    நம்பிக்கை ஏற்படுவதில்லை. தங்கள் கையாலேயே முத்திரை குத்தி, ஓட்டுப்பெட்டியில் போடும் திருப்தி, மெஷின் பட்டனை அழுத்துவதில் கிடைப்பதில்லை என்பது நூறு சதவீதம் உண்மை.

    ஏன் – மீண்டும் ஓட்டுச்சீட்டு முறைக்கு மாறுவதில் யாருக்கு என்ன நஷ்டம் ?
    ஏன் இதைப்பற்றி பேசக்கூட மறுக்கிறார்கள் ?

    உலகில் நம்மை விட பலமடங்கு வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா,
    பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் ஏன் இன்னமும் வாக்குச்சீட்டு முறையை கடைபிடிக்கின்றன ?

    புதியவன் இதற்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      அரவிந்தன்… சிம்பிளாச் சொல்லணும்னா, அந்த நாட்டு மக்கள், நம்மைவிட மிக மிக உயர்ந்தவர்கள். செல்ஃப் டிசிப்பிளின், நாட்டின் சட்டதிட்டத்தை மதிப்பது, தேசப்பற்று இவற்றில் அவங்க எங்கேயோ இருக்காங்க, நாம அதல பாதாளத்துல இருக்கோம்.

      இரண்டாவது, அங்க பாபுலேஷன் குறைவு. (வாக்களிப்பதில் சில முன்னேறிய நாடுகளின் நம்மைப்போல்தான் ஆர்வம் கொஞ்சம் குறைவு).

      நீங்க அமெரிக்காவுல, பூத் வாக்குச்சீட்டுகள் அபகரிப்பு, கள்ள ஓட்டுப் போடுவது, , காசு வாங்கிக்கொண்டு வாக்களிப்பது இதெல்லாம் கேள்விப்பட்டிருக்கீங்களா?

      மற்றபடி பெரிய அளவில் தவறுகள் நடக்கும்னு எனக்குத் தோன்றவில்லை. நீங்க கேள்வி கேட்டது எனக்கு ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்தியது. 90ன் ஆரம்பத்தில், துபாயில் சிந்திக்கள் நிறைய துணிக்கடை ஹோல்சேல் வைத்திருப்பார்கள். அங்க கணிணிமயமாக்கம் செய்தபோது, நிறைய கடைகளில் (நான் சொல்றது பெரிய அளவு ஹோல்சேல், ஆனால் கடை ரொம்பப் பெரியதல்ல), கம்ப்யூட்டரைஸ்ட் அக்கவுண்ட்ஸ், மற்றும் வெகுகாலமாகச் செய்துவந்த மேனுவல் அக்கவுண்ட்ஸ் எழுதும் முறையையும் தொடர்ந்தார்கள். இப்படி பல வருடங்கள் செய்துவந்தார்கள். இப்போ நினைமை மாறியிருக்கும்னு நினைக்கறேன், ஏன்னா அடுத்த தலைமுறை நல்லா ஓரளவு படித்திருப்பார்கள்.

    • R KARTHIK's avatar R KARTHIK சொல்கிறார்:

      “EVM இயந்திரத்தில் ஓட்டுப்போடும் மக்களுக்கு
      நம்பிக்கை ஏற்படுவதில்லை. தங்கள் கையாலேயே முத்திரை குத்தி, ஓட்டுப்பெட்டியில் போடும் திருப்தி, மெஷின் பட்டனை அழுத்துவதில் கிடைப்பதில்லை என்பது நூறு சதவீதம் உண்மை.”

      It might be true for the older generation, who knows paper ballot. The younger generation, especially milleniels won’t have this.

  5. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    /// மீண்டும் வேண்டும் வாக்குச் சீட்டு: திரளும் எதிர்க்கட்சிகள்!

    https://www.minnambalam.com/k/2019/02/02/22 ///

    EVM சம்பந்தமாக எதிர்கட்சிகள் ஒன்று சேர்கின்றன. மிகவும் நல்ல விஷயம்.

    சரி.

    EVM-மை ஆதரிப்பவர்கள், காமை ஐயா குறிப்பிட்டுள்ள இந்த மூன்று விஷயத்திற்கு பதில் சொல்ல கடமைப்ப‌ட்டுள்ளார்கள். அவை,

    ‘வெளிப்படைத்தன்மை’
    ‘சரிபார்க்கும் தன்மை’
    ‘ரகசியம்’

    பதிவில் உள்ள மைய கருத்தை விட்டு பின்னூட்ட கருத்துக்கு மட்டும் எதிர் வினையாற்றிவிட்டால் மட்டும் சரியல்ல. அந்த வினையும் பிதற்றல் என்பது வேறு விஷயம்.

    ஓட்டுச்சீட்டு முறையில் rigging இல்லையென்று சொல்வதற்கில்லை. அது களையக்கூடியதே. ஆனால், EVM சம்பந்தமாக வெளிவரும் செய்திகள் பாரதூரமானவையாக இருக்கும் போது ஓட்டுச்சீட்டு முறைக்கு மாறுவது தான் காலத்தின் கட்டாயமாக படுகிறது.

    எல்லா எதிர்கட்சிகளும் EVM-முக்கு எதிரான நிலையெடுக்கும் போது தேர்தல் ஆணையமும் இப்போதைய ஆளும்கட்சியும் மறுப்பதை பார்த்தால் பொதுமக்களான நமக்கு சந்தேகம் மேலும் வலுக்கின்றது.

    ஆனால், அடுத்த தேர்தலுக்குள் சாத்தியமா என்றால் நாட்கள் கம்மி தான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.