பிரிவினையை ஆதரித்ததால் தான் காந்திஜி கொல்லப்பட்டாரா….?



உண்மையில், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கான
அச்சாரம் போடப்பட்டது எப்போது…?

1906-ல், ‘இந்திய முஸ்லிம்களின் அதிகாரத்தை
பாதுகாப்பதற்காக’ என்கிற நோக்கத்துடன் முஸ்லிம் லீக் உருவானது…

1938 பிப்ரவரியில் – இந்து – முஸ்லிம் மக்களிடையேயான
பதற்றங்களை தீர்ப்பதற்காக மகாத்மா காந்திக்கும், முகம்மது அலி ஜின்னாவுக்கும் இடையே தொடங்கிய பேச்சுவார்த்தை ஜூலையில் தோல்வியடைந்தது.

‘முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை’ விசாரிக்க
குழு ஒன்றை முஸ்லிம் லீக் அமைத்தது.

1940 -ஆம் ஆண்டு மார்ச் 23-ல் – பாகிஸ்தான் உருவாவதற்கான அஸ்திவாரம் போடப்பட்டது. அன்றைய தினம் லாகூரில் முஸ்லிம் லீக், கூடி, ‘பாகிஸ்தான் தீர்மானம்’ என்பதை முன்மொழிந்தது. இதன்படி, முழுமையான சுதந்திரமான நாடு முஸ்லிம்களுக்கு தேவை என்று வெளிப்படையாக கோரப்பட்டது.

1944, செப்டம்பர் மாதத்தில் மகாத்மா காந்தியும்,
ஜின்னாவும் பாகிஸ்தான் கோரிக்கை பற்றி நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.

இருவரிடையேயும் இதுதொடர்பாக ஆழமான கருத்து வேறுபாடுகள் நிலவின.

சுதந்திரமே முன்னுரிமை என்றார் காந்தி.
பாகிஸ்தான் உருவான பிறகே சுதந்திரம் என்பதில் ஜின்னா உறுதியாக நின்றார்…

1946இல் இந்தியாவுக்கு விடுதலை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த பிரிட்டனால் அனுப்பப்பட்ட அமைச்சர்களின் தூதுக்குழுவில் இருந்து முஸ்லிம் லீக் விலகி, போராட்டங்களை தொடங்கியது.

அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கலகங்கள் ஏற்பட்டன.
கலகங்கள் வன்முறையாக உருவெடுத்து
1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 -லிருந்து 18க்கு – இடைப்பட்ட
காலத்திற்குள் கலவரப் படுகொலைகளாக மாறின.

‘கல்கத்தா பெருங்கொலைகள்’ (Great Calcutta Killings) என்று
சரித்திரத்தில் பதிந்துவிட்டன. இதில் கிட்டத்தட்ட நான்காயிரம் மக்கள் கொல்லப்பட்டனர்,

ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர், சுமார் ஒரு லட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர்.

இந்த கலவரங்கள் கிழக்கு வங்காளத்தின் நவகாளி மாவட்டத்தில் இருந்து பிஹார் வரை பரவியது. ஜனவரி 29-ல் முஸ்லிம் லீக் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையை புறக்கணிப்பதாக அறிவித்தது, பிப்ரவரி மாதத்தில் பஞ்சாபிலும் வகுப்புவாத வன்முறைகள் தொடங்கின….

உண்மை நிலவரம் இப்படி இருக்க –

காந்திஜியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே, நீதிமன்ற விசாரணையில்
கூறும்போது –

தேசப் பிரிவினைக்கு காந்திதான் காரணம் என்று கருதியதால் அவரைச் சுட்டுக் கொன்றதாகவும், உண்மையான இந்திய தேசியவாதியின் எதிர்வினை அது என்றும் கூறி இருந்தான்.

1947, ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு பிரிட்டன் மற்றும் இந்தியாவுக்கு இடையே அதிகார பரிமாற்றம் நிகழ்ந்தது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்றது….

