குழந்தைகளுக்கு மூக்கடைப்பு நீங்க மிக சுலபமான ஒரு வழி…


ஒரு ஜப்பானிய வீடியோ பார்த்தேன்…
ஜப்பானில் சளி, மூக்கடைப்பால் மூச்சு விடத் திண்டாடும்
குழந்தைகளின் மூக்கில் அடைக்கும் சளியை நீக்கி உபாதையை
போக்க – மிக எளிய வழி ஒன்றை கையாள்கிறார்கள்….

மிகச்சுலபமாக, நம்ம ஊரில் கூட இதைச் செய்யலாம்… நமக்கு இதில் நம்பிக்கையும், தைரியமும் வரும் வரையில் மருத்துவ மனைகளில், செவிலியர்கள் மூலம் செய்யலாம்…

நீங்களே பாருங்களேன் – எவ்வளவு விரைவாக, எளிய வழியில்
நிவாரணம் கிடைக்கிறதென்று –
அவர்கள் அந்த ட்யூபில் பயன்படுத்துவது, ( just warm water )
-வெது வெதுப்பான நீர் மட்டுமே…!

.
——————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to குழந்தைகளுக்கு மூக்கடைப்பு நீங்க மிக சுலபமான ஒரு வழி…

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! இது நம் தமிழ் நாட்டில் இருந்ததுதான் ..” நசியம் ” செய்துக் காெள்ளல் என்பார்கள் ..அநேக சித்தர்களும் …வள்ளலாரும் இதை பற்றி கூறியிருக்கிறார்கள் ..45. நாட்களுக்கு ஒரு முறை நசியம் அதாவது மூக்கினுள் மூலிகை பாெடி … மற்றும் தைலம் ( திரவம் ) காெண்டு செய்து சளி ..மூக்கடைப்பு பாேன்ற பல பிரச்சனைகளை தீர்த்துக் காெள்ளலாம் என்றனர் …நாம் தான் மறந்து விட்டாேம் !

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! முக்கிய அதிகாரிகள் — நீதிபதிகள் என்று ராஜினாமா .. மற்றும் விலகல் என்பது இந்த பாஜக ஆட்சியில் சர்வ சாதாரணமாகி போனதற்கு என்ன தான் காரணம் ..?
    // புள்ளியியல் அதிகாரிகள் ராஜினாமா: அமைச்சகம் விளக்கம்! // https://www.minnambalam.com/k/2019/01/31/37 ….

    // சிபிஐ இடைக்கால இயக்குநர்: மூன்றாவது நீதிபதி விலகல்! // https://www.minnambalam.com/k/2019/01/31/40

  3. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    /// அதிமுக கூட்டணி: மோடி மேடையில் அறிவிப்பு? ///

    https://www.minnambalam.com/k/2019/01/31/90

    என்ன எதிர் கட்சிகளின் வெற்றி உறுதிபடுத்தப்பட்டதாக தெறிகிறது. அப்படித்தானே?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      இந்த செய்தியே நம்புதற்குரியது அல்ல…
      வெறுமனே வதந்தியை கிளப்புகிறார்கள்…. அவ்வளவே.

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        அதிமுக 20 தொகுதி, பாஜக 10 தொகுதி, பாமக 5 தொகுதி….. கட்டுரையாளர், திமுகவிடம் பணம் வாங்கிக்கொண்டு எழுதினமாதிரி எனக்குத் தோன்றுகிறது (இப்போதான் தளத்தில் திமுக சார்பாக அவர்கள் கொடுப்பதை-அவர்களது ஏஜெண்ட் கொடுப்பதை எழுதினால் 200 ரூபாய் என்ற ஆஃபர் ஓடிக்கொண்டிருக்கிறதாமே).

        இந்தக் கூட்டணி நடக்கக்கூடாது. தேவையில்லாமல் மோடி அவர்களுக்கு தமிழகத்தில் காவடி தூக்க அதிமுகவுக்குத் தேவையில்லை. 5 வருடங்களில் தமிழகத்துக்கு என்று மோடி அவர்கள் என்ன செய்தார்? (பிரச்சனைகள் வந்தபோது என்ன செய்தார் என்பதுதான் முக்கியம். சும்மா இதைத் திறந்தார் அதைத் திறந்தார் என்று யாரும் சொல்லவர வேண்டாம். காவிரி பிரச்சனை, மேகதாது அணைப் பிரச்சனை, முல்லைப் பெரியார் பிரச்சனை, மீனவர்கள் பிரச்சனை, அப்புறம் தமிழகம் இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டபோது என்ன செய்தார்? எனக்குத் தெரிந்து அவர் செய்த ஒரே செயல், கருணாநிதிக்கு பாரதரத்னா கோரிக்கை வந்தபோது குழு அமைக்கப்படும் என்ற நியூஸைப் பரவவிட்டார்). பாஜகவினால் தமிழகம் எந்தப் பயனும் பெறவில்லை.

        பாஜக உடன் கூட்டணி வைத்தால் அதனால் தமிழகம் என்ன பயன் பெறும்? பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களில் என்ன பயன் விளைந்தது? கூட்டணியில் இருந்தவங்க துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடியதுதான் நடந்தது. அதிமுக அப்படிக் கூட்டணி வைத்தால் என் வாக்கு நோட்டாவுக்கே.

      • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

        அப்பாடா! உண்மையில் நிம்மதியாக இருக்கு.

        இறைவா! அப்படியே வதந்தியாகவே இருந்துவிட அருள் புரிய வேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.