…
…
9 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரில்
பெரும்பாலானோர், அரசின் பல்வேறு நடவடிக்கைகள், அழுத்தம் காரணமாக –
போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பி விட்டனர்…
போராட்டத்தை தீவிரப்படுத்த முயன்ற அரசியல் பின்னணி கொண்ட சில தலைவர்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு
வெற்றி பெற்றது. …
நேற்று வரை, தீவிரமாக போராட்டத்தை ஆதரித்து வந்த பொறுப்பான நாளைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் –

…
இன்று காலை – ஏற்கெனவே போராட்டம் கைவிடப்பட்டு விட்டது
என்று தெரிந்த பிறகு – ஒன்பது நாட்களுக்குப் பிறகு, திடீரென்று மாணவர் மற்றும் மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு விடுத்துள்ள அறிக்கை கீழே –
…

.
————————————————————————————————————–



இது திமுக தூண்டிவிட்ட போராட்டம். அது வேறு வழியில்லாமல் முடிகிறது என்றவுடன் ஸ்டாலின் முந்திக்கொண்டு அறிக்கை விட்டிருக்கிறார். இந்தக் கோரிக்கைகளெல்லாவற்றையும் அவர் முதல்வராக வந்தவுடன், திமுக வைத்துள்ள 40,000 கோடியிலிருந்து அல்ல, அரசு கஜானாவிலிருந்து எடுத்துத் தருவாராம். நாடு உருப்பட்டுவிடும்.
“நாளைய முதல்வர் – ??? ” – There are many a slip between the cup and the lip.
நான் எந்த கட்சியையோ தலைவரையோ ஆதரிப்பவனல்ல.
ஆனாலும், மத்தியிலும் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படனும் என்று விரும்புகிறேன்.
மத்தியில் பாஜக ஆட்சியின் அவலத்தை அதிகம் பேசியுள்ளோம்.
இங்கு தமிழக ஆட்சி நிச்சயம் போகவேண்டிய ஆட்சியென்றே கருதுகிறேன். திமுக ஊழல் நாடறிந்தது தான். போலவே இந்த ஆட்சி…? அதற்கு சற்றும் சலைத்ததல்ல என்ற நிலை தானே இன்றுள்ள நிலைமை.
இந்த ஆட்சி அடுத்த முறையும் வந்தால் மக்கள் இந்த அவலப் போக்கை ஆதரித்ததாக கருதி இன்னும் படு மோசமாக தமிழகம் நாசமாகும் சூழல் தான் ஏற்படும்.
ஆக, ஜனநாயக முறைபடி ஆட்சி மாறி மாறி வந்தாலாவது இவர்களை எதோ ஒரு வகையிலாவது கட்டுப்படுத்துவதாக அமையும்.
அது யாராக இருக்கலாம்?
நிச்சயம் நடிகர்கள் வேண்டாம் என்றே சொல்ல தோன்றுகிறது.
I agree with you Mr.Arivalagu.
அதே சமயம் கொள்ளைக் கும்பல்களால் நிரம்பிய திமுகவும் நிச்சயம்ஆட்சிக்கு வரக்கூடாது. உ-ம் – துரை..கன், பொன்..டி, அ.வ.வே.., ஜெகத்…சகன், நே…,ஆ.ரா..டி.ஆர். …லு, போதும் நிரம்ப பார்த்தாகி விட்டது.
இவர்கள் ஆட்சியும் இல்லாத வேறு எதாவது வரட்டும்.
அரவிந்தன்,
நான் ஏற்கிறேன். வேறு யாராவது வரட்டும்.
யார்…?
நம் தலைவிதி என்னவென்று பார்ப்போம்.
// அரசு ஊழியர்களிடம் பகைமைப் பாராட்டும் ஆட்சிக்கு ஒரு சில வாரங்களில் முடிவு: கருணாநிதி // 12 Feb 2016