ஆனால், ஏறக்குறைய ஒன்றேகால் கோடி மக்கள்,
நாடு, வீடு, வசிப்பிடம், சொத்துக்களை விட்டு வெளியேற வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டது. 5 முதல் 10 லட்சம் மக்கள் வன்முறைகளில் இறந்திருக்கலாம் என்று கணிப்புகள் கூறுகின்றன. பல்லாயிரக்கணக்கான பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

காந்திஜி பிரிவினையை ஆதரித்தார் என்கிற தவறான வாதம் குறித்து –
முகம்மத் அயூப், என்கிற மிச்சிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர்
சொல்கிறார் –

உண்மை என்னவென்றால், கடைசிக் கட்டம் வரையில்
தேசப் பிரிவினையை எதிர்த்தார் காந்தி.
1946 இறுதிவாக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைமையே,
இந்த விவகாரத்தில் அவருடைய ஆலோசனையைக் கேட்க விருப்பமில்லாமல் அவரையே ஓரங்கட்டியது.

அந்த நேரத்தில் ஜவாஹர்லால் நேருவும் சர்தார் படேலும் கூட ஒரு
மரியாதைக்காகவாவது காந்தியிடம் ஆலோசனை கேட்க வேண்டும்
என்று கூட கருதாமல், பிரிவினை யோசனையை ஏற்றுக்கொண்டுவிட்டனர்.

இந்தியாவை இந்துஸ்தான், பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிளக்கும்
மவுண்ட்பேட்டன் பிரபுவின் யோசனையை காங்கிரஸ் காரியக் கமிட்டி
ஏற்றுக்கொண்டுவிட்டது.

தேசத்தைப் பிரிக்கும் யோசனை 1947 ஜூன் 3-ம் நாள் அறிவிக்கப்பட்டது.

ஆனால், காந்திஜி இதை ஏற்றுக்கொண்டாரா…?

‘இந்தத் திட்டத்தில் தீமையைத் தவிர
வேறு எதையும் நான் பார்க்கவில்லை’
என்று அன்று காலையில் பாபு ராஜேந்திர பிரசாதிடம் மனம் வெதும்பிக்
கூறினார் காந்தி.

சமஸ்தானங்களின் விவகாரங்களுக்கான செயலர் வி.பி.மேனனின் ஆலோசனையைக் கேட்டுவிட்டு, ‘பிரிவினை இனி தவிர்க்க முடியாதது’ என்று 1946 டிசம்பரில் ஏற்றுக்கொண்டார் படேல்.

இதை நேருவிடமும் ஜாடையாகத் தெரிவித்துவிட்டார். இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால், அது பிரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் படேலுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.

ஜின்னாவின் நச்சரிப்பிலிருந்து தப்பிக்கவும்,
வலுவான மையப்படுத்தப்பட்ட இந்தியா அமையவும்
பிரிவினை அவசியம் என்ற முடிவுக்கு வந்தார் படேல்.

பிளவுபடாத பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் முஸ்லிம் லீக் அரசுகளை
வைத்துக்கொண்டு இந்தியாவின் மத்திய அரசை
வலுவாக வைத்திருக்க முடியாது என்று படேல் கருதினார்.

நேருவோ – தனக்கு பிரதமர் பதவி கிடைக்க வேண்டும் என்றால்,
ஜின்னாவிற்கு பாகிஸ்தானை கொடுத்து – அவரை போட்டியிலிருந்து
கழட்டி விட்டால் தான் சாத்தியப்படும் என்று நினைத்தார்.

இப்படி, முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவரும், அவரவர்
யோசனைக்கேற்பவும், காரணங்களுக்காகவும், பிரிவினையை ஏற்றுக் கொண்டன்ர்…

பிரிவினை யோசனையை ஒப்புக்கொண்ட காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் அதற்கு எதிரான கருத்து கொண்டிருந்தவர்கள் இருவர் மட்டுமே –

அவ்விருவருமே முஸ்லிம்கள்!

ஒருவர் ‘எல்லை காந்தி’ கான் அப்துல் கபார் கான்.
“எங்களை ஓநாய்களிடம் (பாகிஸ்தான்) தூக்கிப்போட்டுவிட்டீர்களே?”
என்று மிகவும் வருந்தினார்.

இன்னொருவரான அபுல் கலாம் ஆசாதுக்கு அதில் உடன்பாடே இல்லை
என்றாலும், தீர்மானத்தைக் கொண்டுவந்த தன்னுடைய
நண்பர் நேருவுக்காக அமைதி காத்தார்.

பாபு ராஜேந்திர பிரசாத், கோவிந்த வல்லப பந்த் உட்பட அனைவருமே பிரிவினைத் தீர்மானத்தை ஆதரித்தவர்கள்தான்.

உண்மை இப்படியிருக்க, தேசப் பிரிவினைக்கு காந்திதான் காரணம் என்று அவர் மீது பழியைச் சுமத்துவதும் அதன் மூலம் அவரைக் கொன்றவரை தேசியவாதியாகச் சித்தரிக்க முனைவதும் வரலாற்றையே தவறாகத் திருத்த
முற்படும் செயலாகும்.

ஹிந்து, முஸ்லிம் – இரு மதத்தவரின் நலனுக்காகவும், ஒற்றுமைக்காகவும்
இறுதிவரை போராடிய காந்திஜியை புரிந்து கொள்ளாமல், ஒரு ஹிந்து
அடிப்படைவாதியே அவரை சுட்டுக் கொன்றது தான் பரிதாபம்…!

ஆனால், அவர் மறைந்து பல வருடங்களுக்குப் பிறகும்,
இன்றும், சில மத அடிப்படைவாதிகளால்,
வேண்டுமென்றே – காந்திஜி பிரிவினையை ஆதரித்தார் என்று
இன்றும் கருத்துகள் பரப்பப்படுகின்றன…

காந்திஜி முழு மூச்சாக பிரிவினையை எதிர்த்தார் என்கிற விஷயத்தை
மீண்டும் வலியுறுத்துவதற்காக எழுதப்படும் கட்டுரை இது.

( பல செய்தித் தளங்களிலிருந்து திரட்டப்பட்ட தகவல்களின்
அடிப்படையில் எழுதப்பட்ட இடுகை ….! )

——————————————

காந்திஜியின் சத்திய சோதனை சுயசரித புத்தகத்திலிருந்து
ஒரு பகுதியை இங்கே எனக்காகவும், நண்பர்களுக்காகவும் பதிந்து –
நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன் –

.
————————————————————————————————————–

பின் சேர்க்கை – மதியம் 2 மணி….

உத்திரபிரதேசத்தில், ஹிந்து மஹா சபாவை சேர்ந்தவர்கள் நேற்று காந்திஜியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு புகழ் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்….

அதில் ஒரு பெண் தலைவர் (??? ) காந்திஜியின் புகைப்படத்தை துப்பாக்கியால் சுட்டு, தீ வைத்து கொளுத்தி மகிழ்ந்திருக்கிறார்…புகைப்படம் கீழே –

———————-

மொட்டையர் ஆட்சியில் இதற்கு அவார்டு கொடுத்தாலும் கொடுப்பார்கள்….
வெறியர்கள்…..வேறு என்ன சொல்வது…?

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to பிரிவினையை ஆதரித்ததால் தான் காந்திஜி கொல்லப்பட்டாரா….?

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … மகாத்மாவின் சத்யசோதனையின் கடைசி பகுதி ” விடைபெற்றுக் கொள்கிறேன் ” என்பதில் இருந்து தங்களின் பதிவு நினைவாக்களுக்கு நன்றி — ! அதில் தங்களின் பதிவுக்கு முன் உள்ள சில வரிகளையும் சேர்த்தால் அவரது உள்ளத்தின் ஆசையின் பிரதிபலிப்பு விடைபெறும்போது எப்படி இருந்தது என்பது புலனாகும் : —