அன்று ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கலைஞர் விட்ட அறிக்கை இது — இதில் முக்கியமாக இந்த அரசு ஊழியர்கள் பள்ளி தேர்வு காலங்களிலும் ஏதாவது ஒரு தேர்தல் நெருங்கும் வேளையிலும் இது போன்ற போராட்டங்களை முன்னெடுப்பது வாடிக்கையான ஒன்று என்பதற்கு கருணாநிதியின் இந்த அறிக்கையில் வரும் வாசகங்களே சாட்சி .. அவை : // கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகச் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடக்கவிருக்கிறது. அதற்கிடையே தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துக் கடைசியாகப் பொங்கியெழுந்து இந்த அரசுக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தியிருக்கிறார்கள்.// என்றும் …
// அரசு அலுவலர்கள் -ஆசிரியர்களுக்கும், அதிமுக அரசுக்கும் ஏழாம் பொருத்தம் என்பார்களே, அது போல ஒரு பொருத்தம் உண்டு. அதிமுக அரசு எப்போது அமைந்தாலும், அரசு அலுவலர்களிடம் எப்படிப்பட்ட பாசத்தைக் காட்டுவார்கள்; அவர்களை எப்படி நடத்துவார்கள்; அவர்களுடைய கோரிக்கைகளை எத்தகைய பரிவோடு கேட்பார்கள்; என்பதற்கு ஏராளமான முன்னுதாரணங்கள் உண்டு.
அதிமுக ஆட்சியின் சர்வாதிகார – பழி வாங்கும் அணுகு முறையை எண்ணிப் பார்த்து, போராட்டத்தில் ஈடுபட்டிருப்போர் அனைவரும் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, பணிக்குத் திரும்பி மக்கள் நலனுக்கான பணியைத் தொடர்ந்து ஆற்றுவதுதான், அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் நல்லது; காலம் கனியும், காரியம் கை கூடும், காத்திருப்பீர்! என்ற கருத்தை இந்த நேரத்தில் தெரிவிப்பது என்னுடைய கடமை” என கருணாநிதி தெரிவித்துள்ளார்…// இதை அப்படியே எடுத்து பேச வாரிசுக்கு இது சிரமம் …? நல்ல நைனா .. ? நல்ல ஆசான் ..?
// இங்கிட்டு பாஜக-க்கு நன்கொடை, அங்கிட்டு SBI வங்கியை ஏமாற்றி ரூ.11500 கோடி சுருட்டிய தனியார் நிறுவனம்? //
Read more at: https://tamil.goodreturns.in/news/2019/01/31/dhfl-bought-50000-crore-loan-from-indian-government-banks-fraud-exposed-by-cobrapost-013319.html இது ஒரு செய்தி
அடுத்து ஒரு செய்தி ….: // இந்தியா பாஜக செய்த சாதனைகளை தொட பிற கட்சிகளுக்கு 25 ஆண்டுகளாகும்…. பிரதமர் மோடி பேச்சு
Read more at: https://tamil.oneindia.com/news/india/25-years-other-parties-to-touch-bjp-achievements-says-pm-modi-340079.html — இந்த இரண்டையும் தொடர்பு படுத்தி யாரும் குழம்பி –குழப்பிக் கொள்ளாதீர்கள் …!!!
செல்வராஜன்,
நீங்கள் கொடுத்துள்ள செய்திகளை இணைத்துப் பார்த்தால் வருவது –
————————————
Dewan Housing Finance Ltd (DHFL), இந்த நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கிகளிடம் கடன் வாங்கி அல்வா கிண்டி இருக்கிறது….
இந்த நிறுவனம், பாஜகவுக்கு போலி நிறுவனங்கள் மூலம் சுமார் 19.5 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கிறது…..
குஜராத், சூரத் நகரில் – பிரதமர் மோடி பேச்சு -பாஜக செய்த சாதனைகளை தொட பிற கட்சிகளுக்கு 25 ஆண்டுகளாகும்….
—————————————
மிக நன்றாக பொருந்துகிறதே…
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நான் துண்ணமாட்டேன். மற்றவர்கள் துண்ணால் அதில் கொஞ்சமே கொஞ்சம்…
என்ன தவறு….!?