    வாசகரிடமிருந்து இப்பொழுது … நான் விடைபெற்றுக்
    கொள்ளுவதில் எனக்கு மன வருத்தம் இல்லாமலில்லை. என்னுடைய
    சத்திய சோதனைகள் அதிக மதிப்பு வாய்ந்தவை என்று நான்
    கருதுகிறேன். அந்த மதிப்பு நன்றாகப் புலப்படும்படி நான்
    செய்திருக்கிறேனோ என்பதை நான் அறியேன். உள்ளதை
    உள்ளபடியே எடுத்துக் கூறுவதற்கு என்னால் இயன்றவரை சிரமம்
    எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று மாத்திரமே நான் கூற முடியும்.
    எந்தவிதமாக நான் சத்தியத்தைக் கண்டுகொண்டேனோ அதே
    விதமாக அதை விவரிப்பதே என் இடையறாத முயற்சியாக இருந்து
    வந்திருக்கிறது. இந்தப் பயிற்சி, அழித்துவிட முடியாத மனச்சாந்தியை
    எனக்கு அளித்திருக்கிறது. ஏனெனில், சந்தேகம் உள்ளவர்களுக்கும்
    சத்தியத்திலும் அகிம்சையிலும் அது நம்பிக்கையை உண்டாக்கும்
    என்று நான் ஆசையோடு நம்பி வந்திருக்கிறேன்….

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      பொருத்தமான கூடுதல் சேர்க்கைக்கு நன்றி செல்வராஜன்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    இன்னமும் கோட்சேக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் தொடர்பில்லை என்று காட்டு கத்து கத்துவார்கள் ஆர்.எஸ்.எஸ்-காரர்களும் பாஜக-காரர்களும்.

    கீழேயுள்ள மின்னம்பலம் செய்தி, அவர்கள் எவ்வளவு வக்கிரமானவர்கள் என்பதற்கு போதுமான சான்று.

    /// காந்தியை மீண்டும் சுட்டுக் கொண்டாடிய இந்து மகா சபை!

    https://minnambalam.com/k/2019/01/31/24 ///

    அந்த வீடியோ சமூக வளைதளங்களில் தீயாக பரவி கண்டனங்கள் நாடு முழுவதும் வந்த பின் பேருக்கு இரண்டு பேரை கைது செய்துள்ளார்கள்.

    இவர்கள் தேசபக்தர்கள்.

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கா.மை சார்…. காந்திக்கு எதிர்ப்பு கிளம்பியதற்காக சில காரணங்களை நான் படித்திருக்கிறேன் (நள்ளிரவில் சுதந்திரம்-டொமினிக் லேப்பியர் 650 பக்கங்கள் கொண்டது. பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டது-ஜின்னாவின் உணவுப் பழக்கங்களையும் அவரது மேற்கத்தைய கலாச்சார வழக்கங்களையும் உள்ளது உள்ளபடி எழுதியதால்).

    பிரிவினை காரணமாக காந்திமீது எதிர்ப்பு வந்திருக்காது. அதற்கு அவர் காரணமில்லை. ஜின்னா (தனி ஒரு நிலத்தை தான் ஆளவேண்டும், அதில் பெரிய ஆளாக வேண்டும் என்று விரும்பியதால்) மற்றும் சிலரின் ஆசைதான் இதற்குக் காரணம்.

    அந்தச் சமயத்தில் இந்து முஸ்லீம் எதிர்ப்புணர்வு மிக மிக அதிகமாக இருந்தது. ஏற்பட்ட வதந்திகளால், பாகிஸ்தானில், பஞ்சாபில் ரத்தக்களறி, இந்தியாவிலும் அதே ரத்தக்களறி. அங்கு இந்துக்கள் இங்கு முஸ்லீம்கள் கொடுமைகளை அனுபவித்தனர்.

    பிரிவினையின்போது, யாருக்கு எது என்று நிலம், சொத்துக்களில் (இந்தியா பாகிஸ்தான்) ராணுவத்தில் பிரிக்கப்பட்டது. அந்த மாதிரி விஷயங்களில் காந்தியின் ஆலோசனை பாகிஸ்தானுக்குச் சாதகமாக இருந்தது. அவர் முஸ்லீம்களின்மீது (இந்தியாவில் தங்கிவிட்ட) பரிவு கொண்டிருந்தார். இந்தியாவின் கலவரப் பகுதிகளில் அமைதி ஏற்படுத்த முற்பட்டார். காந்தி, பாகிஸ்தானில் ஏற்பட்ட களேபரங்களைப் பற்றி தீவிரக் கருத்துக்கள் தெரிவிக்கவில்லை-எரிகிற கொள்ளியில் எண்ணெய்விடவில்லை. அவர் வேறு ஒரு காரணத்துக்காக உண்ணாவிரதம் இருக்க, நேரு அதைத் தவிர்க்க பாகிஸ்தானுக்குத் தரவேண்டிய பணம் என்று ஒரு அமவுண்டை ரிலீஸ் செய்தார். (இது பாகிஸ்தான் தளவாடங்கள் உடனே வாங்கவும், அதை வைத்து காஷ்மீர் பிரச்சனையை உருவாக்கவும் அப்போ காரணமாக இருந்தது) இதெல்லாம், காந்தி சொல்லித்தான் நடைபெறுகிறது, காந்தி இந்துக்களுக்கு எதிரியாக இருக்கிறார் என்று ‘இந்து மகா சபை’யில் இருந்த சிலர் எண்ணினர். அந்த எண்ணத்தின் தூண்டுதல்தான் அவர்களில் தீவிரவாத எண்ணம் கொண்டிருந்த சிலர் காந்தி இல்லாவிட்டால், இந்துக்களுக்கு எதிராக அரசுத் தலைமை செயல்படாது என்று எண்ணி, காந்தி கொலை நடைபெற்றது.

    காந்தி தன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் எது நியாயமோ அதனை, குடும்பத்தின் தலைவன் என்ற முறையில் செய்தார். ஆனால் அது இந்துத் தீவிரவாத எண்ணம் கொண்டிருந்தவர்களுக்கு ‘நியாயம்’ என்று தோன்றவில்லை.

    இந்தக் கருத்தைத்தான் நான் புத்தகங்களில் படித்திருக்கிறேன்.

    கோபால் கோட்ஸே விடுதலை அடைந்த பிறகும், தங்கள் செயல் தவறு என்று அவர் நினைக்கவில்லை. எப்படிக் கொலை செய்தார்கள் என்று அவர் சந்தோஷத்துடன் நடித்துக்காட்டிய காணொளியை யூடியூபில் சில வருடங்களுக்கு முன்பு பார்த்த ஞாபகம் இருக்கிறது.

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இப்போதான் நீங்கள் கடைசியாக சேர்த்த செய்தியையும் படத்தையும் இந்த இடுகையில் பார்த்தேன். அவளும், அவ டிரெஸும், அந்தக் கும்பலும். இவர்கள் உள்ளே ஆயுள் முழுவதும் இருப்பதற்கு முற்றிலும் தகுதியானவர்கள்.

  5. Sharron's avatar Sharron சொல்கிறார்:

    Heart breaking

  6. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …… ! // காந்தி கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக டெல்லி போலீசார் எச்சரித்திருந்தனர். அதனால், அவரை தங்களது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவும் முயன்றனர். ஆனால், இதை காந்தி மறுத்து விட்டார்.

    ‘பாதுகாப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு பாதுகாப்பு தேவையும் இல்லை. என்னை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவர முயன்றால், நான் டெல்லியை விட்டு வெளியேறி வேறெங்காவது சென்று விடுவேன்’ என காந்தி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.// என்று மகாத்மாவின் உதவியாளர் கல்யாணம் கூறியதும் — தங்களின் பின் குறிப்பில் ” ஒரு ஈனப்பிறவி ” மறைந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் அவரது உருவப்படத்தை வெறிதீர சுட்டு ஆசையை தீர்த்துக்கொள்வதாலும் தான் ” அவர் மஹாத்மா ” … !

    ‘பாதுகாப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு பாதுகாப்பு தேவையும் இல்லை. என்று கூறியவர் மஹாத்மா — சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் ஆனபின்னும் – ” ஏழடுக்கு பாதுகாப்புக்குள் ” இருக்கும் தலைவர்கள் … என்ன ஆத்மா ..?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.